Advertisment

Tamil News Highlights: பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Sri Lanka crisis, IPL 2022, Cannes film festival 2022- 17 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Rajivgandhi, Rajiv Gandhi Assasination case, Perarivalan remission case, Supreme court, ராஜீவ்காந்தி,கொலை வழக்கு,பேரறிவாளன்,உச்ச நீதிமன்றம், எழுத்துப்பூர்வ வாதம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு, no power to state govt to release perarivalan, written arguments, President of india, central govt

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரம்.. ரணில் விக்ரமசிங்கே!

நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது- இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு உரை.

&feature=youtu.be

IPL 2022: டெல்லி அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Tamil News Latest Updates

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும். வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா!

பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்க உள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் மாதவன் நடிப்பில் உருவான 'Rocketry' உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:25 (IST) 17 May 2022
    இராமநாதபுரம்; தந்தை இறந்த சோகத்தோடு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் ஒரே மகளான சுரேகா +2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன் உடல்நலக்குறைவால் திங்களன்று உயிரிழந்தார். செவ்வாயன்று தந்தைக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவிருந்த நிலையில், இன்று நடந்த வணிகவியல் தேர்வை மாணவி மனவலிமையோடு தேர்வெழுதினார். தேர்வு முடிந்து மாணவி வீட்டிற்கு சென்றபிறகு அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.


  • 21:30 (IST) 17 May 2022
    பேரறிவாளன் வழக்கில் மே 18ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    பேரறிவாளன் வழக்கில் மே 18ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது


  • 20:38 (IST) 17 May 2022
    ஜெய்பீம் பட விவகாரம்; நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு

    ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


  • 20:26 (IST) 17 May 2022
    மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளியீடு

    ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


  • 20:18 (IST) 17 May 2022
    'தலித் உண்மைகள்' புத்தக வெளியீட்டு விழா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    ‘இந்தியாவில் தலித் சினிமா’ என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்க திரைப்படங்கள் அமைந்திருப்பதை இயக்குநர் பா.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில்தான் அம்பேத்கரின் கனவு செயல் வடிவம் பெறுகிறது. அம்பேத்கரின் கனவான மக்களாட்சி குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என 'தலித் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 20:17 (IST) 17 May 2022
    'தலித் உண்மைகள்' புத்தக வெளியீட்டு விழா; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    ‘இந்தியாவில் தலித் சினிமா’ என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்க திரைப்படங்கள் அமைந்திருப்பதை இயக்குநர் பா.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில்தான் அம்பேத்கரின் கனவு செயல் வடிவம் பெறுகிறது. அம்பேத்கரின் கனவான மக்களாட்சி குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என 'தலித் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 20:11 (IST) 17 May 2022
    ’ஒன்றியம்’ என்பது அரசியல் கட்சியை வளர்க்கும் ட்ரெண்டாக மாறி வருகிறது – பேரரசு

    ’மத்திய அரசு’ என்பதை ’இந்திய அரசு’ என மாற்ற வேண்டும். ‘ஒன்றியம்’ என்பது தற்போது அரசியல் கட்சியை வளர்க்கும் ட்ரெண்டாக மாறி வருகிறது என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்


  • 19:39 (IST) 17 May 2022
    நேட்டோ அமைப்பில் இணைய ஃபின்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!

    நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது


  • 19:19 (IST) 17 May 2022
    தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்க வேண்டாம் – ஜிக்னேஷ் மேவானி

    தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது. தமிழகத்திற்கு சர்வார்க்கர் தேவையில்லை, பெரியாரைக் கொண்டாடுங்கள், தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை எங்களுக்கு நன்றாக தெரியும் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்


  • 18:38 (IST) 17 May 2022
    செஸ் ஒலிம்பியாட் - மாவட்டம் தோறும் போட்டிகள் நடத்த முடிவு

    சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் செஸ் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


  • 18:07 (IST) 17 May 2022
    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது


  • 17:48 (IST) 17 May 2022
    மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் பதுக்கிவைத்து சாராயம் விற்பனை

    சென்னை, மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது


  • 16:51 (IST) 17 May 2022
    குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு; 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம்!

    குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பத்துள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும். 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும், 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றும் கூறியுள்ளார்.


  • 16:39 (IST) 17 May 2022
    ஐடிஐ கல்விச் சான்றிதழ்; அரசாணை வெளியீடு!

    சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தார். இதன்படி ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிப்பட்டுள்ளது


  • 16:15 (IST) 17 May 2022
    போலி கணக்குகளை குறைக்க வேண்டும் - எலான் மஸ்க்!

    ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை 5 சதவீதத்திற்கு கீழ் குறைக்காத வரையில் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் முன்னேற்றம் இருக்காது என உலகின் நம்பர் 1 பணக்காரான எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


  • 16:11 (IST) 17 May 2022
    ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு - 9 பேரை கைது!

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டக்கரையில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன் மற்றும் சூர்யா ஆகிய 9 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


  • 16:07 (IST) 17 May 2022
    40 மாடி இரட்டை கட்டிடத்தை இடிக்க அவகாசம் நீடிப்பு!

    உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டடங்களை இடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடிபாடுகள் அனைத்தும் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் அகற்றப்படும் என நொய்டா ஆணையம் தரப்பு பதில் தெரிவித்துள்ளது.


  • 15:52 (IST) 17 May 2022
    தனுஷின் தயாரிப்பு நிறுவன யூடியூப் பக்கம் ஹேக்!

    நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான Wunderbar films-ன் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவேற்றப்பட்ட முக்கிய பாடல் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


  • 15:39 (IST) 17 May 2022
    பணவீக்கம் 15.08%ஆக உயர்வு!

    இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத மொத்தவிலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 15.08%ஆக உயர்ந்துள்ளது. ரஷ்ய - உக்ரைன் போர், எரிவாயு விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் பணவீக்கம் அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 15:36 (IST) 17 May 2022
    ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ விசாரணை; சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு!

    டெல்லி, லோதி எஸ்டேட்டில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த விசாரணை சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதேபோல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையும் நிறைவடைந்துள்ளது.


  • 15:00 (IST) 17 May 2022
    சென்னை பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது


  • 14:59 (IST) 17 May 2022
    கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் நடந்த சிபிஐ சோதனை பழிவாங்கும் நடவடிக்கை - கே.எஸ்.அழகிரி

    கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் நடந்த சிபிஐ சோதனை பழிவாங்கும் நடவடிக்கை ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


  • 14:41 (IST) 17 May 2022
    ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப உத்தரவு

    ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்பலாம்.ஆனால் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற உத்தரவு இளங்கலை மருத்துவ படிப்புக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 14:40 (IST) 17 May 2022
    இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படுகிறது

    இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் நாளை புறப்படுகிறது தமிழ்நாடு அரசு சார்பில் ₨80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ₨15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ₨28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருட்கள் நாளை அனுப்பிவைக்கப்படுகிறது.


  • 14:39 (IST) 17 May 2022
    காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மாணவர்களுக்கு எச்சரிக்கை

    பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் நடைபெற்ற நிலையில் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 14:10 (IST) 17 May 2022
    12 ம் வகுப்பு தேர்வில் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

    நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மைக்ரோ ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிட் பேப்பர்கள் பல தேர்வு மையங்களுக்கும் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 14:08 (IST) 17 May 2022
    பருத்தி, நூல் விலை உயர்வு தொடர்பான மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்பிக்கள்

    பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தமிழக எம்.பிக்கள் நாளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயலை மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்கின்றனர்


  • 14:07 (IST) 17 May 2022
    இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

    ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு வரையறைக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம். என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்கவோ தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


  • 14:07 (IST) 17 May 2022
    இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

    ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு வரையறைக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம். என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்கவோ தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


  • 13:46 (IST) 17 May 2022
    தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.


  • 13:45 (IST) 17 May 2022
    நெல்லை, கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 5வது நபர் கண்டுபிடிப்பு

    நெல்லை, கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 5வது நபர் கவிழ்ந்திருக்கும் லாரிக்கு அடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இரும்பு ரோப் வரவழைக்கப்பட்டு உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


  • 13:43 (IST) 17 May 2022
    இலங்கையில் ஆளும் அரசு தரப்பு வெற்றி

    இலங்கை அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாமா என வாக்கெடுப்பில் ஆளும் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.


  • 13:08 (IST) 17 May 2022
    பழங்கால சிலையை விற்க முயன்றதாக 2 பேர் கைது

    சென்னை, பூந்தமல்லி அருகே ₨25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நாகாபரணத்துடன் கூடிய 500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிலைகளை வாங்குவது போல் நடித்து சிலை கடத்தல் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.


  • 12:59 (IST) 17 May 2022
    சிபிஐ ரெய்டில் எதுவும் கண்டுபிடிக்கப்பட இல்லை - ப.சிதம்பரம்

    சிபிஐ ரெய்டில் எதுவும் கண்டுபிடிக்கவில்லை, எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை. FIR-ல் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த ரெய்டு சுவாரசியமாக உள்ளது ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.


  • 12:43 (IST) 17 May 2022
    256 மருத்துவ அவசர சிகிச்சை ஊர்திகள் துவக்கம்

    சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் 256 மருத்துவ அவசர சிகிச்சை ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2ம் கட்டமாக 256 புதிய ஆம்புலன்ஸ்கள்


  • 12:14 (IST) 17 May 2022
    கல்குவாரியில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்

    நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம். தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரணம் அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 12:13 (IST) 17 May 2022
    6 முறை எனது அலுவலகத்தில் சோதனை - கார்த்தி சிதம்பரம்

    எனது அலுவலகத்தில் 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2015இல் 2 முறை, 2017இல் ஒருமுறை, 2018இல் 2 முறை, இன்று மீண்டும் சோதனை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.


  • 11:57 (IST) 17 May 2022
    5ஜி சோதனை கருவி - பிரதமர் வாழ்த்து

    5ஜி பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐஐடிக்கு பிரதமர் மோடி வாழ்த்து. நாட்டில் உள்ள கிராமங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பதில் இந்த கருவி முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி பாராட்டு


  • 11:34 (IST) 17 May 2022
    பள்ளிக்கல்விக்கு காமராஜர், உயர்க்கல்விக்கு கருணாநிதி - ஸ்டாலின் பேச்சு

    உயர் கல்விக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி. பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால், உயர்க்கல்விக்கு கருணாநிதி என தனியார் பல்கலை. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை


  • 11:14 (IST) 17 May 2022
    எல்.ஐ.சி பங்கு விற்பனை - முதல் நாளிலேயே ரூ42,500 கோடி இழப்பு!

    எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ42,500 கோடி இழப்பு. ரூ6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த எல்.ஐ.சி.-யின் சந்தை மதிப்பு ரூ5.57 லட்சம் கோடியாக சரிவு!


  • 11:13 (IST) 17 May 2022
    இந்தியாவில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெப்ப அலை! - உலக வானிலை நிறுவனம்

    இந்தியாவில் வழக்கமாக மே, ஜூனில் தான் வெப்ப அலை வீசும். இந்தாண்டு மார்ச் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. மார்ச்-ன் சராசரி வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.


  • 10:59 (IST) 17 May 2022
    4 மணி நேரத்துக்கும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு!

    சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில்9 இடங்களில் 4 மணி நேரத்துக்கும் சிபிஐ அதிகாரிகள் சோதனை


  • 10:22 (IST) 17 May 2022
    4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை!

    சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் வீட்டில், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.


  • 10:21 (IST) 17 May 2022
    தங்கம் விலை உயர்வு!

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 344 உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 38,168 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,771-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 09:45 (IST) 17 May 2022
    கார்த்தி சிதம்பரம் ட்வீட்!

    இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை. சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெறும் நிலையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட்!


  • 09:26 (IST) 17 May 2022
    கொடைக்கானல் கோடை விழா!

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் மே 24 முதல் 29 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.


  • 09:25 (IST) 17 May 2022
    ப.சிதம்பரத்துக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்பட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 08:59 (IST) 17 May 2022
    நெல்லை குவாரி விபத்து!

    நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 4 பேரில் 2 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 08:42 (IST) 17 May 2022
    நுால் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

    திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து, ஜவுளி வியாபாரிகள் 2வது நாளாக இன்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


  • 08:42 (IST) 17 May 2022
    5ஜி தொழில்நுட்ப சோதனை திட்டம்!

    சென்னை ஐஐடி சார்பாக 5ஜி தொழில்நுட்ப சோதனை திட்டத்தை, பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.


  • 08:41 (IST) 17 May 2022
    மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்!

    மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியானது. மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Tamilnadu Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment