scorecardresearch

Tamil News Highlights: பேரறிவாளனை கட்டியணைத்து நெகிழ்ந்தேன்.. முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Sri Lanka crisis, IPL 2022, Perarivalan case verdict – 18 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்!

Tamil News Latest Updates

தலித் உண்மைகள்புத்தக வெளியீட்டு விழா!

இந்தியாவில் தலித் சினிமா’ என்ற கட்டுரையில் திமுகவின் காலம் என்பது முற்போக்கு, புரட்சிக் கருத்தியல் படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததாக பா.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில்தான் அம்பேத்கரின் கனவு செயல் வடிவம் பெறுகிறது. அம்பேத்கரின் கனவான மக்களாட்சி குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என ‘தலித் உண்மைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு!

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனர் சந்தோஷ் புகாரளித்திருந்தார். மேலும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்ககோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த 29-ம் தேதி வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மே.17 அன்று, வேளச்சேரி காவல் நிலையத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது 295 (A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில், 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் கப்பலை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
22:29 (IST) 18 May 2022
ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேரறிவாளன் சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்

22:26 (IST) 18 May 2022
பேரறிவாளன் இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – மு.க.ஸ்டாலின்

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்

22:19 (IST) 18 May 2022
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உடன் பேரறிவாளன் சந்தித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்

20:38 (IST) 18 May 2022
குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவு ரத்து; சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றாலும், வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை பெற உரிமை உள்ளது என தாயின் வயிற்றில் ஏழரை மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்கில், குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

20:14 (IST) 18 May 2022
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் நடிகர் விஜய் சந்திப்பு

ஹைதராபாத்தில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்

19:50 (IST) 18 May 2022
அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர்- திருமாவளவன்

பேரறிவாளன் விடுதலை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரச் சிக்கலுக்கு தீர்வினை தந்த தீர்ப்பு. அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

19:36 (IST) 18 May 2022
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது -அண்ணாமலை

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. தீர்ப்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்

19:18 (IST) 18 May 2022
நெல்லை கல்குவாரியில் சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கற்களுக்கு இடையில் சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது

19:10 (IST) 18 May 2022
10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு 45,690 மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை 45,690 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

19:01 (IST) 18 May 2022
நூல் விலையை குறைக்க கோரி மத்திய அமைச்சருடன் திமுக குழு சந்திப்பு

பருத்தி நூல் விலையை குறைக்க கோரி டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு சந்தித்து வலியுறுத்தியது

18:51 (IST) 18 May 2022
பழனி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டதாக எச்.ராஜா ட்வீட்

பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கைது செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார். திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்

18:34 (IST) 18 May 2022
முதல்வருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது; நன்றி தெரிவித்தேன் – பேரறிவாளன்

முதலமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நன்றி தெரிவித்தேன். குடும்பத்தின் சூழ்நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார் என பேரறிவாளன் கூறியுள்ளார்

18:09 (IST) 18 May 2022
குஜராத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

குஜராத், மோர்பி தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது

17:57 (IST) 18 May 2022
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், குடும்பத்தினர் சந்திப்பு

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் சந்தித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

17:53 (IST) 18 May 2022
இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் உட்பட 4 பேர் சிறையில் அடைக்க உத்தரவு

இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

17:48 (IST) 18 May 2022
அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் சங்கர் ஆஜர்

சென்னை, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் சங்கர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்

17:43 (IST) 18 May 2022
இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் – கொடியசைத்து அனுப்பி வைத்தார் ஸ்டாலின்

இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

17:41 (IST) 18 May 2022
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.

17:39 (IST) 18 May 2022
சத்தீஸ்கர் மாநில 16 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை – போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மூங்கில்பட்டியில் சத்தீஸ்கர் மாநில 16 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16:29 (IST) 18 May 2022
மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் இன்று மாலை சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் இன்று மாலை சந்திக்க உள்ளனர். பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் பேரறிவாளன், அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார்கள்.

15:58 (IST) 18 May 2022
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி – ஐகோர்ட்

263 பேருக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்துச் செல்ல சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில், பாஸ்கர ராமன் இன்று கைது செய்யப்பட்டு ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

15:17 (IST) 18 May 2022
மு.க.ஸ்டாலின் உடன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் சந்திப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் சந்தித்து வருகிறார். முதல்வருக்கு பாரதியார் கவிதைகள் நூலை பரிசாக அளித்தார்.

14:59 (IST) 18 May 2022
பேரறிவாளனின் விடுதலை : ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

14:26 (IST) 18 May 2022
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

13:50 (IST) 18 May 2022
இவர்கள் குற்றவாளிகள் என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்: பேரறிவாளன் விடுதலை பற்றி கே.எஸ் அழகிரி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்

13:27 (IST) 18 May 2022
பேரறிவாளன் விடுதலை தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதை காலம் காட்டியுள்ளது

மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் 31 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

13:25 (IST) 18 May 2022
பேரறிவாளன் விடுதலை குறித்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு கருத்து

பேரறிவாளன் விடுதலை மிக்க மகிழ்ச்சிகரமானது” முதல்வர் மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

13:23 (IST) 18 May 2022
இளமை காலத்தை பறிகொடுத்துள்ள பேரறிவாளனுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் – திருமாவளவன்

தாயின் இடையறாத சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி காலம் தாழ்ந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் அறம் வென்றுள்ளது. இளமை காலத்தை பறிகொடுத்துள்ள பேரறிவாளனுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என – பேரறிவாளன் விடுதலை குறித்து திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

12:20 (IST) 18 May 2022
நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி – பேரறிவாளன்

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது. நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என விடுதலைக்கு பின் பேரறிவாளன் பேட்டி

11:45 (IST) 18 May 2022
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏற்கிறது – அண்ணாமலை

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

11:26 (IST) 18 May 2022
பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளன் விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் தாமதித்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

11:24 (IST) 18 May 2022
பேரறிவாளன் விடுதலை – தொல்.திருமாவளவன் பாராட்டு

ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி; அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

10:57 (IST) 18 May 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்த்து.

10:49 (IST) 18 May 2022
அண்ணாமலைக்கு தி.மு.க பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 90% திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என விமர்சனம் செய்த நிலையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், சிவசங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்ற வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது!

10:41 (IST) 18 May 2022
மு.க.ஸ்டாலின் தலைமையில்!

சென்னை தலைமை செயலகத்தில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

10:05 (IST) 18 May 2022
2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கர்நாடகாவில் ராட்சத குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

09:21 (IST) 18 May 2022
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது

09:18 (IST) 18 May 2022
ரூ. 2,566 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு!

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ. 2,566 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

08:33 (IST) 18 May 2022
4-வது நாளாக தொடரும் மீட்பு பணி!

நெல்லை கல்குவாரி விபத்தில் பாறைகள் இடையே சிக்கியுள்ள 2 தொழிலாளர்களை மீட்கும் பணி 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

08:33 (IST) 18 May 2022
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நிலையில், ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

08:32 (IST) 18 May 2022
ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது!

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

08:32 (IST) 18 May 2022
தக்காளி விலை உயர்வு!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து குறைந்த நிலையில், கிலோ ரூ. 85 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Web Title: Tamil news today sri lanka crisis ipl 2022 perarivalan case verdict rajiv gandhi assassination case