Advertisment

Tamil News Highlights: சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
car

News updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதில், திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில்  40 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? உதயநிதி கேள்வி

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தருமபுரி நீதிமன்றத்தில் ஆறு வாரங்களுக்குள் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவு

மகாரஷ்டிராவில் ரயிலில் தீவிபத்து

மகாராஷ்டிரா, புதிய அஸ்தி பகுதியிலிருந்து அகமத்நகர் செல்லும் சிறப்பு ரயிலில் தீ விபத்து. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

அதிமுக குறித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் விமர்சனம்

“ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை தலைமை ஏற்று நடத்தியவர்கள் எப்படிபட்ட தீர்மானங்களை எல்லாம் வரவேற்றார்கள் என்பது பற்றி நான் சொல்ல தேவையில்லை!” - முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ்

நிதாரி தொடர் கொலைகள் வழக்கு : மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவர் விடுதலை

2007ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலைகள் வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது அவர்கள் குற்றவாளிகள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக உடற்கல்வி ஆசிரியர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக உடற்கல்வி ஆசிரியர் அருள் பிரகாசம் பணியிடை நீக்கம்

இதனை தொடர்ந்து மாணவர்களை போராட தூண்டியதாக வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார், தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

'லியோ' படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார்

திரையரங்கம் சார்பில் முன்பதிவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், ரசிகர் ஒருவர் திரையரங்கை தொடர்புகொண்டபோது போலி டிக்கெட் விற்கப்பட்டது அம்பலமானது. 

“ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்?” - சீமான் கேள்வி

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது குறித்த கேள்விக்கு “ராமருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்மந்தம்?” என சீமான் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்

பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் வழக்கு : அரசு சார்பில் சராமாரி கேள்வி

பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வரும் விசாரணையில், ஆர்எஸ்எஸ்  அமைப்பு பதிவு செய்யப்பட்டதா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியா?  என்று அரசுத் தரப்பு சரமாரி கேள்விஎழுப்பியுள்ளது.

மேலும் பேரணியில் கலந்துகொள்பவர்கள் யார்? எத்தனை பேர் இருப்பார்கள்? எங்கு தொடங்கி எங்கு முடியும் என்ற எந்த விபரமும் இல்லாமல் அனுமதி கேட்கிறார்கள் என்று கூறியுள்ள நிலையில், அரசின் நிபந்தனைகளுக்கு முழுவதும் கட்டுப்படுவதாகவும், பேரணி குறித்த முழு விபரங்களையும் உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு; தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

சென்னையில் பைக் மீது கார் பின்னால் மோதி விபத்து; கணவன், மனைவி, குழந்தை மரணம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் பின்னால் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளனர். கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஆந்திர பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

‘ககன்யான்’ திட்டம்; வரும் 21ம் தேதி காலை சோதனை கலம் செலுத்தப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் வரும் 21ம் தேதி காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை *தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் மீண்டும் அறிமுகம்

லாஸ் ஏஞ்சல்சில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது.

திருப்பூர், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து; ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

திருப்பூர், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  தமிழ்நாட்டை சேர்ந்த 27 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பணியிடங்களை, ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ரூ.1,763 கோடி மதிப்பீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர்

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு-  அமெரிக்க அதிபர்

காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அனைத்து பாலஸ்தீனிய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

ஞாயிற்றுக்கிழமை சிபிஎஸ் நியூஸின் தி 60 மினிட்ஸ் இன்டர்வியூநிகழ்ச்சியில், பேசிய பைடன், காசாவுக்குள் கொண்டு வரப்படும் பொருட்கள் மற்றும் உதவிகளுக்கான மனிதாபிமான நடைபாதையை நிறுவுவதை ஆதரிப்பதாகவும், காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தாம் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

காஸா மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்

கடந்த வாரம் ஹமாஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுக்கு எரிபொருள், தண்ணீர், உணவு மற்றும் மின்சாரம் வழங்குவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்த 24 மணி நேரத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும் என ஐநா மனிதாபிமான அலுவலகம் எச்சரித்துள்ளது.

ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் போராட்டம்

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் கனமழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினேன்: இஸ்ரோ தலைவர்

சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினேன்" - சோம்நாத், இஸ்ரோ தலைவர்.

 மதுரை: மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து - 6 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

 தங்கம் விலை 

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு. ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனையாகிறது.  

ராஃபா எல்லை வழியே மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும்

காசா - எகிப்து இடையிலான ராஃபா கிராசிங் இன்று திறப்பு . இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு திறக்கப்படும் என தகவல் . காசாவில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்காக திறப்பு . ராஃபா எல்லை வழியே மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும் . காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தெற்கு எல்லைக்கு செல்ல அறிவுறுத்தியிருந்த அமெரிக்கா . காசாவில் இரட்டைக் குடியுரிமை உள்ள மக்கள் எல்லைக்கு செல்ல சம்பந்தப்பட்ட தூதரகங்கள் அறிவுறுத்தல் 

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு- பைடன்

ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு. இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்கும் அமெரிக்கா – பைடன். இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன், தற்போது சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும் குரல்

 திண்டுகல்லில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 குழந்தை கடத்தல்: 2 பேர் கைது

 சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல். கடத்தப்பட்ட குழந்தை குன்றத்தூர் பகுதியில் மீட்பு; ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி 2 பேர் கைது.

 தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.  திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் .

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. பரக்காணி பகுதியில் 2 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சோகம். இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பரக்காணி கிராம மக்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment