Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் நாளை அதிகாலை வரை அமலில் இருக்கும். ஊரடங்கை கடைபிடிக்க, பொதுமக்களுக்கு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
96% பேர் தடுப்பூசி போடவில்லை" - மும்பை மாநகராட்சி ஆணையர்
மும்பையில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் 1900 பேரில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என மும்பை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்,டீசல் அப்டேட்
66ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழப்பு. ஒரே நாளில் 1525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:33 (IST) 09 Jan 2022தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி
தமிழகத்தில், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை வருகிற 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார்.
- 20:20 (IST) 09 Jan 2022திருச்சியில் முககவசம் அணியாத 600 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் முககவசம் அணியாத 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ1.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 589 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ72,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
- 20:16 (IST) 09 Jan 2022தமிழகத்தில் இன்று மேலும் 12895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது இதனால் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 12895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 12 பேர் பலியாகியுள்ளனர்.
- 19:13 (IST) 09 Jan 2022உடலில் சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில், உடலில் சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதால் தாய் சூடு வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
- 18:26 (IST) 09 Jan 2022திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
- 18:25 (IST) 09 Jan 2022நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 402 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 402 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதில் மக்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 200 பேர், மாநிலங்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேர் மற்றும் இதர அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 133 பேர் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 18:23 (IST) 09 Jan 2022அதிகரித்து வரும் கொரோனா : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
- 18:22 (IST) 09 Jan 2022கேரளாவில் மேலும் 6,238 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் மேலும் 6,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 30 பேர் பலியாகியுள்ளனர்.
- 17:32 (IST) 09 Jan 2022பிரதமர் மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது தடுப்பூசி பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
- 16:50 (IST) 09 Jan 2022“தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்று ஞாயிறு முழு ஊரடங்கு 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள், கடைகள், மண்டபங்கள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தகுதியுடையவர்கள் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிகளை தயக்கம் காட்டாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- 16:46 (IST) 09 Jan 2022'தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஊடகம் அல்ல' - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஊடகம் அல்ல, சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு என தொண்டர்களிடம் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
- 16:44 (IST) 09 Jan 2022கொரோனா பரவல்: மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வர விலக்கு
இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் ஜனவரி 31.ம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
- 16:16 (IST) 09 Jan 2022தலைமை தேர்தல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!
பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
- 16:04 (IST) 09 Jan 2022பொங்கல் பரிசு தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
- 15:49 (IST) 09 Jan 2022ஆக்சிஜனுடன் கூடிய 200 படுக்கைகள் தயார் - அமைச்சர் சா மு நாசர்!
கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 200 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவுக்காக 80 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாநில பால்வளத் துறை அமைச்சர் சா மு நாசர் தெரிவித்துள்ளார்.
- 15:46 (IST) 09 Jan 2022சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி சான்றிதழ் எண் - தென்னக ரயில்வே!
சென்னை புறநகர் ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டில், தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சிடப்படும் எனவும், பயணிகள் ஆதார் எண், சீசன் டிக்கெட், கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி புதிய சீசன் டிக்கெட் பெறலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
IMPORTANT NEWS -
— DRM Chennai (@DrmChennai) January 9, 2022
Please go through the press release to know how Chennai division will implement the compulsory vaccination certificate rule for all commuters travelling on our suburban sections, in view of restrictions imposed by the state government of Tamil Nadu from Monday. pic.twitter.com/kXsbUwm13r - 15:25 (IST) 09 Jan 202225வது தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
டெல்லியில் விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி நடைபெறும் 25வது தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- 15:24 (IST) 09 Jan 2022ஆளுநர்கள் ஆர்.என்.ரவி - தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு!
சென்னை, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார்
- 15:23 (IST) 09 Jan 2022மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் - பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கொரோனா பரவல் வேகமெடுக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் 5% கீழ் செல்லும் வரையில் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், coronavirus பரவலின் தாக்கம் 5% கீழ் செல்லும் வரையில் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். pic.twitter.com/GvnUgzgkYF
— O Panneerselvam (@OfficeOfOPS) January 9, 2022 - 15:19 (IST) 09 Jan 2022புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடல்
கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:16 (IST) 09 Jan 2022முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 12-ம் தேதி தொடக்கம்
முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார். முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
- 13:48 (IST) 09 Jan 2022பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் தொகுப்பு திட்டம் குறித்து சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் எந்த புகாரும் இன்றி அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்
- 13:21 (IST) 09 Jan 2022முக கவசம் அணிந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – டெல்லி முதலமைச்சர்
டெல்லியில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
- 13:15 (IST) 09 Jan 2022ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்
- 13:10 (IST) 09 Jan 2022கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிடம் முதல்வர் நலம் விசாரிப்பு
கொரோனா சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்
- 12:50 (IST) 09 Jan 2022ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் மீது ஊரடங்கை திணித்து பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட கட்டுபாடுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 12:43 (IST) 09 Jan 2022வேலூர், சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
வேலூர், சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- 12:18 (IST) 09 Jan 2022தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தென் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 12:11 (IST) 09 Jan 2022சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வார்டு வாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
- 11:43 (IST) 09 Jan 2022டெல்லி நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா
டெல்லி, நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 400 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
- 11:16 (IST) 09 Jan 2022ஒரே நாளில் ரூ218 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலம் ரூ.50.04 கோடி, திருச்சி மண்டலம் ரூ42.59 கோடி, சேலம் மண்டலம் ரூ40.85 கோடி, மதுரை மண்டலம் ரூ.43.20 கோடி, கோவை மண்டலம் ரூ.41.28 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
- 11:16 (IST) 09 Jan 2022ஒரே நாளில் ரூ218 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டலம் ரூ.50.04 கோடி, திருச்சி மண்டலம் ரூ42.59 கோடி, சேலம் மண்டலம் ரூ40.85 கோடி, மதுரை மண்டலம் ரூ.43.20 கோடி, கோவை மண்டலம் ரூ.41.28 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
- 10:47 (IST) 09 Jan 2022கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தற்போது, மீண்டும் மக்கள் சேவைக்கு திரும்பிவிட்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
- 10:43 (IST) 09 Jan 2022அதிகரிக்கும் கொரோனா - மோடி இன்று ஆலோசனை
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்
- 09:49 (IST) 09 Jan 2022ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
- 09:25 (IST) 09 Jan 2022ஒன்றரை லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 327 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 09:13 (IST) 09 Jan 2022தூர்தர்ஷனின் செய்திப்பிரிவு இயக்குனர் பொறுப்புக்கு தமிழ் தெரியாதவர் - சு வெங்கடேசன் கேள்வி
தமிழக மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் முதன்மை நோக்கத்தை கொண்ட அரசு நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்திப்பிரிவு இயக்குனர் பொறுப்புக்கு தமிழே தெரியாத ஒருவரை நியமித்துள்ளது சரியா? என மதுரை எம்.பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
- 09:13 (IST) 09 Jan 2022தூர்தர்ஷனின் செய்திப்பிரிவு இயக்குனர் பொறுப்புக்கு தமிழ் தெரியாதவர் - சு வெங்கடேசன் கேள்வி
தமிழக மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் முதன்மை நோக்கத்தை கொண்ட அரசு நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்திப்பிரிவு இயக்குனர் பொறுப்புக்கு தமிழே தெரியாத ஒருவரை நியமித்துள்ளது சரியா? என மதுரை எம்.பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
- 08:47 (IST) 09 Jan 2022மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கொரோனா
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.