Advertisment

Tamil News Today : தமிழகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கோலாகலம்..மசூதிகளில் சிறப்புத் தொழுகை!

Tamil Nadu News, Tamil News Updates, IPL 2022 Latest News May 2 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கோலாகலம்..மசூதிகளில் சிறப்புத் தொழுகை!

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். அந்தவகையில், இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான நோன்பு காலம் முடிந்து ஈகைத் திருநாள் எனும் ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மேலும், தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Advertisment

நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு - 2 பேர் கைது

நாமக்கல்லில் காளிசெட்டிபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு. சிறுமியை கடத்தியதாக அதே ஊரை சேர்ந்த பொன்னுமணி, மணிகண்டன் ஆகியோர் கைது.

2 மாத கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு.

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 26வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனை.

பிரதமர் 3 நாள் வெளிநாடு பயணம்

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம். ஜெர்மனிக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:39 (IST) 02 May 2022
    வேலூர் மத்திய சிறையில் செல்போன் மற்றும் பேட்டரி பறிமுதல்

    வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் காவலர்கள் சோதனையின் போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.


  • 22:23 (IST) 02 May 2022
    ரம்ஜான் பண்டிகை - சசிகலா வாழ்த்து

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வி.கே. சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து இன்புறும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகள் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.


  • 20:56 (IST) 02 May 2022
    இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

    இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


  • 19:36 (IST) 02 May 2022
    நூல் விலை உயர்வு; திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மே 16 முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

    நூல் விலையில் கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதால் திருப்பூர் அனைத்து தொழில் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் திருப்பூரில் மே 16 முதல் மே 21 வரை பொது வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.


  • 18:46 (IST) 02 May 2022
    கொரோனா காலத்தில் பாஸ்: மதிப்பெண் சான்றிதழ் கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட் உத்தரவு

    கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், கேரளா பள்ளியில் 11ஆம் வகுப்பு சேருவதற்காக மதிப்பெண் சான்று கோரி நக்‌ஷத்ரா பிந்த் என்ற மாணவி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு, அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 18:02 (IST) 02 May 2022
    சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்

    மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சையானதைத் தொடர்ந்து, டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவெல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


  • 17:42 (IST) 02 May 2022
    ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ‘சரக் சபத்’ என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மார்ச் 11 ஆம் தேதி ‘சரக் சபத்’ என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவும் நிலையில், இபோகிரேடிக், சரக் சபத், கெடவரிக் உறுதி மொழிகளை மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி டீன் அல்லி தனியார் தொலைக்காட்சி ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.


  • 17:32 (IST) 02 May 2022
    மக்கள் ஒற்றுமை வளர்ந்து மனிதநேயம் மலர்ந்து நாடு வளம்பெற ரம்ஜான் வாழ்த்து - விஜயகாந்த்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் ஒற்றுமை வளர்ந்து, மனிதநேயம் மலர்ந்து நாடு வளம்பெற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


  • 17:07 (IST) 02 May 2022
    மருத்துவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்ப பெற கோரிக்கை

    மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரத்னவேல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.


  • 16:39 (IST) 02 May 2022
    திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


  • 16:21 (IST) 02 May 2022
    ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் 2.5 லடசம் கொள்ளை

    திருச்சி: ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் நாச்சிமுத்து என்பவர் வங்கியில் இருந்து ₨2.5 லட்சம் பணத்தை எடுத்து சென்ற போது மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.


  • 16:19 (IST) 02 May 2022
    மாணவி உயிரிழப்பு - ஷவர்மா கடைகளை மூட உத்தரவு

    கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழககில், காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுவரை அந்த உணவக த்தில் ஷவர்மா சாப்பிட்ட 45 பேருக்கு பாதிப்பு, ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


  • 16:18 (IST) 02 May 2022
    மாணவி உயிரிழப்பு - ஷவர்மா கடைகளை மூட உத்தரவு

    கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழககில், காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுவரை அந்த உணவக த்தில் ஷவர்மா சாப்பிட்ட 45 பேருக்கு பாதிப்பு, ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


  • 16:17 (IST) 02 May 2022
    மும்பை பங்குச்சந்தை விபரம்

    மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 84.88 புள்ளிகள் சரிந்து 56,975.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 33.45 புள்ளிகள் சரிந்து 17,069.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.


  • 15:36 (IST) 02 May 2022
    மாணவர்கள் நலன் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள்

    மாணவர்கள் நலனுக்காக வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் முன்னெடுப்புகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்

    அதன்படி கலை, விளையாட்டுத் திறன், மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்

    மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


  • 14:56 (IST) 02 May 2022
    கீழடியில் சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு

    சிவகங்கை மாவட்டம் கீழடி 8ம்‌ கட்ட அகழாய்வில் சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்


  • 14:47 (IST) 02 May 2022
    கடும் வெப்பம்; பிரதமர் அலுவலகம் இன்று மாலை அவசர ஆலோசனை

    நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா இன்று மாலை அவசர ஆலோசனை நடத்துகிறார்


  • 14:42 (IST) 02 May 2022
    கூட்டுறவு சங்க தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கடந்த 2020ல் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கு நடத்திய தேர்வு முடிவுகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என கூட்டுறவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தேர்வு நடைமுறை முழுமையாக முடிவடைந்த நிலையில் காலியிடங்கள் அதிகமாகி விட்டதாக தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், புதிய தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத வகையில் சிலர் வயது வரம்பை கடந்திருக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது


  • 14:23 (IST) 02 May 2022
    தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை

    மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடைவிதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். பல்லக்கை மனிதர்கள் தூக்கிச் செல்ல திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


  • 13:55 (IST) 02 May 2022
    அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவோம் - ஓபிஎஸ், ஈபிஎஸ்

    அனைவரிடமும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றுவோம். இஸ்லாமிய பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளுக்கு நல்வாழ்த்துகள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்


  • 13:37 (IST) 02 May 2022
    இஸ்லாமியர்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்பது திராவிட இயக்கம் – ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

    பெரும்பான்மைவாதமும், மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்க பூங்காவாக தமிழ்நாட்டைக் காக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்று வருகிறது. ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமிய பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம் என இசுலாமிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்


  • 13:14 (IST) 02 May 2022
    இலங்கைக்கு உதவும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி- மு.க.ஸ்டாலின்

    இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். மேலும், இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்


  • 13:02 (IST) 02 May 2022
    மத்திய மின்துறை அமைச்சர் அவசர ஆலோசனை!

    மின்சார தட்டுப்பாடு தொடர்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில மின்துறை அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பிற்பகல் 1 மணிக்கு காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்துகிறார்.


  • 13:02 (IST) 02 May 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 12:47 (IST) 02 May 2022
    நீட் தேர்வு விண்ணப்பம்!

    நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


  • 12:46 (IST) 02 May 2022
    மின்சார தட்டுப்பாடு.. அமித்ஷா ஆலோசனை!

    நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் ஆர்.கே.சிங், அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.


  • 12:46 (IST) 02 May 2022
    மோடியால் சீர்குலைந்த பொருளாதாரம்.. ராகுல் விமர்சனம்!

    கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியின் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை கொண்டு ஆய்வுப் படிப்பே மேற்கொள்ளலாம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.


  • 12:23 (IST) 02 May 2022
    இலங்கை மீனவர்கள் கைது!

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை திருகோணமலை மீனவர்கள் 6 பேர், படகுடன் கைது செய்யப்பட்டு, காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கடலோர பாதுகாப்புக் குழும போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைக்கப்பட்டனர்.


  • 12:23 (IST) 02 May 2022
    எஸ்.பி.வேலுமணி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

    டெண்டர் முறைகேடு வழக்கில், முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தயாராகவுள்ள குற்றப்பத்திரிகையை இம்மாத இறுதியில் தாக்கல் செய்வோம். முதற்கட்ட விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசிடம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 11:45 (IST) 02 May 2022
    பாட புத்தகங்களில் திருத்தங்கள் செய்ய வாய்ப்பில்லை.. லியோனி!

    தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களில் திருத்தங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை. 2022-23ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை புகுத்துதல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய திருத்தம் போன்ற மாற்றங்கள் இருக்காது என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி கூறியுள்ளார்.


  • 11:45 (IST) 02 May 2022
    திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,000க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


  • 11:13 (IST) 02 May 2022
    நடிகை மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு!

    நடிகை மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


  • 10:54 (IST) 02 May 2022
    தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம்

    போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற சில மாநில அரசுகளின் உத்தரவுகள் திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • 10:46 (IST) 02 May 2022
    தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

    கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹால் டிக்கெட் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் என அறிவிப்பு


  • 10:37 (IST) 02 May 2022
    வைகோவின் ரம்ஜான் வாழ்த்து

    சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.


  • 10:11 (IST) 02 May 2022
    ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி

    ஐரோப்பிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் உடன் இருநாட்டு உறவுகள் தொடர்பாக மோடி இன்று பேச்சுவார்த்தை


  • 09:46 (IST) 02 May 2022
    கொடநாடு வழக்கு: ஆறுகுட்டி உதவியாளரிடம் விசாரணை

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று நாராயணசாமியிடம் விசாரணை


  • 09:44 (IST) 02 May 2022
    தங்கம் விலை சரிவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ384 குறைந்து ஒரு சவரன் ரூ38840க்கு விற்பனை. ஒரு கிராம் வெள்ளி ரூ67.60க்கு விற்கப்படுகிறது.


  • 09:32 (IST) 02 May 2022
    மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

    நாளை மறுநாள் தொடங்குகிறது அக்னி வெயில்; வெயில் வறுத்தெடுக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்.


  • 09:08 (IST) 02 May 2022
    இந்தியாவில் மேலும் 3,157 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 3,157 பேருக்கு கொரோனா தொற்று - 26 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மேலும் 2,723 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,500 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்


  • 08:56 (IST) 02 May 2022
    கடும் வெயில் : ஒடிஷாவில் காலை 6 மணிக்கு பள்ளி திறப்பு

    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒடிசாவில் பள்ளி வகுப்பு நேரம் காலை 6 மணி முதல் 9 மணியாக மாற்றியமைப்பு. இன்று முதல் அமலாகிறது


  • 08:38 (IST) 02 May 2022
    நீட் தேர்வு - அவகாசம் நீட்டிப்பு

    நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 6-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு. இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்


  • 08:24 (IST) 02 May 2022
    விமானம் தரையிறங்கும்போது விபத்து - பயணிகள் காயம்

    மேற்கு வங்கத்தில் மோசமான வானிலை காரணமாக துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து. விமானம் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதி


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment