Advertisment

Tamil News Today: கடலூர் அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து: 4 பேருந்துகள் சேதம்

இன்று நடக்கும் முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bus debo

News Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

 சென்னையில் 494-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் புகாருக்கும் தொடர்பில்லை – மேலாளர் விளக்கம்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளரும், 'தி குரூப்' நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் இருந்து இசை நிகழ்ச்சி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது. பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பதால், நிகழ்ச்சியை சங்கத்தினர் ரத்து செய்தனர். ரத்து செய்தாலும் முன்பணத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என அக்ரீமெண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளர் செந்தில் வேலன் தெரிவித்துள்ளார்

வாச்சாத்தி வன்கொடுமை; மேல்முறையீட்டில் வரும் 29ம் தேதி தீர்ப்பு

வாச்சாத்தி மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் வரும் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாக1992ம் ஆண்டு வருவாய், வனத்துறை, காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அக்கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 IFS அதிகாரிகள் உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையிலேயே 50க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், மீதமுள்ளோருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்

கொலையானதாக கூறப்பட்ட நபர் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம்

கொலையானதாக கூறப்பட்ட நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். அப்போது கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்து கொள்கிறேன். இறந்தவரை நேரில் பார்க்க பயமாக உள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நகைச்சுவையாக கூறினார். சவுகார்பேட்டையை சேர்ந்த கிஷோர் சந்தக்-ஐ கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது

நெல்லை-சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்

நெல்லை - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில், 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்.3 பள்ளிகள் தொடங்கும்

தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன் அறிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலா பேத்தி மரணம்

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 43.

சனாதன தர்மத்தின் மையம் தமிழ்நாடு: ஆளுனர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, “சனாதனா தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு உள்ளது; சனாதன தர்மம் உலகிற்கு தேவையானது, அது அழியாது” எனக் கூறியுள்ளார்.

மேலும், “பாரத் இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்ளாது” எனவும் தெரிவித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (64) என்பவர் கடந்த 6 மாதமாக அப்பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் சமூக நல அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர்; பழனிவேல் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

அ.தி.மு.க ஐ.டி பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் - இ.பி.எஸ் அறிவிப்பு

அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்து அ.தி.மு.க  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரன், இணை செயலாளர்களாக கோவை சத்யன், ஜி.டி.ஆர். நிர்மல்குமார், துணைத் தலைவர்களாக வலங்கைமான் என். ராஜராஜசோழன், மேலூர் டி. கௌரிசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் புகார்: ஏ.ஆர்.ரகுமான் செயலாளர் விளக்கம் 

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது அளித்த புகார் குறித்து ஏ.ஆர். ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன் விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஆர். ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன்: “ரூ.3 கோடிக்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு அதற்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை அவர்களே ரத்து செய்தார்கள் என்பதால்  ஒப்பந்தத்தின்படி அந்த பணத்தை திருப்பி தரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10% ரயில் நிலையங்களில் கூட சி.சி.டி.வி இல்லை; ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

சுவாதி கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழ்நாட்டில் உள்ள 10% ரயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட  வேண்டுமெ ந ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

அ.தி.மு.க புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியீடு

அ.தி.மு.க புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகை கவுதமி புகார்

நிலம் விற்பனையின்போது மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.!

கடையில் தீ விபத்து - பெண் பலி

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (32) என்ற பெண் உயிரிழப்பு செல்போன் சார்ஜ் செய்யும் போது அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்

நடிகர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி - சீமான்

அரசியலுக்கு வரப்போகிறார் என தெரிந்தே, நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்துக்கு அரசியலே காரணம் எனவும் சீமான் விமர்சனம்

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு

தஞ்சை, பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசியதால் விபரீதம் பலத்த தீக்காயங்களுடன் கோகிலா(33) என்பவர் உயிரிழப்பு 

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து நடிகர், பாஜக நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் உத்தரவு

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக ஆர்.கே.சுரேஷ் தரப்பு வாதம்

எச்.ராஜா பேட்டி

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது அதை சொல்கிறதா..?"  -எச்.ராஜா

கூட்டணி முறிவு குறித்து பேசாமல் அதிமுகவினர் மெளனம் காத்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்ற கோணத்தில் எச்.ராஜா பேட்டி

என்.ஐ.ஏ சோதனை       

பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!

காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது!

தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல பழைய புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

கர்நாடகாவில் தமிழர் தாக்கப்படுவதாக பழைய வீடியோ தற்போது பரவிவரும் நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரச் செய்வதா?- அன்புமணி 

12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரச் செய்வதா? உடனடியாக  பணிநிலைப்பு வழங்குங்கள்;

அரசு பள்ளிகளில்  பணியாற்றி வரும் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான  பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு பணிநிலைப்பு  அல்லது  பணிப்பாதுகாப்புடன் கூடிய  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தில் 3வது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;

ஆனால், அவர்களின் 12 ஆண்டு கால கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தக்கூட தமிழ்நாடு அரசின் சார்பில்  அதிகாரிகள் கூட அனுப்பப்படாதது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

அண்ணாமலைக்கு காங். எம்பி மாணிக்கம் தாகூர் சவால்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும்;

அண்ணாமலைக்கு திராணி இருந்தால், விருதுநகர் தொகுதியில் நிற்க தயாரா...?- காங். எம்பி மாணிக்கம் தாகூர் சவால்

அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார்- அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு  எஸ்.வி.சேகர் பதில்

இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜக கூட்டணி- ஓ.பி.எஸ் பதில்

பாஜக கூட்டணி குறித்து நாளை மாலை தெரிவிக்கப்படும்- ஓ.பி.எஸ்

96வது ஆஸ்கர் விருதுக்கான, பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரைப்படங்கள் 

விடுதலை பாகம் - 1

வாத்தி

மாமன்னன்

ஆகஸ்ட் 16, 1947

50,000 பேருக்கு அரசு வேலை 

தமிழில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் அரசு பணிக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வாக உள்ளனர் மாநில அரசு பணிகளை போல், ஒன்றிய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்வாக வேண்டும் - ஸ்டாலின் 

இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலம் 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம். ஆடவர் ஸ்கீட் பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றது இந்திய அணி. தற்போது வரை 18 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு. தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை. கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை - கர்நாடக முதல்வர் சித்தராமையா 

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம். துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் வெள்ளி வென்றது இந்திய மகளிர் அணி

திருமாவளவனிடம் நலம் விசாரித்த இ.பி.எஸ்

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈபிஎஸ் நலம் விசாரித்ததாக தகவல் 

'மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்' - ஸ்டாலின் 

கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும். அவர்களது பிரச்சனையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் நம்பிக்கையையும் மனநிறைவையும் தரும். உட்கார வைத்து பேசுவது தான் சக மனிதனின் சுயமரியாதை என்பதை நினைத்து மதிப்பு கொடுங்கள். என்னுடைய கோரிக்கையை எல்லோரும் கடைபிடிப்பீர்கள் என நம்புகிறேன்- டிஎன்பிஎஸ்சி  மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேச்சு. 

உள்துறை அமைச்சகத்தில் வைகோ கடிதம்

தமிழ்நாடு ஆளுநர் ரவியை மாற்றக் கோரிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை மாற்றக் கோரி 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தார் வைகோ.  

இந்தியாவுக்கு 4வது தங்க பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு 4வது தங்க பதக்கம், துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்திய, மகளிர் அணி மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 1,759 புள்ளிகளுடன் தங்கம் வென்றது துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம், குதிரையேற்றம், மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா இதுவரை தங்கம் வென்றுள்ளது,

 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில்

 நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில். உத்தரபிரதேசம், மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து. மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடையில் ஏறி நின்றது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.

 நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2237 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம்.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 190 மில்லியன் கன அடியாக உள்ளது. 35 கன அடி நீர் வெளியேற்றம். 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 327 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment