தமிழ்நாட்டில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. வகுப்பறைகளில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1ஆம் தேதி (இன்று) முதல் 2ஆம் தேதி (நாளை) வரை தஞ்சை, திருவாரூர், நாகை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இரவு முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக, இதுவரை 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.35 ரூபாய்க்கும், டீசல் 34 காசுகள் அதிகரித்து 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பு 24.74 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.74 கோடியைக் கடந்துள்ளது.உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.41 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு – தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டேரி, மராட்டியத்தை சேர்ந்த கார்த்திகா நாயர், டெல்லியை சேர்ந்த தன்மயி குப்தா ஆகிய மூவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும் பாமகவும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு காரணம் என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து 5 மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடத்தப்போவதாகவும், ஆர்பாட்டம் நடத்தப்படும் தேதி இபிஎஸ்- உடன் கலந்து ஆலோசித்து மாலை அறிவிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கூறியுள்ளார்
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முல்லை பெரியாற்றில் 143 அடிவரை நீர் தேக்க கேரளா அரசு இடையூறு செய்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோயில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை, ஆண்டவன் முன் அனைவரும் சமம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 2 ஆம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இடைத்தரகர்கள் ரூ.500 வசூலிப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வராக்கடனுக்காக கையப்படுத்திய ஹோட்டல் ஒன்றின் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுநாளான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 1 கோடி நிதி உதவி அளித்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் ஜெய்பீம் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளார் அவர்.
என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆர்.ஆர். திரைப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியானது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி , ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி வரை நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போரில் தமிழகம் என்ற நகரும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 % உள்ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மடுவன்கரை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
சென்னை வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் ரூபாய் 108 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தில் ஓரடுக்கை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கம். அதில், சென்னையில் இருந்து மட்டும் 9,806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.