பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 541-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
2 ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் ஆகிய 2 நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை மட்டும் 152 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
சென்னையில் இன்று (நவம்பர் 14) ஒரே நாளில் 152.28 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி நவம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை 210 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 14 விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கனமழை எதிரொலி: கடலூரில் நவ. 14 -ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை - நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிவிப்பு
சென்னை - நெல்லை இடையே வாராந்திர கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் டிசம்பர் 28 வரை வாரந்தோறும் வியாழக்கிழமை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்; சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 2.15-க்கு நெல்லை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் மதுராந்தகம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடலூரில் 3 நாட்களில் பட்டாசு விபத்தில் 387 பேர் காயம்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் 387 பேர் காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக 348 பேரும் உள்நோயாளியாக 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக 29 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் அரசு மருத்துவமனை துணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ. 14 விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்து சிறுமி பலி - முதல்வர் நிவாரணம்
ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்து பலியான சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சிறுமி நவிஷ்காவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சமும் நிதியுதவி அறிவித்தார்.
ஜவ்வாது மலைப் பகுதியில் வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாது மலைப்பகுதியில் கூட்டாக 4 பேர் நாட்டு துப்பாக்கிகளுடன் மான் வேட்டைக்கு சென்ற நிலையில், ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
விடுமுறை நாளில் மெரினா கடற்கரையில் அலைமோதும் மக்கள் கூட்டம்
இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குடும்பம் குடும்பமாக பல்வேறு பொழுதுபோக்கு பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 2 நாட்களில் 20,000 பார்வையாளர்கள் வருகை
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். தீபாவளி தொடர் விடுமுறை ஒட்டி பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பட்டாசு வெடித்து பைக் வீலிங் செய்த இளைஞர் கைது
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் கைது செய்ப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த அஜய் என்பவரை அரசு மருத்துவமனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எலி உலவிய கேண்டீனை மூட உத்தரவு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கேண்டீனை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எலி உண்ட உணவு பண்டங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், தனியார் கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பு; சல்மான் அறிவுரை
"நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை ரசிப்போம்" என்று தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விவகாரம் தொடர்பாக நடிகர் சல்மான் கான் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்
பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மோர்னே மோர்கல் விலகியுள்ளார். உலகக்கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாத நிலையில் பதவி விலகியுள்ளார்
தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது இலங்கை சென்ற விமானம்
சென்னையில் இருந்து 28 பயணிகளுடன், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு புறப்பட்டுச் சென்ற அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. இந்த விமானம் நாளை காலை மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி; கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு
தீபாவளிக்கு, சென்னையில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு காற்று மாசு குறைவாக இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்
பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
2,095 வழக்குகள் பதிவு
தீபாவளி பண்டிகையின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலெர்ட்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு - வானிலை மையம்
சென்னை கார் விபத்து- விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
சென்னை அண்ணா நகரில் நடந்த விபத்தில், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆசிப் என்பவர் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் உறுதி
அதிகாலை 2.30 மணியளவில் ஆசிப் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார். விபத்து நடந்த போது ஆசிப் உடன் வந்த ரமணா மற்றும் பெண் தோழி என 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது
சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு
சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை: இதுவரை சுமார் 150 டன் பட்டாசு கழிவுகள் தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது -மகேசன், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
பைக்கில் பட்டாசு வெடித்து கொண்டே வீலிங் செய்த இளைஞர்கள்
பைக்கில் பட்டாசு வெடித்து கொண்டே வீலிங் செய்த இளைஞர்கள். சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அதிர்ச்சி வீடியோ. 'பைக் விலாகிங்' என்ற பெயரில் சாலையில் அத்துமீறும் இளைஞர்களால் அச்சம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பொதுமக்கள்
டெல்லியில் மீண்டும் மோசமான காற்றின் தரம்
தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் மோசமடைந்த காற்றின் தரம். பனியுடன் சேர்ந்து, புகைமூட்டமாக காட்சியளிக்கும் டெல்லி. டெல்லி பல்கலை. பகுதியில், 313 என்ற மோசமான அளவில் பதிவான காற்றின் தரக்குறியீடு. காலை 11 மணிக்கு புகைமூட்டமாக காட்சியளிக்கும் டெல்லி
தங்கம் - வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கும், கிராம் ரூ.5,590க்கும் விற்பனை. வெள்ளி கிராமுக்கு ரூ.75.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 38 பேர் சிகிச்சை
சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஹெராயின் பறிமுதல். ரூ.22 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ ஹெராயின் போதை பவுடர் பறிமுதல். ஹெராயினை கடத்தி வந்த ஜான் ஜுட் தவாஸ் என்ற நபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை
திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சஷ்டி மண்டபத்தில் யாக சாலை பூஜையுடன் தொடக்கம்
மரத்தில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வந்துவிட்டு திரும்பும் போது விபத்து
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரே நாளில் 364 அவசர அழைப்புகள்
தீபாவளி கொண்டாடத்தின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் அவசர உதவிகளுக்குத் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 364 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை தகவல். இதில் 47 உள் நோயாளிகளும், 622 புற நோயாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விளக்கம்.
சென்னையில் மட்டும் 102 பட்டாசு விபத்து தொடர்பான அழைப்புகளும், பிற தீ விபத்து தொடர்பாக 9
அழைப்புகளும் வந்துள்ளன.
சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல். பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள்.
இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல். இந்த பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் தெரிவித்த சென்னை மாநகராட்சி அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும்- மாநகராட்சி அதிகாரிகள்
தீபாவளி: சென்னையில் 581 வழக்குகள் பதிவு
தீபாவளி பண்டிகை, சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு
அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு - காவல்துறை தகவல்
திருப்போரூர்: கந்தசஷ்டி லட்சார்ச்சனை கொடியேற்றம்
திருப்போரூர் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா கொடியேற்றம். திருப்போரூர் முருகன் கோயில் வட்ட மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னையில் காற்றின் தரம் மோசம்
சென்னையில் விடிய விடிய வாணவேடிக்கை - பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்றின் தரம் மேலும் மோசம் அடைந்து தரக்குறியீடு 200-ஐ கடந்தது
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 170-க்கு மேல் பதிவான நிலையில், தற்போது 200-ஐ கடந்தது
அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 256, ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவு
பட்டாசு வெடிக்க அரசு சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பட்டாசு வெடித்த பொதுமக்கள்
காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, No2. s02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரிப்பு
தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கடந்த 10ம் தேதி சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 83 - தற்போது 200-ஐ கடந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.