Advertisment

Tamil News Highlights: நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 12-ம் தேதிக்கு மாற்றம்

Tamil News Today, Tamil News Live, Israel-Palestine, TN Assembly: இன்று நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Nagai Sri Lanka ship transport

Tamil news live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 506-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil news updates

நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து 12-ம் தேதிக்கு மாற்றம்

நாகை-இலங்கை இடையே இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம். இன்று புறப்பட வேண்டி பயணிகள் கப்பல் 12-ம் தேதி காலை புறப்படும் என அறிவிப்பு

இஸ்ரேலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழப்பு: இந்தியா கண்டனம்

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நேபாளத்தை சேர்ந்த 10 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வெளியுறவு மந்திரி சவுத்துக்கு அனுப்பிய கடிதத்தில், தூதர் ஸ்ரீவஸ்தவா, நேபாள மாணவர்களின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார்இ

இஸ்ரேலில் தற்போது 4,500 நேபாள நாட்டவர்கள் பராமரிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் ‘கற்றல் மற்றும் சம்பாதித்தல்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 265 நேபாள மாணவர்கள் இஸ்ரேலில் பயின்று வருகின்றனர். அவர்களில் 119 பேர் வேளாண்மை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், 97 பேர் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 49 பேர் சுடூர் பாஸ்கிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் விவசாயத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்துக்கு 691 மில்லியன் யூரோ நிதியுதவி நிறுத்தம்? ஐரோப்பிய ஒன்றியம்

691 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பாலஸ்தீனிய வளர்ச்சி உதவிகளை பரிசீலனைக்கு உட்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப்புற மற்றும் விரிவாக்க ஆணையர் ஆலிவர் வர்ஹெலி (Oliver Várhelyi) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத்தின் அளவு "ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.

கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண முடியாது என்பதால் சுப்ரீம் கோர்ட் செல்கிறோம்  - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: “காவிரி நீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் நடைமுறைப்படுத்த வேண்டும்; கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண முடியாது என்பதால்தான் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறோம்” எறு கூறினார்.

மகாளய அமாவாசை: அக். 13-ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

 மகாளய அமாவாசையை முன்னிட்டு அக். 13-ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

special bus

மத்தியப் பிரதேசத் தேர்தலில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் போட்டி 

மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 57 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நில உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காசா எல்லையைக் கைப்பற்றிவிட்டோம் - இஸ்ரேல் அறிவிப்பு

காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது; காசா பகுதிக்குள் உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிகப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதலை மேம்படுத்தியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் மேல்முறையீடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தண்டிக்கப்பட்ட முதன்மை குற்றவாளியான IFS அதிகாரி நாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை - ராகுல்காந்தி

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3 முதலமைச்சர்கள் OBC பிரிவை சேர்ந்தவர்கள் ஆனால், பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே OBC பிரிவை சேர்ந்தவர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை 

ஆர்.என்.ரவி இரங்கல்

“கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்”

எடப்பாடி பழனிசாமி அதிரடி

காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பேசவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தவறாக கூறுகிறார். பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன் துணிச்சல் குறித்து நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நேருக்கு நேர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானத்தில் உள்ளது.

காவிரி நீர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 9 பேர் பலியானதை தொடர்ந்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

உயர் நீதிமன்றங்களில் 14 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்யும் கொலீஜியம் பரிந்துரை மீது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளது 

காவிரி நீர் தீர்மானம் : அதிமுக ஆதரவு

காவரி நீர் பெறுவது தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ள எடப்பாடி பழனிச்சமி கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற அதிமுக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு

விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் ஆட்சி சட்டரீதியான நடவடிக்கை எடுத்தது; திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் உள்ளது;

அணை பாதுகாப்பு மசோதா மத்திய அரசு கொண்டு வந்தபோது எதிர்த்தது என்ன காரணம்?; ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்;

விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை; நதிகளை தேசியமயமாக்க வேண்டும், அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்;

தீர்வை நோக்கியதாக தீர்மானம் இல்லை- சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு

மிசோரம் - நவம்பர் 7

மத்திய பிரதேசம் - நவம்பர் 17

ராஜஸ்தான் - நவம்பர் 23

சத்தீஸ்கர் -  நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக)

தெலங்கானா - நவம்பர் 30

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3

காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருக்கும் - மு.க.ஸ்டாலின்

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசனப் பகுதியில் 2021ம் ஆண்டில் 46.2 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2022ம் ஆண்டு 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தியும் நடந்துள்ளது

காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருக்கும்.  நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை.

9.19 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கவேண்டிய நிலையில் 2.28 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது

சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் – மு.க.ஸ்டாலின்

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) இன்று அறிவிக்கிறது.

நாட்டு வெடி கடையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில், நாட்டு வெடிகள் தயாரிக்கும் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை சாதி பிரச்சனையாக பார்க்கக் கூடாது- மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சட்டப்பேரவையில் இன்று- அமைச்சர் கே.என்.நேரு பதில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிணறுகள் அமைத்து, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முயற்சி நடக்கிறது- சட்டப்பேரவையில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

ஒரு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கு மேல் கால்நடைகள் இருந்தால் அங்கு கால்நடை மருந்தகமும், 5 ஆயிரத்திற்கு மேல் கால்நடைகள் இருந்தால் மருத்துவமனையும் அமைக்கப்படுகிறது - சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

ந்திரபாபு நாயுடு முன்ஜாமின் மனு தள்ளுபடி

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமின் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அமராவதி நகரில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட் மற்றும் அங்கல்லு கலவர வழக்குகளில் அவர் முன்ஜாமின் கோரியிருந்தார்.

ஏற்கனவே கைதாகியுள்ள திறன்மேம்பாட்டு திட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது

5-வது நாளாக சோதனை

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் 5-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நட்த்துகின்றனர்.

அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- பெண் மரணம், 

அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஆஸி. சபாநாயகர் 

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்டு வருகிறார் ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் சார்பில் வரவேற்பு அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு பேச்சு.

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன்  ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம் 

பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர். காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம். தனி தீர்மானத்தை முன் மொழிய உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் 

சட்டம், ஒழுங்கு நிலவரம், காவிரி விவகாரம், ஆசிரியர் போராட்டம்-காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு. பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்

அப்பாவு உடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சந்திப்பு. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் சந்திப்பு

5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு 

மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கான ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 

கச்சா எண்ணெய் விலை 4.7% வரை உயர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம். சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.7% வரை உயர்வு

தமிழக சட்டப்பேரவை நிகழ்வை பார்வையிடும் ஆஸ்திரேலியா சபாநாயகர் 

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை 14 முக்கிய பிரமுகர்கள் இன்று பார்வையிடுகின்றனர். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்கள் பார்வையிடுகின்றனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. காவிரி நீரை திறந்து விடக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

10 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி. நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி

தமிழக சட்டபேரவை மழைக்கால கூட்டத்தொடர் 

தமிழக சட்டபேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. காவிரி விவகாரம் குறித்து முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்கிறார், முதல்வர் ஸ்டாலின்

அரசுப் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளி திரும்பும் மாணவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Israel Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment