Tamil Nadu News Updates: ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு. அவருக்கு வயது 46.
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து
நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து. 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்பு. 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 39வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு பரவலாக மழை நீடிக்கும். நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
நான் மிரட்டுகிறேன் என்றார்கள், யார் மிரட்டினாலும் கமல் பயப்பட மாட்டார். கமல் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான். வருடத்திற்கு கமல் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள் என விக்ரம் பட விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
தமிழ் சினிமா முன் மாதிரியானது. அதில் 'விக்ரம்' முக்கிய இடம் பிடிக்கும். நடிகர் கமல்ஹாசனை வைத்து மதுரை சார்ந்த திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. மதுரையில் கோர்ட்சூட் அணிவதை மையமாக கொண்ட படம் இயக்க வேண்டும் என பா.ரஞ்சித், விக்ரம் பட விழாவில் கூறியுள்ளார்
திமுக ஆட்சியின் இலக்கணமே ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்பதுதான். மே 18ல் ஆத்தூரில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் வானிலை சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் எத்திசையும் முழங்கிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நெல்லை கல் குவாரி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தலா ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ரூ1 லட்சத்திற்கான காசோலையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்
நெல்லை கல் குவாரி விபத்தில் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கபட்ட செல்வன்(25) என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி. இத்தாலியில் முதன்முறையாக தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
உத்தரப் பிரதேசம் மாநிலம் பதோஹி அருகே கங்கை நதியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்கப்பட்டுள்ளார். 6 பேர் சிக்கிய நிலையில் இதுவரை 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்
குஜராத் அணிக்கு 134 ரன்களை சென்னை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 53 ரன்களும், ஜெகதீசன் 39 ரன்களும் எடுத்துள்ளனர்
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடைபெறும் என்றும், இளைஞர்கள் உட்பட அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் சிந்தனை அமர்வில் சோனியா காந்தி அறிவித்துள்ளார்
பிராந்தியங்களின் தொகுப்புதான் இந்தியா என அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு தனி நபருக்கோ, தனி கட்சிக்கோ சொந்தமான நாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி அனைவரின் கருத்துக்களையும் கேட்கும்.
மாவட்ட நிர்வாக அளவில் காங்கிரஸில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. நாடு சந்தித்து வரும் பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்
காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உதய்ப்பூரில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பேசியுள்ளார்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் 'பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை கேலி செய்யும் வகையிலும் பாடல் வரிகள் இருப்பதாக நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வரிகளை 2 நாட்களில் நீக்கி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோராவிடில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது
அதிமுக தொண்டர்கள் கோவிலாக பூஜித்த வேதா நிலையத்திற்கு பொன்விழா என்பதை அறிந்து என் மனம் பூரிப்படைகிறது. வேதா நிலையத்திற்கு பலமுறை செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளின் வரப்பிரசாதம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்
தேசிய கல்விக் கொள்கை நுழையாத வகையில் மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள் பதவி நிறைவு செய்தவர்களுக்கு மூன்றாண்டு கால அவகாசத்திற்கு பின் கட்சிப் பதவிகளில் வாய்ப்பு அளிக்க ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அரசியல் விவகாரக்குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட விவகாரத்தில், சைதாப்பேட்டை காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் நினைத்தால், அதானி, அம்பானி, எலான் மஸ்க்குடன் உணவு அருந்தியிருக்கலாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்வர் குழு நியமித்துள்ளார். புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்தியாவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் தேவசகாயம் பிள்ளை ஆவார்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வழிகாட்டுதல்கள் விதிக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2019 -2020 கால கட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் போட்டியிடும் 4 இடங்களில் 1 இடம் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10ம் தேதி 6 ராஜய சபா எம்.பி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் ஆளும் திமுக மற்றும அதன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், திமுக சார்பில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில், தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அறநிலையத்துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பரம்பரை அறங்காவலர் பி.ஆர்.சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 22 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட தேர் ஊர்வலம் வர எந்த இடையூறும் இல்லை. தேர் வலம் வரும் தெருக்களில் மின்சார கம்பிகள் உள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர் திருவிழா நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்குதருமபுரி அருகே தேர் திருவிழா நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு,அவசர வழக்காக இன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
1. பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 500 மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
2. ஒவ்வொரு பேருந்திலும் தற்போது 3 கேமராக்கள், 4 அவசர கால அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
3. பேருந்துகளில் மற்ற பயணிகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அவசர கால பொத்தானை அழுத்த வேண்டும்.
4. அவசர ஒலி ஏற்படும்போது நிலைமையைக் கண்காணித்து நடத்துநர் போலீஸுக்கு புகார் அளிக்க வேண்டும்.
5. புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையக கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள்வர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். மேலும், ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 13 பேர் உயிரிழப்பு. கொரோனா பாதித்த 2,878 பேர் குணமடைந்த நிலையில் 17,692 பேருக்கு சிகிச்சை என மத்திய சுகாதாரத்துறை தகவல்
பேருந்திலேயே நடத்துநர் அடித்துக் கொல்லப்படும் வகையில் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீரழிந்திருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம். உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு. ரவிச்சந்திரன் தாயார் கோரிக்கையை ஏற்று பரோலை மேலும் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி. தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வரும் ஜூலை 17ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு
நெல்லை கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.