Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு.. போனஸ் மதிப்பெண்!
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் 5க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல், பகுதி -2, வினா எண் 29 க்கு விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Tamil News Latest Updates
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும். ஜூன் 3ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இதுவரை திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ்- 1 என 6 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தால் ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 6 பேர் மட்டுமே தாக்கல் செய்தால் போட்டியின்றி 6 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
உதயநிதி வேண்டுகோள்!
எனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம். எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமை நன்கு அறியும். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன்.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று உறுதியானவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது
குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறுகிறது
தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
டெல்லி, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்
டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலை தூர் வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. கரூரில் – 19, திருச்சியில் – 90, நாகையில் – 30, மயிலாடுதுறையில் – 49 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் என தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி நூலிழையில் தவறவிட்டுள்ளது. சூப்பர் 4 பிரிவில் தென் கொரிய அணிக்கு எதிரான போட்டி 4க்கு 4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை
காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால் தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். காவல் பணியை தான் முடிக்கிறேன், மக்கள் பணி தொடரும். அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன் என தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி ரவி ஓய்வு பிரிவு உபசார விழாவில் கூறியுள்ளார்
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ9,602 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது
குற்ற வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் இருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷேக் அப்துல்லா என்பவரின் பாஸ்போர்ட் தொலைந்த நிலையில், இந்தியா திரும்ப புதிய பாஸ்போர்ட் கோரி மலேசியாவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி பாஸ்போர்ட் வழங்க மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மறுத்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்
தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பிரிவு உபச்சார விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்விச் சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல; இந்திய ஒப்பந்தச் சட்டப்படி, சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்ப வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நிலுவையில் உள்ள நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தால் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என்று கூறியுள்ளது.
சிம்லா சென்றுள்ள பிரதமர் மோடி, முன்பெல்லாம் மக்கள் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் பற்றி பேசினார்கள். ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது, மக்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 15 துணை கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் டி.எஸ்.பி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ.2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம். பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அஸ்திரா ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணமோசடி வழக்கில் டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயினை அமலாக்க இயக்குனரகம் நேற்று திங்கள்கிழமை கைது செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிபிஐ முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு, அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும். ஜூன் 3ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை, தொண்டைமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்புக்குள்ளனது. இந்த நிலையில், குழந்தைகள் சத்துணவு சாப்பிட்ட அந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடியும் காய்ச்சல் பதவி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகும் 5-ல் ஒருவர் மரணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலககோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவின் இளவெனில், வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் அடங்கிய அணி டென்மார்க. அணியை 17-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டி பாஜக சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில். பேசி வரும் மாநில தலைவர் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போது ஏன் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கதவை உடைத்து யானை வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உள்யே புகுந்த காட்டு யானை கோதுமை அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள சாப்பிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டியடித்தனர்.
மீன்களை சுத்தம் செய்து மகள் விஜயலட்சுமியை மருத்துவராக்கிய தாயார் ரமணியை மயிலாடுதுறையில் நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகும் நிர்மலா, பெங்களூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யு.ஜி.சி அறிவிப்பு. முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலை. தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்பு நடத்தியதால் நடவடிக்கை. மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி சேர வேண்டாம் என யு.ஜி.சி அறிவுறை
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியிலும், ராமச்சந்திரன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக மாற்றப்பட்ட நிலையில், 25 ஆயிரம் பேர் பணி நிறைவு செய்கின்றனர்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது. மே 24 அன்று பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் இருவர் கைது.
வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து, நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடம் இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
சேலம் ஏற்காட்டில் 45ஆவது கோடைவிழா மலர் கண்காட்சியில் ரூ20 லட்சம் நுழைவு கட்டணம் வசூல். 6 நாள்களில் மலர் கண்காட்சியை 72,387 பேர் சுற்றி பார்த்துள்ள நிலையில், ரூ20 லட்சம் கட்டணமாக வசூல்
உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனா, ஜப்பான், பிரான்ஸ்-ஐ பின்னுக்கு தள்ளி 3 ஆம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 98 நாடுகளில் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 48,840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் பாஜக பேரணி!.

சென்னை, வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மதுரையில் 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தும் நிலையில், 1,600 டன் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர் 4' சுற்றின் இறுதி லீக் போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில், கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.
பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கலால் வரி குறைப்பால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கோரி, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம் செய்வதாக, விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
சென்னையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகம் நோக்கி இன்று பாஜக பேரணி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் – திருச்சி இடையே செல்லும் முன்பதிவில்லாத விரைவு ரயில்(06869) நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஏற்கனவே 12, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடுகிறார்.
இமாசலப் பிரதேசத்தில் ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சிம்லா செல்கிறார். அங்கு, பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தில் 11வது தவணையாக ரூ. 21 ஆயிரம் கோடி நிதியை பயனாளிகளுக்கு வழங்குகிறார். மத்திய அரசின் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.