Tamil News Highlights: இன்று 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.69 கோடியைக் கடந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.19 கோடியைத் தாண்டியது.இதுவரை 51.54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:11 (IST) 20 Nov 2021
24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

9:51 (IST) 20 Nov 2021
ராஜஸ்தானில் அமைச்சரவை ராஜினாமா

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. புதிய அமைச்சரவை உருவாக்கம் காரணமாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது

8:30 (IST) 20 Nov 2021
பாலாற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் – வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று இரவு நீர்வரத்து அதிகமாக இருக்கும், எனவே, தாழ்வான பகுதிகளில் இருக்கக் கூடிய பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு செல்லுங்கள் என வேலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

7:16 (IST) 20 Nov 2021
முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்; மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனை

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது

6:47 (IST) 20 Nov 2021
தோனி மஞ்சள் தமிழர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர் என்றும், இந்த விழாவிற்கு முதல்வராக வரவில்லை… தோனியின் ரசிகராக வந்துள்ளேன் என்றும், சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

6:18 (IST) 20 Nov 2021
எனக்கு மிகவும் நெருக்கமான இடம் சென்னை தான் – முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெகிழ்ச்சி

உலகில் எத்தனையோ இடங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும், எனக்கு மிகவும் நெருக்கமான இடம் சென்னை தான் என சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

5:55 (IST) 20 Nov 2021
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் வெற்றி விழாவில் முதல்வர் பங்கேற்பு!

ஐபில் கிரிக்கெட் போட்டியில் 14வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாகக் கோப்பையை கைப்பற்றியது. இதன் வெற்றிவிழா சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியின் கேப்டன் டோனி உள்பட கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

5:38 (IST) 20 Nov 2021
போதைப் பொருள் வழக்கில் ஆர்யன்கானுக்கு எந்த தொடர்பும் இல்லை: மும்மை உயர் நீதிமன்றம்!

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனிடையே ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து நீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் பொதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், ஆர்யன்கான் வாட்ஸ் ஆப் உரையாடல்களில் சந்தேகத்திற்கிடமான தகவல் இல்லை. கப்பலில் பயணம் செய்த ஒரே காரணத்திற்காக மட்டும், ஆர்யன்கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு படுத்த முடியாது என நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

5:23 (IST) 20 Nov 2021
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம். கதிரேசன் இன்று நியமிக்கப்பட்டார். இதற்கான நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, கதிரேசனிடம் வழங்கினார். இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4:52 (IST) 20 Nov 2021
‘இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை’ – இபிஎஸ்க்கு கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

4:43 (IST) 20 Nov 2021
பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்

கரூர் மாணவி தற்கொலை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

4:31 (IST) 20 Nov 2021
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் – விவசாயிகள் அமைப்புகள்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், திட்டப்படி வரும் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடைபெறும் எனவும் அந்த அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக நேற்று பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றி உரையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

4:16 (IST) 20 Nov 2021
தமிழகத்தில் 10 புதிய கலை – அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி, சேர்க்காடு, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் 10 புதிய கலை – அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

4:05 (IST) 20 Nov 2021
கரூர் மாணவி தற்கொலை: இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க உறுதி ஏற்கவேண்டும் – கனிமொழி டுவீட்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக எம்.பி., டுவிட்டர் பதிவில், பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும், எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

3:52 (IST) 20 Nov 2021
குவஹாத்தியில் நிலநடுக்கம் – 4.1 ரிக்டர் அளவில் பதிவு!

அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

3:41 (IST) 20 Nov 2021
சுரபி கல்லூரிக்கு தற்காலிகமாக சீல் வைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகே உள்ள சுரபி கல்லூரியின் தாளாளர் மீதான பாலியல் புகாரில் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமார் தலைமையிலான குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

3:40 (IST) 20 Nov 2021
தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லை – பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆவேச பேச்சு

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு பாமகவினர் விலை போனதால் தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது; இனி கட்சி நடத்துவதில் அர்த்தம் இல்லை என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம் அடைந்துள்ளார்.

3:36 (IST) 20 Nov 2021
‘அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்’ – அமெரிக்க தூதரகம் அறிக்கை!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருவதால், அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

3:29 (IST) 20 Nov 2021
3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3:16 (IST) 20 Nov 2021
ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள்: 5வது முறையாக தூய்மையான நகரம் விருதை தட்டிச் சென்ற இந்தூர்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2021ம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளை வாங்கி வருகிறார். இதில் தொடர்ந்து 5வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றது.

2:59 (IST) 20 Nov 2021
மார்ச் 31-ல் வெளியாகும் கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’

'மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் விக்ரம் படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி உலகம் முழுதும் தியேட்டர்களில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளன.

2:46 (IST) 20 Nov 2021
ஆந்திரா வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு; நூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:30 (IST) 20 Nov 2021
சி.எஸ்.கே.பாராட்டு விழாவில் பங்கேற்க எம்.எஸ்.டோனி சென்னை வந்தடைந்தார்!

ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த விழா மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், பாராட்டு விழாவில் பங்கேற்க எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தார்.

2:25 (IST) 20 Nov 2021
விவசாயிகளுக்கு 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – வருண் காந்தி!

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி., வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

1:47 (IST) 20 Nov 2021
சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்

கருங்கல்பாளையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமான், கொளத்தூர் மணி மணியரசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார்.

1:22 (IST) 20 Nov 2021
இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இன்று 267 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று 11787 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

1:14 (IST) 20 Nov 2021
சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா

ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த விழா மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

1:09 (IST) 20 Nov 2021
பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி., வருண் காந்தி கடிதம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி., வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

12:53 (IST) 20 Nov 2021
சென்னை மணலி பகுதியில் முதல்வர் ஆய்வு

சென்னை, மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து செய்தபோது தெருக்களில் நடந்து சென்று பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்

12:51 (IST) 20 Nov 2021
சென்னையி்ல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது

11:48 (IST) 20 Nov 2021
அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்து்ககள் – கமல்ஹாசன்

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் வேளாண் விரோத சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமை கொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என்று கூறியுள்ளார்

11:47 (IST) 20 Nov 2021
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் – விஜயகாந்த்

தமிழகத்தில் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரடித்தேர்வு நடத்த 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கினாலும் அதற்குள் மாணவர்கள் தயாராவார்களா என்பது கேள்விக்குறியே என கூறியுள்ளார்.

11:43 (IST) 20 Nov 2021
தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் – இபிஎஸ்

தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான முடிவை அரசு கைவிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்

11:01 (IST) 20 Nov 2021
தடய மரபணு தேடல் செயலி அறிமுகம்

தடய அறிவியல் துறையில் உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் செயலியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

10:39 (IST) 20 Nov 2021
புதிய கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்

10:14 (IST) 20 Nov 2021
தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 36 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 7 குறைந்து 4,622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:04 (IST) 20 Nov 2021
கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 267 பேர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்து 787 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

9:44 (IST) 20 Nov 2021
அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9:34 (IST) 20 Nov 2021
வடதமிழகத்தில் கனமழை தொடரும்

சென்னைக்கு அருகே வட தமிழகத்தில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுக் குறைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பரவலாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8:27 (IST) 20 Nov 2021
ராஜஸ்தானில் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

7:44 (IST) 20 Nov 2021
சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா

ஐபிஎல் போட்டியின் 14-வது சீசனில் கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

Web Title: Tamil news today petrol price corona count india t20 series win live updates

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com