/tamil-ie/media/media_files/uploads/2021/11/rain-2-3.jpg)
உருவாகிறது புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி
வளிமண்டல மேலடுக்கும் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம். அதே போல், வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தென் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 19-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இருளர் போலவே தவிக்கும் காடர் பழங்குடியினர் - போராடும் மக்கள்
கொரோனா அப்டேட்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.83 கோடியைக் கடந்துள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 23.37 கோடியைத் தாண்டியது.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:03 (IST) 23 Nov 2021தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க புதிய மசோதா
வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதா அறிமுகமாகிறது. அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிக்கான புதிய கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்க உள்ளது.
- 20:04 (IST) 23 Nov 2021கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை
கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.85-100 வரை விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக கொள்முதல் அளவு உயர்த்தப்படும் என்று கூறினார்.
- 19:59 (IST) 23 Nov 2021பருவமழை தீவிரமடையும் என எச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை
பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
- 19:57 (IST) 23 Nov 2021எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் இரங்கல்
சேலம் மாவட்டம், தாதகாபட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
- 19:19 (IST) 23 Nov 2021சாதி வேறுபாடுகள் இல்லா மயானங்கள் கொண்ட கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் - அரசாணை வெளியீடு
சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அறிவிப்பை செயல்படுத்த 11.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 18:49 (IST) 23 Nov 2021ஆங்கில மருத்துவம் பார்த்த ஹோமியோபதி மருத்துவர் தப்பி ஓட்டம்
ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த அதிமுக தர்மபுரி மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே சான்றிதழை எடுத்துவருவதாக கிருஷ்ணசாமி மருத்துவர் தப்பியோடிய நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 18:10 (IST) 23 Nov 2021உயர்நீதிமன்றம் மதுரைகிளை நீதிபதிகள் வேதனை
உயர்நீதிமன்ற வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? என்று உயர்நீதிமன்றம் மதுரைகிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- 17:41 (IST) 23 Nov 2021வாளையார் மனோஜ்க்கு நிபந்தனை ஜாமீன்
கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
- 17:20 (IST) 23 Nov 2021தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு: தகவல் கொடுத்தால் பரிசு!
2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி தரப்படும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
- 17:10 (IST) 23 Nov 2021கமல்ஹாசனுக்கு கொரோனா: நலம் விசாரித்த ரஜினி!
நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியபோது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசனிடம் நலம் விசாரித்தார்.
- 16:44 (IST) 23 Nov 2021நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகல்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, டெஸ்ட் தொடர் கான்பூரில் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் விளையாடுவார் என்றும் கூறியுள்ளது.
- 16:30 (IST) 23 Nov 2021மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடி வழங்கிய மத்திய அரசு: தமிழகத்துக்கு ரூ. 3,878 கோடி பகிர்வு!
உள்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட மாநிலங்களின் மூலதனச் செலவீனங்களுக்கு, ஏதுவாக அவற்றின் வரி பங்காக ரூ.95,082 கோடியை மத்திய அரசு விடுவிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். வரிப் பகிர்வின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய தவணைத் தொகையான ரூ. 47,541 கோடியுடன் மேலும் ஒரு தவணை சோ்த்து ரூ. 95,082 கோடி விடுவிக்கப்படும். முன்கூட்டியே வழங்கப்படும் இந்த தவணை வரும் மார்ச் மாதத்தில் சரிகட்டப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி இன்று ரூ.95,082 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுத்தது. அதில் தமிழகத்திற்கு ரூ. 3, 878 கோடி ரூபாய் பகிர்வு தொகை விடுக்கப்பட்டுள்ளது.
- 15:26 (IST) 23 Nov 2021தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தக்காளி பதுக்கலை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- 15:24 (IST) 23 Nov 2021பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
என்ன மாதிரியான விசாரணை முறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 14:56 (IST) 23 Nov 2021ராம்குமார் வழக்கில் புதிய திருப்பம்
ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் திடீரென மரணம் அடைந்தது சர்ச்சையானது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராம்குமார் உயிரிழந்ததாக அரசு மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது அவர் சிறையிலேயே இறந்து விட்டார் என சிறைத்துறை மருத்துவரின் சான்று ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:19 (IST) 23 Nov 2021சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு
சேலம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சிலிண்டர் வெடித்து வீடுகள் தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
- 13:28 (IST) 23 Nov 2021காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்
- 13:21 (IST) 23 Nov 2021விரைவில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் ' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
விரைவில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 13:20 (IST) 23 Nov 2021பொள்ளாச்சியில் தென்னை நார் பதப்படுத்தும் குழுமம்
பொள்ளாச்சியில் தென்னை நார் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
- 13:19 (IST) 23 Nov 2021தமிழகத்தில் 64% அதிக மழைப்பொழிவு – புவியரசன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 64% கூடுதலாக பதிவாகியுள்ளது. சென்னையில் மழைப்பொழிவு இயல்பை விட 66% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்
- 13:07 (IST) 23 Nov 2021கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா
கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது பெருமைக்குரியது. வேளாண்மை, கோழிப்பண்ணை, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ள பெருமை கொண்ட மாவட்டம் கோவை. இத்தகைய கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும். வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும். மேலும் மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
- 12:55 (IST) 23 Nov 2021கொரோனா காலத்தில் கூட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம்- முதலமைச்சர் ஸ்டாலின்
ஒப்பந்தம் கையெழுத்து போடும் நிகழ்ச்சியாக மட்டுமே இந்த மாநாடு நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம். கொரோனா போன்ற சோதனையான காலத்தில் கூட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் சாதித்ததாக சிலர் பேசினார்கள். முன்களப் பணியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
- 12:44 (IST) 23 Nov 2021ஆளுநர் ரவியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார்
- 12:44 (IST) 23 Nov 2021ஆளுநர் ரவியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார்
- 12:39 (IST) 23 Nov 2021ஜெய் பீம் திரைப்படத்திற்கு எதிராக வன்னியர் சங்கம் வழக்கு
சூர்யா தயாரித்து நடித்துள்ள, ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தை வெளியிட்ட ஒடிடி தளமான அமேசானுக்கு எதிராக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- 12:25 (IST) 23 Nov 2021தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை
நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 12:19 (IST) 23 Nov 2021தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 11:52 (IST) 23 Nov 2021தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட்டது. மறைந்த வீரர் பழனி சார்பாக அவரது மனைவி, குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக்கொண்டார்
- 11:44 (IST) 23 Nov 2021கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது – உச்சநீதிமன்றம்
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வரம்பில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
- 11:41 (IST) 23 Nov 2021ஜெயலலிதா மரணம்; இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க தயார் - தமிழக அரசு தகவல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க தயார் என ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய அப்பலோ மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி, நீதிபதி சி.டி.செல்வம் ஆகியோரை கொண்ட இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க தயார் எனவும், ஆணையத்தை முற்றிலும் மாற்றியமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், ஜெயலலிதாவின் மரணத்தை தீவிரமாகவும், உண்மையாகவும் விசாரிக்க புதிய அரசு விரும்புகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 10:49 (IST) 23 Nov 2021தங்கம் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைந்தது
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைந்து, 36 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம், ரூபாய் 4,534க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 09:34 (IST) 23 Nov 2021தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்! என முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
- 09:17 (IST) 23 Nov 2021எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் உருவப் படத்திற்கு டிஜிபி மலர் தூவி மரியாதை
திருடர்களால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் புகைப்படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆடு திருடர்களை 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றுள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி என தெரிவித்தார்.
- 08:26 (IST) 23 Nov 2021சேலத்தில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான 4 வீடுகள்... ஒருவர் பலி!
சேலம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணி தீவிரம்
- 08:00 (IST) 23 Nov 2021மழை பாதிப்பு - மத்தியக்குழு இன்று ஆய்வு
வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.