Tamil News Highlights: நவராத்திரியின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
னெந்ச்

News updates

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியாகி உள்ளது. பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, தி.மு.க பிரிக்க முடியாதது: மு.க. ஸ்டாலின்

திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், திருவண்ணாமலை தீபம் போல் திமுகவும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாதது என்றார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, வங்க தேசம், மேற்கு வங்க கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களை ஏமாற்ற கையெழுத்து இயக்கம்: இபிஎஸ் 

Advertisment
Advertisements

நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் மக்களை ஏமாற்ற நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். மக்களிடம் கையெழுத்து பெற்று யாரிடம் கொடுக்க உள்ளனர்? தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் கட்சி அதிமுக- இபிஎஸ்

தெலங்கானா தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜக

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக 52 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக.

அதிமுக ஒன்றும் பாஜகவின் பி டீம் கிடையாது- இ.பி.எஸ்

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால் கட்சியின் கொள்ளை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள் ஒரிஜினல் டீம். பாஜக அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதை தூக்கி எறிந்த கட்சி அதிமுக

’தலைவர் 171’ அப்டேட் கொடுத்த  லோகேஷ் கனகராஜ்

லியோ படம் மக்களுக்கு பிடித்திருந்தால் சந்தோஷம். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அடுத்த படத்திற்கு தயாராகனும்.  ’தலைவர் 171’ திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு குடோன்

தர்மபுரி, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து. வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான பட்டாசு குடோன்

விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. வெடி விபத்துக்கான காரணம் குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை

எவ்வளவு மழை பெய்தாலும் 1 மணி நேரத்தில் வடியும்

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும்  மழை ஓய்ந்த 1 மணி நேரத்தில் வடியும். மழை நீர் உடனே வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது, அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கொசஸ்தலை ஆறு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும் - மேயர் பிரியா

காசாவிற்கு இந்தியா மனிதாபிமான உதவி

காசா போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து பாலஸ்தீனத்துக்கு
வழங்கப்பட்ட உதவி பொருட்கள்

விமானப் படைக்கு சொந்தமான C-17 விமானம் மூலம் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் காஸாவிற்கு அனுப்பி வைப்பு

அதிதீவிர புயலாக மாறியது தேஜ்

அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியது. தொடர்ந்து வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து அக்.24- ல் கரையை கடக்கும். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது- இந்திய வானிலை ஆய்வு மையம்

ரயில் மோதி 2 மூதாட்டிகள் உயிரிழப்பு 

ரயில் மோதி 2 மூதாட்டிகள் பலி.  திருப்பத்தூர், ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் ரயில் மோதி உயிரிழப்பு

மகளிர் உரிமைத்தொகை - புதிய அறிவிப்பு 

 உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்.

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்

தேஜ்: இன்று முற்பகல் அதி தீவிர புயலாக வலுப்பெற கூடும்

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான தேஜ், மிக தீவிர புயலாக வலுவடைந்தது. இன்று முற்பகல் அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற கூடும் -இந்திய வானிலை ஆய்வு மையம்.

நீர் நிலவரம்

புழல்ஏரியில்நீர்இருப்பு 2522 மில்லியன்கனஅடியாகஉள்ளது; நீர்வரத்து 70 கனஅடியாகஉள்ளது; சென்னைகுடிநீருக்காக 159 கனஅடிநீர்வெளியேற்றம். சோழவரம்ஏரியில்நீர்இருப்பு 538 மில்லியன்கனஅடியாகஉள்ளது; நீர்வரத்து 102 கனஅடியாகஉள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகைஏரியில்நீர்இருப்பு 456 மில்லியன்கனஅடியாகஉள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: