விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3 உயர்ந்து ரூ. 1,018 ஆகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்ந்து ரூ. 2,507க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இம்மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்துள்ளது. முதல் முறை, ரூ.50 அதிகரித்து 1,015 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
IPL 2022: லக்னோ அணி திரில் வெற்றி!
ஐபிஎல் போட்டியில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி, 20 ஓவரில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் லக்னோ அணி 14 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்குள் 2வது அணியாக நுழைந்தது.
Tamil News Latest Updates
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேரறிவாளனை கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன் – முதல்வர் ஸ்டாலின்!
30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன். pic.twitter.com/M0sOXsYkop
நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திப்பு!

நடிகர் விஜய், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் *பெண்களுக்கான 52கிலோ எடை பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்திய இந்திய வீராங்கனை நிகாத் சரீன் தங்கம் வென்றார்
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தோடர் இன மக்களுடன் உற்சாகமாக நடனமாடினார். அதன்பிறகு மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது. இதனால் அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் கொழும்புவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் கிடைக்காமல் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் ஆட்டோவிற்கு தனி வரிசை, மற்ற வாகனங்களுக்கு தனி வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: “மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. பரிந்துரைக்க முடியுமே தவிர, அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியுள்ளது- நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் பிடிக்கவில்லை என்றால், ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை. அமைச்சரவை உரிமை, ஆளுநர் உரிமை குறித்து உச்சநீதிமன்றம் நேற்று தெளிவாக தீர்ப்பளித்தது. இரு அடுத்தடுத்த தீர்ப்புகளும் மாநில உரிமையை நிலைநாட்டியுள்ளது” என்று கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு, டெல்லி கொண்டு செல்லப்பட்டார். விசா மோசடி வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் படையெடுப்பை தொடங்கியது. அப்போது அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. தூதரக அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு கீவ்வில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷிய சில வாரங்களாக நிறுத்திய நிலையில், அமெரிக்க தூதரகம் மீண்டும் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடுவது குறித்த தமிழக அரசின் உத்தரவு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உறுதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தீட்சிதர்களை கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என தீட்சிதர்கள் தரப்பு வாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தமிழக அரசின் உத்தரவை வைத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த நினைக்க வேண்டாம் என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்து நடைபெற்றது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள பட்டாசு ஆலைகளில் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டையில் இந்தியாவிலேயே முதியவர்களுக்கான முதல் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கு 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர், சிதம்பரம் காந்தி சிலை அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வியில் அதிமுக நிகழ்த்திய சாதனைகளை திமுக புரிந்ததாக சொல்வதா? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது
நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். நெல்லை கல்குவாரி விபத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி என கருதப்படுவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்
சென்னை, அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து பேசினர்
ஞானவாபி மசூதி ஆய்வுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஞானவாபி வழக்கு விசாரணையை தொடர வேண்டாம் என வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரம் கோவை மாவட்டம். உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது. கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும்- கோவையில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை!
சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ. 1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை, வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தொல்பொருள் கண்காட்சி & ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல். https://t.co/KTm5gRDkAE
— M.K.Stalin (@mkstalin) May 19, 2022
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வரும் 30ம்தேதி நடைபெறும். அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள மேயர் பிரியா ராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்துகிறது. வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு முக்கிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ’பொருநை’ கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார். அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயேம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ. 100க்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை 20வது நாளாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு ஊதியம், இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.