/indian-express-tamil/media/media_files/GPEY3Y8uWEckgTGUlCBv.jpg)
News updates
Petrol and Diesel Price:சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (OMR) டைடல் பார்க் சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சில மாற்றங்களை செய்து போக்குவரத்து காவல் பிரிவு நடவடிக்கை எடுத்துளளது. இந்த புதிய முறை இன்று முதல் சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மாணவிகளுக்கு அனுமதி
கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த போது ஹிஜாப் அணிந்த மாணவிக்கு அனுமதி மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது நினைவு கூரத்தக்கது.
மாநில சுயாட்சி எனக் கூறும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? அன்புமணி கேள்வி
சிவகாசியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்; தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என கூறுவது தவறான கருத்து” என்றார்.
மேலும், “உச்ச நீதிமன்றம் 2012ம் ஆண்டே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய அன்புமணி ராமதாஸ், “மாநில சுயாட்சி என கூறும் திமுக, ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது” எனவும் கேள்வியெழுப்பினார்.
காஸாவில் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல்
வடக்கு காஸாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் அருகே இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆரியம் - திராவிடம் கிடையாது - ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி: “தமிழகம் புண்ணிய பூமி; இங்கும் ஆரியம் - திராவிடம் கிடையாது; இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவேல் போன்றவகள் அனுப்பிவைக்கப்பட்டனர்; சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு;
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது
வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது;
சைலேந்திர பாபுவிற்கு அந்தத் தகுதி இல்லை என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருப்பது, அவரது அதிகார எல்லையை மீறிய சர்வதிகார முடிவாகும். பாஜக அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்- வைகோ கண்டனம்
எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர். அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ட்வீட்டர் தளத்தில் பதிவு
மாரியப்பன் தங்கவேலுக்கு மோடி வாழ்த்து
Many Congratulations to @189thangavelu for his outstanding performance in the Asian Para Games! The Silver Medal in Men's High Jump T63 event is a testament to his incredible talent and determination. Best wishes for his future endeavours. pic.twitter.com/1Ya0njWxXN
— Narendra Modi (@narendramodi) October 23, 2023
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்;
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது, அவரது அசாத்தியமான திறமையின் சான்றாகும்; அவர் எதிர்காலத்திலும் வெற்றிகள் குவிக்க வாழ்த்துகள்- பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
#AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி 🥈வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது @189thangavelu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
— M.K.Stalin (@mkstalin) October 23, 2023
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! https://t.co/DPFvJArjQj
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி
கர்நாடக மாநிலத்தில் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி அளித்து அறிவிப்பு வெளியானது.
சைலேந்திர பாபு நியமன பரிந்துரை - ஆளுநர் ரவி நிராகரிப்பு
டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைரை நிராகரித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் ரவி பரிந்துரைத்ததாக தகவல்
ஆ.ராசா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில், சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. ராசா லண்டனில் 27.10.2023 அன்று நடைபெறவுள்ள பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தில் சொற்பொழிவு ஆற்ற செல்வதையொட்டி எம். பி. ஆ. ராசா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
கௌதமி விலகியது மனவேதனை அளிக்கிறது- வானதி ஸ்ரீனிவாசன்
பா.ஜ.கவில் இருந்து நடிகை கௌதமி விலகியது மனவேதனை அளிக்கிறது. பிரச்சனை என்னவென்று தெரிந்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம். புகார் அளித்தும் இத்தனை நாட்கள் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தெரியவில்லை. கௌதமி மீது அன்பு, மரியாதை, பாசம் உள்ளது-எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்
சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் மக்கள் பயணம்
தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்- போக்குவரத்து துறை. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று இரவு 12 மணி வரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டன.
நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
நடிகை கௌதமியின் சொத்து அபகரிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு. அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் புகார். கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும் கௌதமி புகார். கௌதமி அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
விஜயதசமி நாளையொட்டி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவு
வெள்ளி வென்றார் மாரியப்பன் தங்கவேலு. ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று அசத்தல். தங்கம் வென்று இந்திய வீரர் சைலேஷ் குமார் சாதனை . வெண்கலம் வென்று அசத்திய ராம் சிங் பதியார். உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் வென்று இந்தியா அசத்தல்
வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு. மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் 25ம் தேதி வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு .இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
நடிகை கவுதமி பாஜகவிலிருந்து விலகல்
நடிகை கவுதமி பாஜகவிலிருந்து விலகல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார் நடிகை கவுதமி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 2ம் கட்ட பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட பட்டியலை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
லேசான நிலநடுக்கம்
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 10.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் . பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு
ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்மேற்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர ‘தேஜ்’ புயல், இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது. நாளை மறுநாள் ஓமன் ஏமனுக்கு இடையே கரையை கடக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.