Advertisment

Tamil News: பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - இன்று முதல் அமல்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News May 22 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - இன்று முதல் அமல்

Tamil Nadu News Updates: சென்னையில் பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கும், டீசல் விலை ரூ6.70 குறைந்து ரூ94.24க்கும் விற்பனையாகிறது. சுமார் 45 நாள்களுக்கு பிறகு விலையில் மாற்றம் வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைந்த நிலையில்,பல மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி. காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை

ஆறு பேரை விடுவிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் மேலும் ஆறு பேரை விடுவிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை. தலைமை செயலர், சட்ட வல்லுநர்கள் பங்கேற்பு

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஆர்சிபி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியுற்றதன் காரணமாக 4வது இடத்தை தக்கவைத்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 20:47 (IST) 22 May 2022
  ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

  பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள கத்ரிவாலா பகுதியில் 300 அடி ஆழ்துளையில் தவறி விழுந்த சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • 20:44 (IST) 22 May 2022
  டோக்கியோ புறப்பட்டார் பிரதமர் மோடி

  ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க தனி விமானம் மூலம் டோக்கியோ புறப்பட்டார் பிரதமர் மோடி • 19:36 (IST) 22 May 2022
  முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி

  கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். • 19:34 (IST) 22 May 2022
  ஆழ்துளையில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

  பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள கத்ரிவாலா பகுதியில் 300 அடி ஆழ்துளையில் தவறி விழுந்த சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார். • 17:59 (IST) 22 May 2022
  இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்ப்பு

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்க்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சாஹல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் • 17:49 (IST) 22 May 2022
  மதுவிருந்தில் இளைஞர் உயிரிழப்பு; தனியார் பாருக்கு போலீசார் சீல் வைப்பு

  சென்னை அண்ணா நகரில் மதுவிருந்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பிரபல மாலில் உள்ள தனியார் பாருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்குக் குறைவானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது • 17:31 (IST) 22 May 2022
  தமிழக அரசின் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைப்பு

  தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். • 17:01 (IST) 22 May 2022
  நெல்லை கல்குவாரி விபத்து; 6வது நபரின் உடலை மீட்கும் பணி தீவிரம்

  நெல்லை கல்குவாரி விபத்தில், பாறை இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆறாவது நபரின் உடல் கண்டறியப்பட்ட நிலையில், 6வது நபரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது • 16:42 (IST) 22 May 2022
  மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

  பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார் • 16:33 (IST) 22 May 2022
  சட்ட விரோதமாக மது விருந்து – சென்னை காவல்துறை எச்சரிக்கை

  சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான கூடங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார் • 16:19 (IST) 22 May 2022
  ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; மீட்பு பணி தீவிரம்

  பஞ்சாப் மாநிலம் கர்திவாலா அருகே வயலில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவனை நாய்கள் துரத்தியதால், 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். அந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது • 15:55 (IST) 22 May 2022
  MCA, MBA படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

  3 ஆண்டு MCA படிப்புக்கு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ1,94,100 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ85,000, அதிகபட்சமாக ரூ1,95,200 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது • 15:53 (IST) 22 May 2022
  டிப்ளமோ படிப்பதற்கான கட்டணம் உயர்வு

  பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ67,900 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது • 15:50 (IST) 22 May 2022
  பேராசிரியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு

  கல்லூரி பேராசிரியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக AICTE தெரிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,37,189 ஆகவும், பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக AICTE தெரிவித்துள்ளது • 15:49 (IST) 22 May 2022
  பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

  நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech, B.Arch. போன்ற பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600ஆகவும், அதிகபட்ச கட்டணம் ₨1,89,800ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என AICTE அறிவித்துள்ளது • 15:49 (IST) 22 May 2022
  பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

  நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech, B.Arch. போன்ற பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600ஆகவும், அதிகபட்ச கட்டணம் ₨1,89,800ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என AICTE அறிவித்துள்ளது • 15:32 (IST) 22 May 2022
  ஜப்பான் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானில் நாளை நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ளார் • 15:14 (IST) 22 May 2022
  கடலூர் எண்ணெய் தொழிற்சாலையில் கொள்ளை

  கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தொடங்கப்படாத எண்ணெய் தொழிற்சாலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை தூக்கி சென்றனர். இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் தொழிற்சாலையை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் • 14:50 (IST) 22 May 2022
  ஜப்பானில் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

  ஜப்பானில் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை ஜப்பான் செல்லவுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • 13:58 (IST) 22 May 2022
  குரூப் 2, 2ஏ தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் - டி.என்.பி.எஸ்.சி

  தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை; தற்காலிக விடைக்குறிப்பு 5 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும்; விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. • 13:31 (IST) 22 May 2022
  பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - அண்ணாமலை

  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: “பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.” என்று தெரிவித்தார். • 12:44 (IST) 22 May 2022
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி; அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 50 பேர் கைது

  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் ஊர்வலம் சென்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. • 12:10 (IST) 22 May 2022
  தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய மு.க ஸ்டாலின்

  நீலகிரி, உதகையில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். தோடர் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த, முதல்வர் மு.க. ஸ்டாலின், தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடினார். • 11:58 (IST) 22 May 2022
  வாட் வரியை திமுக அரசு குறைக்க வேண்டும்: ஓபிஎஸ்

  பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்து திமுக அரசு மக்கள் நலன் காக்க வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகங்களின் இழப்பீட்டை குறைக்கும் வகையில் வாட் வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். • 11:34 (IST) 22 May 2022
  செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சு தகவல்

  தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க நடவடிக்கை. தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4,848 செவிலியர்களுக்கு ரூ18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் • 11:18 (IST) 22 May 2022
  சென்னை மாலில் மது விருந்து - இளைஞர் உயிரிழப்பு

  சென்னை, அண்ணாநகரில் உள்ள மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் உயிரிழப்பு. பிரபல டிஜே மந்த்ரா கோரா பங்கேற்ற இசை நிகழ்ச்சியுடன் 1000 பேருக்கு நடத்தப்பட்ட மது விருந்தில் சிலர் மயங்கி விழுந்ததாக தகவல். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு. த்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு • 11:18 (IST) 22 May 2022
  சென்னை மாலில் மது விருந்து - இளைஞர் உயிரிழப்பு

  சென்னை, அண்ணாநகரில் உள்ள மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு. மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு. பிரபல டிஜே மந்த்ரா கோரா பங்கேற்ற இசை நிகழ்ச்சியுடன் 1000 பேருக்கு நடத்தப்பட்ட மது விருந்தில் சிலர் மயங்கி விழுந்ததாக தகவல். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு. த்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு • 11:18 (IST) 22 May 2022
  சென்னை மாலில் மது விருந்து - இளைஞர் உயிரிழப்பு

  சென்னை, அண்ணாநகரில் உள்ள மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு. மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்க சென்னை, அண்ணாநகரில் உள்ள மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு. மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு. பிரபல டிஜே மந்த்ரா கோரா பங்கேற்ற இசை நிகழ்ச்சியுடன் 1000 பேருக்கு நடத்தப்பட்ட மது விருந்தில் சிலர் மயங்கி விழுந்ததாக தகவல். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு. த்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு • 11:16 (IST) 22 May 2022
  சென்னை மாலில் மது விருந்து - இளைஞர் உயிரிழப்பு

  சென்னை, அண்ணாநகரில் உள்ள மாலில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் உயிரிழப்பு. பிரபல டிஜே மந்த்ரா கோரா பங்கேற்ற இசை நிகழ்ச்சியுடன் 1000 பேருக்கு நடத்தப்பட்ட மது விருந்தில் சிலர் மயங்கி விழுந்ததாக தகவல். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு. த்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழப்பு • 11:03 (IST) 22 May 2022
  தேசிய கொடியுடன் சைக்கிளில் பேரணி - ஆர்எஸ்எஸ், பாஜகவினர் கைது

  75வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடியுடன் சைக்கிளில் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுப்பு. விருதுநகர்- மதுரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் கைது • 10:20 (IST) 22 May 2022
  இந்தியாவில் மேலும் 2,226 பேருக்கு கொரோனா

  இந்தியாவில் மேலும் 2,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு . கொரோனா பாதித்த 2,202 பேர் குணமடைந்த நிலையில் 14,955 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. • 10:00 (IST) 22 May 2022
  சீமான் வீட்டில் மின் தடை விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

  சீமான் வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக கூறியிருந்தார். அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து 2 முறை கேட்டும் இதுவரை பதில் இல்லை. மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். • 09:43 (IST) 22 May 2022
  ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

  நூல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 15 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்! • 09:24 (IST) 22 May 2022
  இங்கிலாந்தில் ரத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

  இங்கிலாந்தின் சில பகுதிகளில் இந்த வாரம் ரத்த மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல். ரத்த மழை என்பது அதிகளவில் சிவப்பு நிற தூசு, மழை நீருடன் கலந்து பெய்வது என கூறப்படுகிறது. • 09:03 (IST) 22 May 2022
  கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்... வெப்ப பரிசோதனை செய்யவும் உத்தரவு

  கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு • 08:49 (IST) 22 May 2022
  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

  தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம். இதனால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு • 08:32 (IST) 22 May 2022
  தேனி வைகை அணையில் தண்ணீர் திறக்க பரிந்துரை

  தேனி வைகை அணையில் இருந்து ஜூன் 2 முதல் தண்ணீர் திறக்க பரிந்துரை. பாசனத்திற்காக திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் பரிந்துரை • 08:14 (IST) 22 May 2022
  மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

  நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளப்பெருக்கு காரணமாக 3 நாட்களாக குளிக்க தடை விதித்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி • 08:05 (IST) 22 May 2022
  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

  தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம். இதனால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு • 07:54 (IST) 22 May 2022
  செஸ் வரியை குறைக்காமல்கலால் வரியை மட்டும் குறைப்பது ஏன்? - ப.சிதம்பரம்

  பெட்ரோல் விலையை 2 மாதங்களில் 10 ரூபாய் உயர்த்திவிட்டு, ரூ9.50 மட்டும் குறைப்பதா. செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய கலால் வரியை மட்டும் குறைப்பது ஏன் என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். • 07:53 (IST) 22 May 2022
  இதுதான் கூட்டாட்சியா?: பழனிவேல் தியாகராஜன்

  எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. தற்போது, உயர்த்தி விலையை குறைக்கச் சொல்லி மாநிலங்களிடம் கேட்பது தான் கூட்டாட்சியா? 2014 முதல் பெட்ரோல் ரூ23, டீசல் ரூ29 என மத்திய அரசு தனது வரியை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தியதில் இருந்து 50சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.Tamil Nadu Petrol Diesel Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment