Advertisment

Tamil News Highlights: விருதுநகர் பட்டாசு கடை வெடி விபத்து- விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirunelveli, tirunelveli collector office, four families in same family suicide attempt in tirunelveli collectorate, collector sandeep nanduri ias

Tamil news live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates

விருதுநகர் பட்டாசு கடை வெடி விபத்து

விருதுநகர், எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கம்பாளையம் கனிஸ்கர் பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர், தொழிற் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா விருது
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உலக முதலீட்டு மன்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு பெற்றுக்கொண்டார்.

"ஜெய் ஸ்ரீ ராம் மதம் சார்ந்தது அல்ல"- தமிழிசை சௌந்தரராஜன்
ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் மதம் சார்ந்தது அல்ல; அது உணர்வு சார்ந்தது என புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது, ரசிகர்களின் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சைபர் கிரைம் மோசடி; ரூ.425 கோடி இழப்பு

கடந்த 10 மாதத்தில் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை தமிழர்கள் இழந்துள்ளனர். சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 332 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்

லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் அறிக்கையை அமலாக்கத் துறையிடம் வழங்க உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்டப்பிரிவும் அனுமதி வழங்கவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது

லியோ பட வழக்கறிஞர் குழு சென்ற கார் விபத்து

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளரை சந்தித்து திரும்பிய போது லியோ பட வழக்கறிஞர் குழு சென்ற கார் விபத்தில் சிக்கியது

விழுப்புரம் மின்சார ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு புறநகர் ரயில்கள் நாளை முதல் பரனூர், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று சென்றது

குலசேகரபட்டினம் தசரா திருவிழா; 27 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏரல், சாத்தான்குளம், திருச்செந்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்களை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சிவகாசி பட்டாசு விபத்து; ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்

லியோ படத்திற்கு மீண்டும் சிக்கல்

அனுமதியின்றி லியோ பட பேனர்கள், பிளக்ஸ்-கள் வைக்கக்கூடாது ஏற்கனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட லியோ பட பேனர் பேனர்கள் அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் மனு

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, உள்துறை செயலாளரிடம் படத்தயாரிப்பாளர் தரப்பு மனு இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான், மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன், ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

"இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளோம்" - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

“அந்த நாமம் வாழ்க, இந்த நாமம் வாழ்க என்று சொல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவதில் தவறில்லை. ஜெய் ஸ்ரீராம் என்பது மதத்தைக் குறிக்காது, வெற்றியையும் மன உணர்வையும் குறிக்கும்" 

பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் எமர்ஜன்சி : ஆர்.எஸ்.எஸ் வாதம்

தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் எமர்ஜன்சியை அறிவிக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் தரப்பு வாதம் செய்து வருகிறது. பல மாநிலங்களில் பாதுகாப்பு குளறுபடி உள்ளதால் ஒன்றிய அரசில் எமர்ஜன்சி அறிவிக்க கோரிக்கை வைப்பார்களா? என அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கில் இறுதி உத்தரவு வழங்க நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ககன்யான் திட்ட ஏற்பாடுகள் குறித்து மோடி ஆய்வு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு. 2035-க்குள் இந்திய ஆய்வு மையம் விண்வெளியில் அமைக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தல்

2040-க்குள் இந்தியா சார்பில் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும். செவ்வாய் மற்றும் வீனஸ் கிரக பயணத்தையும் முன்னெடுக்க திட்டம்-பிரதமர் மோடி

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி 

விருதுநகர் மாவட்டம் கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.  
தன்பாலின திருமணங்ளை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்- உச்ச நீதிமன்றத்தின்அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள்   தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை - உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் தீர்ப்பு 
என  தீர்ப்பு 

நீதிபதி ரவீந்திரா பட் மாறுபட்ட தீர்ப்பு

தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன். தன்பாலின திருமணம் தொடர்பான சட்டம் இல்லாமல் அதனை அங்கீகரிக்க முடியாது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது துணையை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது. ஆனால் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுகளுக்கு இல்லை- தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரா பட் தீர்ப்பு

தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும்- உச்ச நீதிமன்றம்

பிற குடிமக்களைப் போலவே தன்பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது.

அதன்படி அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் அவர்களுக்கான இந்த உரிமையை மறுக்க முடியாது

தன் பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை வழங்குவது உள்ளிட்ட அரசின் சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும்;

பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம், எனவே தன்பாலி திருமணத்துக்கும், இணைவதற்கும் உரிய உரிமையை வழங்க வேண்டும்-  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம்- தலைமை நீதிபதி சந்திரசூட்

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்?

ஒரு நபரின் பாலினம் அவரின் பாலின ஈர்ப்புடன் தொடர்புடையதல்ல.

ஒரு திருநங்கையின் திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒரு பாலின உறவில் இருக்க முடியும் என்பதால் அத்தகைய திருமணங்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.

தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, மாற்றுப்பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள், நன்மைகள் மற்றும் சேவைகள், 'QUEER' ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்- தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட்

லியோ 4 மணி காட்சி- அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

லியோ படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்- அமைச்சர் ரகுபதி

திரைத்துறையில் அரசியல் தலையீடு இல்லை. லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்- அமைச்சர் ரகுபதி

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்குமா? 

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் 5 நீதிபதிகள் 4 தீர்ப்புகள் வழங்குகின்றனர்.

தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது.

திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும்- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

தன்பாலின திருமணம் சட்டம்: மத்திய அரசு வாதம்

தன்பாலின திருமணம் : இந்த விவகாரம் தொடர்பான முடிவை நாடாளுமன்றத்திற்கு விட்டுவிடலாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிட்டார். சட்டத்தை மீண்டும் மாற்றி அமைக்கமுடியாது என்றும் கூறினார்.

திரைத்துறையில் அரசியல் தலையீடு இல்லை

 திரைத்துறையில் அரசியல் தலையீடு இல்லை. லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம். இன்றைக்கு திரையுலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசே காரணம்" "திரைத்துறையை முடக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை- அமைச்சர் ரகுபதி.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள்: மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான உதவிகள் செய்ய கல்வித்துறை உத்தரவு

அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.  இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள், வகுப்புவாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details), தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது!.

 தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,515க்கும், சவரன் ரூ. 44,120க்கும் விற்பனை.

தமிழகத்துக்கு கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தல்

 தமிழகத்துக்கு கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தல் - மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி. சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் தங்கம் விற்பதாக விசாரணையில் தகவல். கடந்த 13ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே 11.794 கிலோ தங்கம் பிடிபட்டது. தங்கம் உருக்கும் கடையில் இருந்து 3.3 கிலோ தங்கமும் திருச்சியில் இருந்து சென்னை வந்த காரில் 7.55 கிலோ தங்கமும் சிக்கியது.

 இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்திற்கு அழைப்பு: தீர்மானம் நிராகரிப்பு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்திற்கு அழைப்பு. ஐ.நா.வில் ரஷ்யா கொண்டுவந்த வரை தீர்மானம் நிராகரிப்பு. போர் நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் - ரஷ்யா தீர்மானம். ரஷ்யாவின் வரைவு தீர்மானத்தை நிராகரித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில். தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை - 'ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை" - அமெரிக்கா எதிர்ப்பு.

 நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர்

நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் பைடன். காசா மக்களுக்கு உதவி செய்ய, இஸ்ரேல் - அமெரிக்கா ஒப்புதல். பாலஸ்தீனம், எகிப்து அதிபர்களையும், ஜோர்டன் மன்னர் அப்துல்லா ஆகியோரையும் பைடன் சந்திக்க உள்ளார்.

4 மாவட்டங்களில் இன்று கள ஆய்வு

4 மாவட்டங்களில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு. ஆட்சியர்கள், அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை. வளர்ச்சிப் பணிகள், சட்டம் ஒழுங்கு குறித்து.

தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

 தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு.

மு..ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்

 சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

இன்று மீண்டும் விசாரணை

லியோ' பட சிறப்பு காட்சி தொடர்பாக பட நிறுவனம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

 நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2487 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 511 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 466 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment