Advertisment

Tamil News Today: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 5,087 பேர் பலி

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
War Isrea.jpg

News Updates

Petrol and Diesel Price:சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

Tamil News Updates

ஜெயிலர் பட வில்லன் திடீர் கைது

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தனது மிரட்டல் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விநாயகன்.

இவர் எர்ணாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும், காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிஞர்கள்தான் கூற வேண்டும், நான் படித்தவன் அல்ல: எடப்பாடி பழனிசாமி



ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல என முன்னாள் முதல் அமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தளபதி 68, 2024-ம் ஆண்டு வெளியாகும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

“இதுவரை ஏஜிஎஸ் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் தளபதி 68 உருவாக உள்ளது. படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும். தளபதி 68, 2024-ம் ஆண்டு வெளியாகும்” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகண்ட பாரதம் சிந்தாந்தத்தை பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு அதிகம் - பாடகர் ஷங்கர் மகாதேவன்

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாடகர் ஷங்கர் மகாதேவன் பேச்சு: “அகண்ட பாரதம் என்ற நமது சித்தாந்தம், நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்ரை பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பு எல்லாவற்றையும் விட அதிகமானது” என்று கூறினார்.

ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும்... போர் முடிய நேரம் எடுக்கும் - இஸ்ரேல் பிரதமர் 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பக்கத்தில் இருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார், மேலும், போருக்கு சிறிது காலம் ஆகலாம் என்று எச்சரித்தார். அது முடிந்த பிறகு, ஹமாஸ் கொடுங்கோன்மையின் கீழ் யாரும் வாழ மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இரண்டு வயதான இஸ்ரேலிய பெண்கள் விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மேக்ரான் இன்று டெல் அவிவ் சென்றார்.

சென்னை மாநகரில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை

சென்னை மாநகரில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக திரியும் மாடுகளைப் பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அதிகாரிகளுடன், மாநகர காவல் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது

அகண்ட பாரதம் என்ற சிந்தாந்தத்தை பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ் பங்களிப்பு அதிகம் - பாடகர் ஷங்கர் மகாதேவன்

அகண்ட பாரதம் என்ற நமது சிந்தாந்தம், கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு அதிகம் என பாடகர் ஷங்கர் மகாதேவன் கூறியுள்ளார்



ரசிகர்கள்
கூட்டத்தில் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு லேசான காயம்

கேரளாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொச்சியில் நடைபெறவிருந்த செய்தியாளர்கள் சந்திப்பு தற்காலிகமாக ரத்தாகியுள்ளது

வலுவிழக்கிறது ஹாமூன் புயல்; வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும். ஹாமூன் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம்

தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும் என கடலூரில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகத்தை தொடர்ந்து தற்போது தொழிற்சங்கமும் நிறுவப்படுகிறது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்

மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ

துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா உள்ளிட்டோர் நடிக்கும் துருவ நட்சத்திரம்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5  மணிக்கு வெளியாகிறது.

 கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் புதிய பதவி

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனிச் செயல் ஐஏஎஸ் வி.கே பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் புதிய பதவி. விருப்ப ஓய்வு பெறுவாக  ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன் விண்ணப்பித்திருந்த நிலையில் பதவி . மாநில அமைச்சர் அந்தஸ்தில் ஒடிசா முதல்வரின் கீழ் நேரடியாக செயல்படுவார் எனவும் உத்தரவு 

இஸ்ரேல் தலைநகரில் பிரான்ஸ் அதிபர் 

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வருகை. காசாவில் போர் தீவிரமைடைந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்கள்  இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகை 

தென் மாநில ஆம்னி பேருந்து சங்கத்துடன் பேச்சுவார்த்தை

போராட்டம் அறிவித்துள்ள ஆம்னி பேருந்து சங்கத்தினருடன் போக்குவரத்து கழக இணை ஆணையர் நேரில் பேச்சுவார்த்தை. தொலைபேசியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சற்று நேரத்தில் நேரில் பேச்சுவார்த்தை

சென்னை கே.கே.நகரில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் அறிவிப்பு

 இலங்கை செல்ல விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

50க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கம்

அண்ணனூர் - ஆவடி வழித்தடத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - 50க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கம். 

ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

’’ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்” -மாறன், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர். 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு

 ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

ஆவடியில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மண்டல மேலாளர் தகவல். மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கி செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

 ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்

 ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேவைப்படுமானால் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம் -எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சர்

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும்

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

 ஆவடி ரயில் நிலையத்தில் புறகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால், சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து  பாதிப்பு. அண்ணணூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில்  நிற்க வேண்டிய ரயில்  சிக்னலை  கடந்த சென்றது.

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது

 தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு. தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், வேலைநிறுத்தம் செய்யப்போவதாகத் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் அறிவிப்பு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நிலநடுக்கம்

 நேபாள தலைநகர் காத்மாண்டில் அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக பதிவு.

 தேஜ் புயல் கரையை கடந்தது

அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல், ஏமன் நாட்டின் கடற்கரையில் அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

 நீர் நிலவரம் 

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2538 மில்லியன் கன அடியாக உள்ளது.159 கன அடி நீர் வெளியேற்றம்.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 555 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 452 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment