scorecardresearch

Tamil News Highlights: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News 23 April 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News, Tamil News Today Latest Updates
Tamil News Headlines LIVE

Tamil Nadu News Updates: நிலக்கரி இறக்குமதி செய்யவும், கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரமும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயில் விழா – உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து. படுகாயமடைந்த எஸ்.ஐ., மார்க்ரேட் திரேஷாவுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. கத்தியால் குத்திய நபரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 17வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.

நடிகர் விமல் மீது மேலும் ஒரு புகார்

நடிகர் விமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார். 1 கோடி ரூபாய் கடனை திருப்பித் தரவே இல்லை என படத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றச்சாட்டு

ஐபிஎல்: ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை குவிப்பு. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து தோல்வி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
22:28 (IST) 23 Apr 2022
தென்காசியில் தனியார் பள்ளி வாகனம் மோதி 17 வயது மாணவன் மரணம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 17 வயது மாணவன் சைலப்பன் உயிரிழந்துள்ளார். பேருந்து வளைவில் திரும்பியபோது, நின்றுகொண்டிருந்த மாணவன் மீது உரசியதில் விபத்து ஏற்பட்டது, படுகாயம் அடைந்த மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்

19:46 (IST) 23 Apr 2022
காஞ்சிபுரம், செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது

19:36 (IST) 23 Apr 2022
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம்

துருக்கியில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது

19:06 (IST) 23 Apr 2022
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; பூசாரிக்கு சாகும்வரை சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி சிவக்குமாருக்கு சாகும்வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து, ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திரா அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்

18:50 (IST) 23 Apr 2022
எந்த துறையும் தனித்தனியாக செயல்பட முடியாது; ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

எந்த துறையும் தனித்தனியாக செயல்பட முடியாது. ஒவ்வொரு துறையும் தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி, தொழில் மற்றும் உற்பத்தி துறை இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி.

தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன. என சென்னை, கிண்டியில் நடைபெற்றுவரும் 'Tech Know 2022' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

18:16 (IST) 23 Apr 2022
சித்திரை திருவிழாவில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

18:00 (IST) 23 Apr 2022
ஆந்திராவில் மின்சார இருசக்கர வாகனம் வெடித்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சார இருசக்கர வாகனம் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிவகுமார் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

17:49 (IST) 23 Apr 2022
பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் – அன்பில் மகேஷ்

பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

17:20 (IST) 23 Apr 2022
பள்ளிகளில் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க கோரிய மனு; திங்கட்கிழமை விசாரணை

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள்போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றும், வேறுபாட்டை களைய மாணவர்களுக்கு சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

17:02 (IST) 23 Apr 2022
மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்தில் அருகில் இருந்த வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

16:56 (IST) 23 Apr 2022
மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கை – அன்பில் மகேஷ் தகவல்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது ஆசிரியர்கள் தண்டித்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இல்லை என்று கூறியுள்ளார்.

16:24 (IST) 23 Apr 2022
முன்னாள் அமைச்சர்கள் பாதுகாப்பு வாபஸ் – பஞ்சாப் முதல்வர்

பஞ்சாபில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 184 வி.ஐ.பி.களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

16:19 (IST) 23 Apr 2022
கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ₨28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் உதவியுடன் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

15:54 (IST) 23 Apr 2022
ஆழ வாசிப்போம், புத்தகங்களை நேசிப்போம் – முதல்வர் ஸ்டாலின்

திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்; ஆழ வாசிப்போம், புத்தகங்களை நேசிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

15:10 (IST) 23 Apr 2022
சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவசாரத்தில், சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

14:34 (IST) 23 Apr 2022
தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்த பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சையளிக்கவும் ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

14:33 (IST) 23 Apr 2022
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை

மத்திய தொகுப்பில் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதை கூறாமல் தீர்வு காண வேண்டியது தமிழக அரசின் கடமை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்

14:03 (IST) 23 Apr 2022
தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு

அரசியல் சாசன வரைவு பணியில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்திருக்க வேண்டும் சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்

14:01 (IST) 23 Apr 2022
உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன – நீதிபதி என்.வி.ரமணா

உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

மேலும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்

14:00 (IST) 23 Apr 2022
தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

13:20 (IST) 23 Apr 2022
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும் திருவண்ணாமலை, திருவாரூரில் கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்படும் வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டடம் கட்டப்படும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

12:55 (IST) 23 Apr 2022
நாம் அருமையான நீதித்துறையை கொண்டிருக்கிறோம்.. மு.க.ஸ்டாலின்!

சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் விளங்குகின்றனர். நாம் அருமையான நீதித்துறையை கொண்டிருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி’ நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார் – முதல்வர் மு.க ஸ்டாலின்

12:50 (IST) 23 Apr 2022
ராமஜெயம் கொலை வழக்கு!

ராமஜெயம் கொலை வழக்கு – குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 50 லட்சம் வெகுமதி தரப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

12:49 (IST) 23 Apr 2022
டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம்!

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம், உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

12:16 (IST) 23 Apr 2022
பெண் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது!

நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் என்பவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

12:16 (IST) 23 Apr 2022
புதிய நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழா!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், புதிய நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். புதிய நீதிமன்ற கட்டடங்கள் நீதி பரிபாலனத்துக்கு உதவியாக இருக்கும். நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியுள்ளதாகவும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி’ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

11:37 (IST) 23 Apr 2022
மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் செய்கிறார். ரூ.20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

11:36 (IST) 23 Apr 2022
செய்முறைத் தேர்வு நேரம் குறைப்பு!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேரம், 3 மணி நேரத்திலிருந்து, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

11:18 (IST) 23 Apr 2022
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு!

தினசரி கொரோனா பரிசோதனையை 18 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், உருமாறிய XE வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

10:39 (IST) 23 Apr 2022
இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ112 குறைந்து ரூ39 ஆயிரத்து 560க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ14 குறைந்து ரூ4945க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:18 (IST) 23 Apr 2022
ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு

ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவல் விகிதம் குறைவு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

09:23 (IST) 23 Apr 2022
மின்வெட்டு: கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் – ஓபிஎஸ்

மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் உள்ளது. கோடையில் மின்பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

09:06 (IST) 23 Apr 2022
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா தொற்று. நேற்றைய பாதிப்பு 2,451 ஆக இருந்த நிலையில், இன்று 2,527ஆக அதிகரிப்பு. நாடு முழுவதும் 15,079 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்

08:54 (IST) 23 Apr 2022
12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08:31 (IST) 23 Apr 2022
உக்ரைன் செல்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர்

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28ம் தேதி உக்ரைன் செல்கிறார். தலைநகர் கீவ்-வில் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து பேசவுள்ளார். ரஷ்யாவில் அடுத்த வாரம் அதிபர் புதினை சந்தித்த பிறகு ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்

08:18 (IST) 23 Apr 2022
‘பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாம் – AICTE, UGC அறிவிப்பு

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியை பயில வேண்டாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை. மானியக் குழு கூட்டாக அறிவிப்பு. பாகிஸ்தானில் பெற்ற கல்வி மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பை பெற முடியாது என்றும், மேற்படிப்பை தொடர முடியாது எனவு குறிப்பிட்டுள்ளது.

Web Title: Tamil news today powercut petrol diesel live updates