Latest Tamil News: திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. இந்த முதலாம் கட்ட ஆலோசனை குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில், துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள், திட்டமிடல்கள் குறித்தும், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை நேரடியாகவும் வீடியோ வாயிலாகவும் கருத்துக்கள் கேட்பது குறித்தும் இந்த முதல் கட்டக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த்திற்குச் சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குக் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்திற்கு 6.5 லட்சம் சொத்து வரி செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இறுதியாகக் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சொத்து வரி செலுத்தியதாகவும், மேலும் சொத்து வரிகளைத் தவறாமல் செலுத்தி வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தினால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை என்றும் கடந்த மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, அதற்கு முன் பணமாக வாங்கிய தொகை திருப்பி அளித்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் , இந்தியாவின் கைபேசி செயலியான ஆரோக்யா சேது தொற்று தொடர்பைக் கண்டறிதல், பாதிப்பு அதிகமான பகுதிகளை வரையறுத்துல் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உதவியாக தெரிவித்தார்.
“இந்தியாவில் 150 மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆரோக்யா சேது செயலி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது” என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
माननीय नेताजी का स्वास्थ्य स्थिर है. आज कोरोना पॉज़िटिव होने पर गुड़गाँव के मेदांता में उन्हें स्वास्थ्य-लाभ के लिए भर्ती कराया था.
हम वरिष्ठ डॉक्टरों के निरंतर संपर्क में हैं और समय-समय पर सूचित करते रहेंगे.
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 14, 2020
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தந்தையின் உடல் சீராக உள்ளது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
'MBBS- BDS -மருத்துவ மேற்படிப்பில் BC-MBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தவில்லை.' அடிமைகளின் துரோகத்தை உச்ச நீதிமன்றத்தில் இப்படி அம்பலப்படுத்தியுள்ளார் மத்திய அரசின் Solicitor General துஷார் மேத்தா. 1/2
— Udhay (@Udhaystalin) October 14, 2020
அடிக்கும் கொள்ளைக்கு சிக்கல் வரக்கூடாது என பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுகவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது. மருத்துவ இட ஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழக இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் சிக்கலில் தள்ளி சமூகநீதிக்கு சவக்குழி பறிக்கும் அதிமுக-பாஜக துரோகத்தை தமிழகம் மன்னிக்காது.
— Udhay (@Udhaystalin) October 14, 2020
கர்நாடக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கும் ‘800’ திரைப்படம், முரளிதரன் கிரிக்கெட் உலகில் எப்படி ஆளுமையாக உருவெடுத்தார் என்பது குறித்து மட்டும் பேசும் என்றும், அவரின் அரசியல் நிலைப்பாட்டை கூறாது என்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் தெரிவித்தது. இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களை குறைத்து மதிப்பிடும் வகையில் படக்காட்சிகள் இருக்காது என்றும் உறுதி அளித்தது.
"குட்கா வழக்கிற்குப் பயந்தோ அல்லது நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிற்கு அஞ்சியோ மத்திய அரசின் கமிட்டிக் கூட்டத்தில் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தாமல் தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது அதிமுக அரசு"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் குற்றச்சாட்டு.#MKStalin4TN pic.twitter.com/CbdgfEWr3c
— DMK (@arivalayam) October 14, 2020
மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (ஸ்டார்ஸ்) திட்டத்தை ரூ.5718 கோடி செலவில்அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியில் ரூ.3700 கோடி அளவுக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது.
ஸ்டார் திட்டம், கல்வித்துறை அமைச்சகத்தின், பள்ளி கல்வித்துறையின் கீழ் மத்திய அரசின் புதிய திட்டமாக அமல்படுத்தப்படும். இந்த ஸ்டார்ஸ் திட்டம், மாநிலங்களில் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கான படிப்புகளை உருவாக்குவதற்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,70,392 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 21, அரசு மருத்துவமனைகளில் 31 என மொத்தம் 52 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,423-ஆக அதிகரித்துள்ளது.
வங்கி அதிகாரிகளுக்கான தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட செயல் கண்டத்துக்குரியது . எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டு உரிமையில் பாஜக அரசு கைவைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
பண்டிகைக்கால கூட்ட நெரிசலை சமாளிக்க 196 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு ரயில்கள் இம்மாதம் 20-ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. ரயில்களுக்கான கட்டணம், சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தோடு பொருந்துவதாக இருக்கும்.
ரயில்களின் கால அட்டவணையை மண்டல ரயில்வே அலுவலகங்கள், முன்கூட்டியே அறிவிக்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குஷ்பு மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
#Cabinet approves demerger of Nagarnar Steel Plant from National Minerals Development Corporation Ltd. and strategic disinvestment of the demerged company by selling entire Government of India stake in it to a strategic buyer.
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) October 14, 2020
தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்திலிருந்து, நகர்நர் எஃகு ஆலையை பிரித்து, அந்த நிறுவனத்தில் மத்திய அரசின் முழு பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிவது,சமூக இடைவெளி பின்பற்றுவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது என விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி உதயகுமார் தெரிவித்தார்.
"விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும்; அதிக எண்ணிக்கையிலான நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்; ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.3000 என உயர்த்த வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக தலைமைச் செயலாளர் திரு. கே. சண்முகம் அவர்களின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு. 2021 ஜனவரி.31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
— AIADMK (@AIADMKOfficial) October 14, 2020
நடிகர் ரஜினிகாந்த்திற்குச் சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபம் கொரோனா காரணமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் வரி குறைப்புப் பெறுவதற்கு தனக்கு உரிமை இருப்பதாகச் சொத்து வரி குறித்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேல், சளி, காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். இதனை அடுத்துத் தோற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 6-ம் தேதி போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென்று நேற்று வெற்றிவேலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது.வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, வேளாண் சட்டத்தினால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை வரும் தேர்தலில் ஜீரோவாக இருக்கும் என்றும் பாஜக-வில் பலர் தொடர்ந்து இணைந்து வருவதாகவும் கூறினார்.
அன்று காலை 10.30 மணிக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights