Advertisment

Tamil News highlights: காரைக்காலில் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

இன்று நடக்கும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
adaega

எடப்பாடி பழனிசாமி

Petrol and Diesel Price

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

FIFA கால்பந்து உலக கோப்பை தகுதிச் சுற்று: இந்திய அணி தோல்வி

FIFA கால்பந்து உலக கோப்பை தகுதிச் சுற்றில் கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது

கோவையில் ஃ ப்ளு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; மாஸ்க் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவையில் ஃ ப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பால், வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக உள்ளன. காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேருவை திருமணம் செய்து கொண்டதாக கூறி ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடியினப் பெண் மரணம்

நேருவை திருமணம் செய்து கொண்டதாக கூறி ஒதுக்கி வைக்கப்பட்ட பழங்குடியினப் பெண் புத்னி மஞ்சியான் காலமானார். 1959-ம் ஆண்டு அணை திறப்பு நிகழ்ச்சியின் போது நேரு மாலை அணிவித்ததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி புத்னி மஞ்சியான் அவரது சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்

ஆவினில் கொழுப்பு சத்துள்ள பால் விநியோகம் நிறுத்தம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ஆவினில் கொழுப்பு சத்துள்ள பால் நவ.25ஆம் தேதியோடு நிறுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர், “அம்மா ஆட்சியில் நாளொன்றுக்கு சுமார் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. கொழுப்புச் சத்து சமன்படுத்தப்பட்ட நீலநிற பாக்கெட் மற்றும் கொழுப்புச் சத்து சேர்க்கப்பட்ட பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் என்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்தது. அம்மா ஆட்சியில் ஆவின் நிறுவனம் இலாபத்தில் இயங்கியதோடல்லாமல், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

2021ல் விடியா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறியது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் கொள்முதல் 20 லட்சம் லிட்டராகக் குறைந்தது. நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் இம்மாதம் 25ந் தேதி முதல் நிறுத்தப்படும் என்று செய்திகள் தெரிய வருகின்றன. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியில் இருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழக மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தவறான விளம்பரங்களை நிறுத்த வேண்டும்.. பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தவறான விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 1 கோடி அபராதாம் விதிக்க நேரிடும் என பதஞ்சலிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பதஞ்சலி விளம்பரங்களுக்கு எதிரான இந்திய மருத்துவ சங்கத்தின் மனு மீது இன்று விசாரணை நடந்த நிலையில், தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்சூர் அலிகான் விவகாரம்: விரைவில் நல்ல முடிவு வரும் - நடிகர் சங்கம் தகவல்

மன்சூர் அலிகான் விடுத்த 4 மணி நேர காலக்கெடு முடிந்ததையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரைவில், செயற்குழு கூட்டத்தில் அனைவரிடமும் கலந்தாலோசித்து, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சாலவாக்கம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை; காஞ்சிபுரம் கலெக்டர் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராமத்தில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என்று காஞ்சிபுரம் கலெக்டர் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு இ.பி.எஸ் கண்டனம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், அடிப்படை வாழ்வை இழந்து நிற்கதியாக நிற்கும் பொதுமக்கள் என காசா ஒரு பேரழிவு நகரமாக காட்சியளிக்கிறது. உலக நாடுகளின் கோரிக்கையை செவி மடுக்காமல் மருத்துவமனைகள், ஐ.நா முகாம்கள் மீது திட்டமிட்டு பேரழிவு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி அங்கு மனித உரிமைகளை மிகக் கொடூரமாக மீறும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்திற்குரியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர்கள் கடைபிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பட்டை இந்தியா தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

 காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; போலீஸ் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராமத்தில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம் கலந்த மர்ம நபர்கள் குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிய உணவு தயார் செய்ய குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்த நிலையில் துர்நாற்றம் வீசியதை அடுத்து குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தபோது மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டிலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. பூத் கமிட்டி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஈபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

வரும் 23ல் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்

90வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு நாளை மறுநாள் காணொலி வாயிலாக கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி நடந்த கூட்டத்தில் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 23ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துள்ளதா? என்பது பற்றி கணக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கருக்கா வினோத்தை காவலில் எடுக்க மனு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் கருக்கா வினோத்தை 7 நாட்கள் காவலில் எடுக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல்

விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்லலாம் என்றும், முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியில்  பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தி.மு.க மகளிரணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. கனிமொழி இருந்தனர். அப்போது, மேடைக்கு கீழே இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.சி.யில் இருந்து புகை வந்ததது. இதனால், சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரங்கில் இருந்த தொண்டர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். 

டிசம்பர் 24ல் கலைஞர் நூற்றாண்டு விழா

"கலைஞர் நூற்றாண்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது" என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மரணம்: அண்ணாமலை இரங்கல்

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. குமரி, நெல்லை, தென்காசி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் கனமழைக்கு வாய்ப்பு.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

சென்னையில் கனமழை

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை. மெரினா காமராஜர் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மழை. முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

பொறியாளர் முத்தையா 2-வது நாளாக ஆஜர் 

தமிழ்நாடு நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர். நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2-வது நாளாக ஆஜர். ஆவணங்கள் சமர்ப்பிக்க அதிகாரிகள் கேட்டதால் ஆவணங்களை சமர்பிப்பதாக தகவல்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில்  நூதன விழிப்புணர்வு

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர்கள் குருபூஜையின் போது விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காவல் கண்காணிப்பாளர்.

வாகனங்களை "FOLLOW TRAFFIC RULES" என்ற வாசகமாக நிறுத்திவைத்து நூதன விழிப்புணர்வு. விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 77 வாகனங்கள் பறிமுதல்

இசையோடு எனக்கு நெருங்கிய உறவு: ஸ்டாலின்

கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார் கருணாநிதி. இசையை கேட்டதும், அதில் சரி எது, தவறு எது என்று கூறிவிடுவார் கருணாநிதி. இசையோடு எனக்கு நெருங்கிய உறவு உள்ளது - முதல்வர் ஸ்டாலின் 

சுசீலாவின் பாடல் பாடி ஸ்டாலின் உற்சாகம் 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பி.சுசீலாவின் 'நீ இல்லாத உலகத்திலே..' பாடலை பாடி முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகம் 

நீர்நிலை ஆக்கிரமிப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து. மதுரை புதுக்குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்றவும் உத்தரவு 

வேந்தர் நியமனம்: ஜெ.வை பாராட்டிய ஸ்டாலின்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு, "இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவி உடன் செயல்படும் பல்கலை.

இந்த பல்கலைக்கு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் தான் வேந்தராக இருக்கும் சிறப்பு உள்ளது.  இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால் தான் பல்கலை. சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதைந்துவிடும். 

2013-ம் ஆண்டே இந்த பல்கலை வேந்தர் முதலமைச்சர் தான் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்கள். இதற்காக அவரை மனதார பாராட்ட வேண்டும். இந்த முடிவை எடுத்த ஜெயலலிதா அவர்களை மனதார பாராட்டுகிறேன். 

பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ஸ்டாலின்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா. பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

தங்கம் விலை ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,730க்கும், ஒரு சவரன் ரூ.45,840க்கும் விற்பனை

கால்வாய் மீது பூங்கா: நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதுக்கோட்டையில் மழைநீர் கால்வாய் மீது பூங்கா அமைக்கப்பட்ட விவகாரம்.நகராட்சி ஆணையர் மற்றும் கள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு.நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு முறைமன்ற நடுவம் அறிவுறுத்தல்

மூத்த பொறியாளர்களை கொண்டு 45 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு

ஏரிக்கரை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

விழுப்புரம், வி.மருதூரில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம். உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் அகற்றம். பெண்கள் கடும் வாக்குவாதம். 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்த வீடுகளை இடிக்கப்படுவதை பார்த்து கதறும் பெண்கள்

ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்

 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம். 2024 ஜன.12ல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்த முடிவு. இந்திய கூட்டணியின் மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு என தகவல்

 சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் முதல் வீடியோ

 உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் முதல் வீடியோ. சுரங்கப்பாதையில் உள்ள குழாய் வழியாக சிறிய கேமராவை வைத்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் உள்ள 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு. 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். இன்று முதல் 25ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது

திருச்சி:  4 நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

 திருச்சியில் 4 நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை. ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 கடைகளில் சோதனை. 10க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்புடன் 6 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை . ஏற்கனவே, சென்னையிலும் நேற்று முதல் நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சவுகார்பேட்டை பகுதியில் 2வது நாளாக நகைக்கடைகளில் அமலாக்கத் துறை சோதனை

 தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு. நுண்ணறிவு பிரிவி ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு ( ATS) செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5  ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என்று 383 பேர் இந்த பிரிவில் செயல்படுவார்க்ள்

 11  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு. மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்.

 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இன்று மாலை 4 மணிக்கு, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம். மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல்.

 ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான்: காபுல் நகரில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil





Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment