Advertisment

Tamil News Highlights: மும்பையில் புதிய வகை கொரோனா இல்லை: மத்திய அரசு

Tamil Nadu News, Tamil News Updates, IPL 2022 Latest News 6 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: மும்பையில் புதிய வகை கொரோனா இல்லை: மத்திய அரசு

Tamil Nadu News Updates: பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85க்கு விற்பனை. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.100.94க்கு விற்பனை.

Advertisment

இலங்கையில் அவசரநிலை வாபஸ் - கோட்டாபய ராஜபக்சே

இலங்கையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த அவசரநிலை வாபஸ் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம். கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்துள்ளது

மானியக் கோரிக்கைகள் மீது இன்று முதல் விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மே 10 ஆம் தேதி முதல் 22 நாள்கள் நடைபெறவுள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரலை

ஐபிஎல் அப்டேட்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி. தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:39 (IST) 06 Apr 2022
    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு - நேரம் அதிகரிப்பு

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வு எழுத 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. முன்னர் இது 3 மணி நேரமாக இருந்தது. மொத்தம் 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற வகையில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது


  • 21:03 (IST) 06 Apr 2022
    புதின் குடும்பம் மற்றும் ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா

    உக்ரேனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் பற்றிய உலகளாவிய குற்றச்சாட்டுகளை அடுத்து, ரஷ்யாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரெம்ளின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து புதிய சுற்று தடைகளை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.

    ரஷ்யாவில் புதிய முதலீட்டை தடை செய்தல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வயது வந்த குழந்தைகள் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் குடும்ப உறுப்பினர்கள் முதலீடு செய்ய தடை வழங்குதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

    ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதின் உக்ரைனில் போக்கை மாற்றினால், பொருளாதாரத் தடைகள் மெதுவாகவும், தலைகீழாகவும் இருக்கலாம். (ராய்ட்டர்ஸ்)


  • 20:56 (IST) 06 Apr 2022
    முதல்வர் மு.க ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

    சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்


  • 20:35 (IST) 06 Apr 2022
    முதல்வர் மு.க ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

    சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்


  • 19:46 (IST) 06 Apr 2022
    மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – செந்தில்பாலாஜி

    தமிழத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய மாநிலத்தின் சொந்த உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்


  • 19:12 (IST) 06 Apr 2022
    பொங்கல் பரிசு வழக்கு; அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணிக்கு நோட்டீஸ்

    தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது


  • 18:26 (IST) 06 Apr 2022
    இந்தியாவில் புதிய கோவிட் திரிபு வைரஸ் XE முதல் தொற்று கண்டுபிடிப்பு

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் கஸ்தூர்பா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சமீபத்திய மரபணு ஆய்வு முறையில் ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை திரிபு வைரஸ் கண்டறியப்பட்டது.

    இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய திரிபு, கொரோனா வைரஸின் முந்தைய திரிபு வைரஸ்களைவிட அதிகமாக பரவக்கூடியதாகத் தோன்றுகிறது என்று கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு கூறியது. புதிய கோவிட் -19 திரிவு XE வைரஸின் முதல் தொற்று மும்பையில் புதன்கிழமை கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் கஸ்தூர்பா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சமீபத்திய மரபணு ஆய்வு முறையில் ஒமிக்ரான் வைரஸின் புதிய துணை திரிபு வைரஸ் கண்டறியப்பட்டது.

    XE தொற்று கண்டறியப்பட்ட நோயாளி பிப்ரவரி 10-ம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த 50 வயது பெண். இவர் முழு தடுப்பூசி போடப்பட்டவர். இவருக்கு தொற்று அறிகுறி இல்லை. இந்தியா வந்தவுடன் கோவிட் -19 தொற்று இல்லை என்று சோதனை செய்ததாக பிரஹன் மும்பை கார்ப்பரேஷன் தரவுகள் தெரிவிக்கின்றன.


  • 17:31 (IST) 06 Apr 2022
    CUET நுழைவுத்தேர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

    மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில்

    நீட் தேர்வைப் போன்றே மத்தியப் பல்கலைக் கழகங்களில் CUET தேர்வு நாடு முழுவதும் கற்றல் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், CUET தேர்வை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


  • 17:25 (IST) 06 Apr 2022
    நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திப்பு

    டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தனர்.


  • 17:23 (IST) 06 Apr 2022
    ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தல்

    ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளது.


  • 16:23 (IST) 06 Apr 2022
    காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது

    சென்னை, மணப்பாக்கத்தில் வாகன சோதனையில் இருந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோவால் மோதி விட்டு நிற்காமல் சென்ற விவகாரத்தில் போரூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  • 15:46 (IST) 06 Apr 2022
    ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை

    ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை உக்ரைன் அதிபர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம். நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா தயாராக உள்ளது என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.


  • 15:38 (IST) 06 Apr 2022
    மருந்து தட்டுப்பாடு : இலங்கையில் நோயாளிகள் அவதி

    இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை நிதி நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


  • 15:36 (IST) 06 Apr 2022
    மீனவ சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - திமுக எம்.பி., அப்துல்லா

    திரிபுராவில் உள்ள சில மீனவ சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா குறித்த விவாதத்தில் மாநிலங்களவையில் திமுக எம்.பி., அப்துல்லா பேசியுள்ளார்.


  • 15:11 (IST) 06 Apr 2022
    டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

    இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


  • 15:00 (IST) 06 Apr 2022
    இரட்டை இலை வழக்கு.. முக்கிய நபர் தற்கொலை!

    திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்துக்கு(31) இரட்டை இலை சின்னம் பெற முயன்ற வழக்கில் நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


  • 14:22 (IST) 06 Apr 2022
    முகேஷ் அம்பானி முதலிடம்!

    2022ஆம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.


  • 14:22 (IST) 06 Apr 2022
    ஓபிஎஸ் வலியுறுத்தல்!

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.


  • 14:04 (IST) 06 Apr 2022
    70 ஆயிரம் ஏக்கர் சீமை கருவேலமரங்கள் அகற்றம்!

    தமிழகத்தில் இதுவரை 70 ஆயிரத்து 116 ஏக்கர் பரப்பிலான சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.


  • 13:49 (IST) 06 Apr 2022
    கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு.. உக்ரைன் அரசு!

    உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு, கல்வியை முடிக்க உக்ரைன் அரசு ஓராண்டு தளர்வு வழங்கி உள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.


  • 13:12 (IST) 06 Apr 2022
    மாநில உரிமை நிலைநாட்டப்படும்.. துரைமுருகன்!

    மேகதாது அணை விவகாரத்தில், மாநில உரிமை நிலைநாட்டப்படும். சட்ட நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


  • 12:46 (IST) 06 Apr 2022
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்-அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்

    ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக சந்தித்தாகவும், நலமுடன் இருந்ததாகவும் மருத்துவர் நரசிம்மன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


  • 12:45 (IST) 06 Apr 2022
    எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு

    எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.


  • 12:31 (IST) 06 Apr 2022
    ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் ரூ.32 மத்திய அரசுக்கு செல்கிறது-அமைச்சர்

    ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விற்பனை விலையில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.32 செல்வதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.


  • 12:24 (IST) 06 Apr 2022
    சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்: ஈ.பி.எஸ் விமர்சனம்

    கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை. மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என ஈபிஎஸ் விமர்சனம் செய்தார்.


  • 12:22 (IST) 06 Apr 2022
    ஏழைகளை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு-முதல்வர் அறிவிப்பு

    ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது. கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .


  • 12:22 (IST) 06 Apr 2022
    ஏழைகளை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு-முதல்வர் அறிவிப்பு

    ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது. கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .


  • 12:16 (IST) 06 Apr 2022
    பூஜையுடன் தொடங்கியது நடிகர் விஜயின் 66ஆவது பட ஷூட்டிங்

    நடிகர் விஜயின் 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.


  • 11:59 (IST) 06 Apr 2022
    சத்தியமங்கலம்:இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

    சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.


  • 11:49 (IST) 06 Apr 2022
    12,100 பேருக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின்

    தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய்க்கு அரசு முறை பயணம் துபாய், அபுதாபி பயணத்தில் 14 ஒப்பந்தங்கள் மூலம் ₨6,100 கோடி முதலீடு ஈர்ப்பு; 12,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 11:33 (IST) 06 Apr 2022
    25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள்-முதல்வர் அறிவிப்பு

    25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள் செய்யப்படும் என்று சட்டப்பேரபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


  • 11:29 (IST) 06 Apr 2022
    சோளிங்கரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்-வேளாண் அமைச்சர்

    சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கல் கிராமத்தில் ₹94 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் முனிரத்தினம் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.


  • 11:16 (IST) 06 Apr 2022
    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருகிறது-பிரதமர் மோடி

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வலுப்பெற்று வருகிறது. பாஜக 42வது நிறுவன நாளையொட்டி, தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசும்போது இதனை தெரிவித்தார்.


  • 11:12 (IST) 06 Apr 2022
    ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்

    ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


  • 10:47 (IST) 06 Apr 2022
    டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே இடைத்தரகர் சுரேஷ் சந்திரசேகர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று டிடிவிக்கு சம்மன்


  • 10:36 (IST) 06 Apr 2022
    வேளாண்துறையில் காலி பணியிடங்களை நிரப்பப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    வேளாண்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.


  • 10:18 (IST) 06 Apr 2022
    ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி - வி.எச்.பி. பிரமுகர் கைது!

    சென்னையில் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ரூ1 கோடி மோசடியில் ஈடுபட்ட விஎச்பி பிரமுகர் தணிகைவேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


  • 10:18 (IST) 06 Apr 2022
    ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி - வி.எச்.பி. பிரமுகர் கைது!

    சென்னையில் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ரூ1 கோடி மோசடியில் ஈடுபட்ட விஎச்பி பிரமுகர் தணிகைவேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


  • 09:56 (IST) 06 Apr 2022
    தூத்துக்குடி அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

    இலங்கைக்கு பைபர் படகில் கடத்த முயன்ற ரூ10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முள்வேலி கடற்கரை பகுதியில் 12 கிலோ ஆயில் சிக்கிய நிலையில் படகை இயக்கியவர் தப்பியோட்டம்


  • 09:44 (IST) 06 Apr 2022
    தூத்துக்குடி அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

    இலங்கைக்கு பைபர் படகில் கடத்த முயன்ற ரூ10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முள்வேலி கடற்கரை பகுதியில் 12 கிலோ ஆயில் சிக்கிய நிலையில் படகை இயக்கியவர் தப்பியோட்டம்


  • 09:21 (IST) 06 Apr 2022
    12 நாள்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்

    மூலப்பொருள்களின் தொடர் விலையேற்றம் காரணமாக கோவில்பட்டியில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தி வைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு விற்கப்படும் லைட்டரை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • 09:17 (IST) 06 Apr 2022
    விலைவாசி உயர்வு - திமுக நோட்டீஸ்

    அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் குறித்து விவாதிக்க

    மக்களவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்தார்


  • 09:07 (IST) 06 Apr 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


  • 08:38 (IST) 06 Apr 2022
    உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

    திருக்குறளையடுத்து உலக மொழிகளில் மணிமேகலையை மொழிப்பெயர்ப்பு செய்ய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிங்களம், மலாய், பர்மீஸ் உள்பட 20 உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு பணி தொடங்கப்படவுள்ளது.


  • 08:18 (IST) 06 Apr 2022
    கோவையில் பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு

    கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், காவல்துறை நடவடிக்கை.


  • 08:07 (IST) 06 Apr 2022
    சேலத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை

    சேலம், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 அடி கொண்ட முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு. ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment