Tamil News Today : அடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார். இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா .
Advertisment
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு, 24ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராக உள்ளார்.
அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisment
Advertisements
நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக தி.முக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அனுமதி அளித்துள்ளார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என குறிப்பிட்டிருந்தார்.
Live Blog
Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
Highlights
22:30 (IST)19 Jan 2021
அமைச்சர் காமராஜ்-ன் உடல் நலம் குறித்து முதல்வர் துணை முதல்வர் விசாரணை
அமைச்சர் காமராஜ்-ன் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், இருவரும் அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்
21:14 (IST)19 Jan 2021
மு.க.ஸ்டாலினைமக்கள் அனுமதிக்கமாட்டார்கள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வர மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்
20:15 (IST)19 Jan 2021
தனித்து நிற்கவும் தயார் - கே.எஸ்.அழகிரி
புதுச்சேரியில் நண்பர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம் என்றுகூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனித்து நிற்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.
20:13 (IST)19 Jan 2021
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
வரும் 22ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
20:12 (IST)19 Jan 2021
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை
பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
19:51 (IST)19 Jan 2021
அமைச்சர் காமராஜ்க்கு தீவிர சிகிச்சை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
17:52 (IST)19 Jan 2021
இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து
ஆஸி. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17:26 (IST)19 Jan 2021
EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV
For all of us in 🇮🇳 & across the world, if you ever score 36 or lesser in life, remember: it isn't end of the world.
The spring stretches backward only to propel you forward. And once you succeed, don't forget to celebrate with those who stood by you when the world wrote you off. pic.twitter.com/qqaTTAg9uW
"வசந்தம் நம்மை பின்னோக்கி நகர்த்துவதே, மீண்டும் நம்மை முன்னோக்கி நகர்த்துவதற்குத்தான், எனவே வெற்றி அடையும் போது அந்த வசந்தத்தை கொண்டாட மறவாதீர்கள். அதோடு உங்களோடு தோளுக்கு தோளாய் நின்றவர்களையும் மறந்து விடாதீர்கள். நாம் ஒவ்வொரு முறையும் தடுமாறும் போது உயரே பறக்கிறோம். நம்முடைய பயத்தை எல்லைகளுக்கு தள்ளியது, கவன குறைவான கிரிக்கெட் விளையாட அல்ல, மாறாக பயம் இல்லா கிரிக்கெட் விளையாடவே. காயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டோம். டெஸ்ட் தொடர்களிலேயே மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
16:12 (IST)19 Jan 2021
கிரிக்கெட் சரித்திரத்தில் இன்று மறக்க முடியாத நாள் - சுமந்த் சி ராமன்
பிரிஸ்பேனில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் சரித்திரத்தில் இன்று மறக்க முடியாத நாள் என்று கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
No matter what happens, we shall always play like the team called INDIA! 🇮🇳
You don't get to see such performances everyday. Take a bow champs!#AUSvINDpic.twitter.com/eiBDsgt04S
An epic series win that'll go down as one of our finest performances ever. Ups and downs but never gave up. On the road, away from home, innumerable injuries but the will to fight always high no matter the odds. A win we will cherish forever. Well done boys. We are so proud.🇮🇳👏 pic.twitter.com/w8d5hVNiJP
EVERY SESSION WE DISCOVERED A NEW HERO.
Every time we got hit, we stayed put & stood taller. We pushed boundaries of belief to play fearless but not careless cricket. Injuries & uncertainties were countered with poise & confidence. One of the greatest series wins!
Congrats India. pic.twitter.com/ZtCChUURLV
Good evening from Gabba!! I am sorry I couldn’t play here but thanks for hosting us and playing some hard cricket during these tough times. We will remember this series forever! @tdpaine36@CricketAus
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்தது இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ் லட்சுமண், இர்பான் பதான் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
13:50 (IST)19 Jan 2021
சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை
சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை என டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதோடு அதிமுக - அமமுக இணைப்பு குறித்து ஊடகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் அதிமுகவில் எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்
13:12 (IST)19 Jan 2021
கிரிக்கெட்- இந்தியா வெற்றி; டெஸ்ட் தொடரை கைப்பற்றியது
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
12:42 (IST)19 Jan 2021
ஸ்டாலின் விமர்சனம்!
சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் முதல்வர் பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்.
12:41 (IST)19 Jan 2021
அமைச்சர்களுடன் ஆலோசனை!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் முதல்வர் பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேச வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
12:09 (IST)19 Jan 2021
வெற்றியை நோக்கிச் செல்கிறது இந்திய அணி!
ஒருநாள் போட்டியின் பரபரப்பைப் போல விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி.. 24.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கில் இந்திய வீரர்கள் ஆடி வருகிறார்கள். கொஞ்சம் விரைந்து ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்
12:03 (IST)19 Jan 2021
மோடி - எடப்பாடி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு நிறைவடைந்தது. தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல். மேலும் அரசியல் ரீதியாகவும் பிரதமருடன் ஆலோசிக்க முதல்வருக்கு வாய்ப்பு கிடைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
12:01 (IST)19 Jan 2021
பொதுக்கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு!
அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. எனவே பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து.
11:17 (IST)19 Jan 2021
ரஜினி விருப்பம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:49 (IST)19 Jan 2021
நலமுடன் இருக்கிறார் கமல்!
கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.; தற்போது நலமுடன் இருக்கிறார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
10:43 (IST)19 Jan 2021
ஸ்டாலின் இரங்கல்!
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு!
ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.
மருத்துவர் சாந்தாவின் மறைவு தமிழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு மருத்துவர் சாந்தாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் சாந்தா மறைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தாவுக்கு அரசு மரியாதை நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tamil News : ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா உரிமைக் குழுவிடம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது இல்லை என கண் கலங்கினார்.
டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நேற்றி சந்தித்தார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதாக தகவல். தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாக தகவல்.