Advertisment

Tamil News Highlights: தொடர் கனமழை- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று நடக்கும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள். இன்று, சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாக விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
School leave

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, கன்னியாகுமரி,  தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நீலகிரி, தேனி  ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.23) விடுமுறை

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

சபரிமலைக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு மிக கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; திருச்சி எஸ்.பி., விளக்கம்

திருச்சியில் பிரபல ரவுடி ஜெகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி ஜெகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆய்வுக்கு சென்ற உதவி ஆய்வாளர் மீது ரவுடி ஜெகன் தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தோல்விதான் வெற்றிக்கு முதல்படி: ஆளுநர் ஆர்.என். ரவி

தோல்விதான் வெற்றிக்கு முதல்படி, என் வாழ்நாளில் நான் நிறைய தோல்விகளை பார்த்துள்ளேன். வாழ்க்கையில் எப்போதும் வெற்றி மட்டும் இருக்காது. தோல்விகளும் இருக்கும் என ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் நடந்தந விழா ஒன்றில் கூறியுள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து- உண்மை நிலை என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பி உள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸில் அவர், “நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர நோயாளிகள் வருகை தரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று காலை, தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

மேலும், இவ்விபத்தில் ஒரு நோயாளி உயிரிழந்தது அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது இறப்பு குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையை விளக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இனியாவது, விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் உடனடியாக ஆய்வு செய்து சீர்செய்ய வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுதலை - மோடி வரவேற்பு

இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது வரவேற்புக்குரியது; அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது டெண்டர் முறைகேடு புகார்; முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை - லஞ்ச ஒழிப்பு போலீஸ்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளித்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் ரூ. 350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சாதி ஒழிப்பு குறித்து தி.மு.க மேடையில் பேசுவது ஒன்று, செய்வது வேறு ஒன்று - வானதி சீனிவாசன் விமர்சனம்

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் தி.மு.க போராடி வருவதாகவும் கூறினார்... ஆனால் நடப்பதோ வேறு....  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை. தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். தி.மு.க மேடையில் பேசுவது ஒன்று... செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.” என்று விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டின் செல்வம் யார் கைகளுக்கு செல்கிறது - ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி: “நட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது. யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது. கவனத்தை திசை திருப்பி பிக்பாக்கெட் அடிப்பதுபோல் மோடி, அமித்ஷா, அதானி பணட்தை எடுக்கின்றனர். பொதுமக்கள் வாங்கும் பெட்ரோலுக்கான தொகையில் பாதி அதானிக்கு செல்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?” சுற்றுசூழல்துறை, சிறுகுறு தொழில்கள் துறை, தொழில்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை: கோர்ட் அதிரடி தீர்ப்பு 

புதுக்கோட்டை மாவட்டன் அன்னவாசல் அருகே கடந்த 2009ம் ஆண்டு 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அப்பெண்ணின் உறவினர் ரங்கசாமி என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5000 அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

15 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த புகாரில், சென்னையில் 15 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

பயணிகளின் விமான சேவையில் குறைபாடு இருந்ததால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம்​ உத்தரவிட்டுள்ளது. 

தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில் தமிழத்தின் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கம் வென்றார் வென்று சாதனை படைத்தனர். கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கலம் வென்றார். 

ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு 

இந்திய வீரர் சுப்மன் கில் 826 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளார். 

இந்திய வீரர்கள் விராட் கோலி 3வது இடத்திற்கும், ரோகித் ஷர்மா 4வது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

ஒருநாள் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மகராஜ் முதல் இடத்தில் உள்ளார். இந்திய பவுலர்கள் முகமது சிராஜ் 3ம் இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 4ம் இடத்திலும் உள்ளனர்

டி20 - சூர்யகுமார் யாதவ் முதலிடம்

டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் இடம் பிடித்துள்ளார். 

பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

திருச்சி சனமங்கலம் அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை 

உள் தமிழ்நாடு மற்றும் அதை ஓட்டிய கேரளப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன்

நடிகை குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன்

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்மன் வழங்கப்பட்டுள்ளது

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, டிச. 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு;

ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கனடா நாட்டவர்களுக்கு இ-விசா

நீண்ட இடைவெளிக்கு பிறகு கனடா நாட்டவர்களுக்கு இ-விசா வழங்கும் பணியை தொடங்கியது இந்திய வெளியுறவு அமைச்சகம்

கனடாவில் சீக்கிய பிரிவினவாத பிரமுகர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது;

வரும் 26-ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிப்காட் விரிவாக்கம்:  அன்புமணி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

மேல்மா கூட்டு சாலையில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டம். நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தல். சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கொட்டும் மழையில் மக்கள் நல பணியாளர்கள் போராட்டம்

1000-க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் கொட்டும் மழையில் பிச்சை எடுக்கும் போராட்டம்.  பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் .

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பிச்சை எடுத்து போராட்டம். தரையில் அமர்ந்து பேருந்தை மறித்ததால் பரபரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் 

கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் திடுக்கிடும் வாக்குமூலம்

சென்னை கொத்தவால்சாவடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம். அடிக்கடி தனது காதில், உயிரோடு இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்ததாக திடுக்கிடும் வாக்குமூலம்.

மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து வந்ததாகவும் தகவல். வீட்டின் மேலே இருந்து "குதித்து விடு, தற்கொலை செய்து கொள், எப்படியாவது இறந்து விடு" என ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்.

வேண்டியதை கடவுள் நிறைவேற்றாததால், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தான் தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் முரளிகிருஷ்ணன் வாக்குமூலம்

எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில்  மீண்டும் சோதனை 

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான, அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை. ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன

தற்போது சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து, அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள். 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் 

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நாளை(நவ.23) முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும். 

2 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், சிவகங்கை, திண்டுக்கல், கோவை,திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

கோயம்பேடு மெட்ரோ பாலம் அருகே மழைநீர் தேக்கம் 

சென்னை கோயம்பேடு மெட்ரோ பாலம் அருகே தேங்கி நிற்கும் மழைநீர். மழை நீரால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் 

கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி. நீரை விரைந்து அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

சென்னை வந்த ரயிலில் பிரேக் பழுது 

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் பிரேக் பழுது. இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட பிரேக் பழுதால், நெமிலிச்சேரியில் 20 நிமிடம் விரைவு ரயில் நிறுத்தம்.

பிரேக் பழுது காரணமாக புகை வந்த நிலையில், ரயில் அவசரமாக நிறுத்தம். 20 நிமிடத்திற்கு பின் பழுது சரிசெய்யப்பட்டு புறப்பட்டு சென்ற விரைவு ரயில்

அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு- சேகர் பாபு 

இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. பரம்பரை அறங்காவலர்கள் கோயில் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதால்,  இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கம்.

48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. திமுக ஆட்சியில் அறநிலையத்துறைசிறப்பாக செயல்படடு வருகிறது- அமைச்சர் சேகர் பாபு

சேலம் அரசு தலைமை மருத்துவமனையின்  அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து

சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து * சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் .  உள் நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்திய மருத்துவமனை ஊழியர்கள் .  நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறை. 

சென்னை தொடர் மழையால் 22 விமானங்கள் தாமதம்

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 22 விமானங்கள் தாமதம் * சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான சேவை ரத்து * பயணிகள் தாமத வருகை, உடைமைகள் ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் என விளக்கம் * சுமார் 20 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்படும் விமானங்கள் *12 வெளிநாட்டு விமானங்கள், 10 உள்நாட்டு விமானங்கள் மொத்தம் 22 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன 

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது சென்னை காவல்துறை

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்.  விசாரணைக்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது சென்னை காவல்துறை. நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்ப திட்டம் . மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்

நடிகை கௌதமி வழக்கில், அழகப்பன், நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் . 

நில அபகரிப்பில் ஈடுபட்டதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.  புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை . தொடர்ச்சியாக அழகப்பன் உட்பட பலர் தலைமறைவாக உள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார்

சென்னை 37 இடங்களில் முழுமையாக மழைநீர் அகற்றம்

 சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மழை நீர் தேங்கிய 43 இடங்களில், 37 இடங்களில் முழுமையாக மழைநீர் அகற்றம். சரிந்து விழுந்த 5 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டது! சுரங்கபாதைகள் அனைத்தும் போக்குவரத்து தடையின்றி சீராக உள்ளது

தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்

 “நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, உள்ளூர் வானிலை நிலவரம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவு செய்யலாம் -மாவட்ட ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ், மகாபாரதி உத்தரவு

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்

பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் போர் நிறுத்தம்" "நாளை முதல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தகவல்" "ராணுவ வாகனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு மக்களே போர்க்கொடி தூக்கிய நிலையில், போர் நிறுத்தத்திற்கு சம்மதம்" "போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் என தகவல்" "மனிதநேய உதவிகள், மருத்துவ உதவிகள், எரிபொருள் விநியோகத்திற்கு அனுமதி" "தெற்கு காசா பகுதியில் 4 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை" - நிபந்தனையுடன் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு சம்மதம்

இந்த மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடர வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை . சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment