பெட்ரோல், டீசல் விலை
542-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும். காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் கனமழை பதிவாக வாய்ப்பு
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதாக விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியள்ளது.
திருவள்ளூரில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவிப்பு
சென்னை, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
விழுப்புரம் அருகே துக்க வீட்டில் ஃபிரீஸர் பாக்ஸில் மின்கசிவு; 15-க்கும் மேற்பட்டோர் காயம்
விழுப்புரம் அருகே துக்க வீட்டில் வைக்கப்பட்ட ஃபிரீஸர் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை: புதுச்சேரி, காரைக்காலில் நவ. 15 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (15.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ. சங்குமணி நியமனம்
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் ஜெ. சங்குமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றதையடுத்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி, பதவி உயர்வில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு 3 ராஜபக்சேக்கள் பொறுப்பு - இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என்று இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு
சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 2,149 களப்பணியாளர்களுடன், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பானது; கேன் வில்லியம்சன்
இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
பொதுத் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும்; அன்பில் மகேஷ்
10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
கனமழை காரணமாக 2 விமானங்கள் ரத்து
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக விமான பயணிகள் குறைந்ததால், இன்று பெங்களூரில் இருந்து சென்னை வரும் விமானம், அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானம் ஆகிய 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னையின் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது
திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை
இன்று நண்பகலில் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
1077,
04365 251992,
8438669800 (வாட்ஸ்ஆப்)
9487550811 (செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான எண்) ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்
கடலூர்- 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
சென்னையில் கனமழை
சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது
இலங்கையில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
இலங்கையில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.2ஆக பதிவானது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7 இடங்களில் மிக கனமழை
தமிழ்நாட்டில் 7 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. நவ.16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரும்- வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது;
இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது;
கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பி.டி வகுப்புகளை கடன் வாங்காதீர்கள், முடிந்தால் உங்கள் வகுப்புகளிலும் மாணவர்களை விளையாட வைக்க முயற்சி செய்யுங்கள்- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அன்பில் மகேஸ் பேட்டி
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம்.
அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
"தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு; தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு; புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை; கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை; குற்றவாளி அஸ் பாக் ஆலமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு; சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில் 110வது நாளில் நீதிமன்றம் தீர்ப்பு
கடலோர மாவட்டங்களில் 121 இடங்களில் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
விலங்குகள், பறவைகள் உணவு நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
கனமழை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்தலாம்: தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்தலாம்; இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம்" - தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை தகவல்
சிறையில் உள்ள தன்னை மன ரீதியாக கொடுமை படுத்துகிறார்கள்: டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய நோட்டீஸ்
அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவகத்தின் கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி.
வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவு. உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென் கிழக்கு வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியானது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 16-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்.
பைக் விலாகிங்: 3 இளைஞர்கள் கைது
பைக் விலாகிங் என்ற பெயரில் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள். சாலை, தண்ணீர் என ஒரு இடம் விடாமல் பைக் ரேஸ் செய்து வீடியோ வெளியீடு.
முகமது ஆசிக், ஷேக் ஒலி, கிருஷ்ணா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த தென்காசி போலீசார். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது வழக்கு பாயும் என எச்சரிக்கை
மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை- மக்கள் புகார்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி. ஸ்ரீநகர், கனகபரமேஸ்வரி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீர்.
மழைநீர் செல்ல போதிய வடிகால் இல்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டு. பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாக பொதுமக்கள் அச்சம்
செம்மஞ்சேரி, நாவலூரில் மழைநீர் தேக்கம்
சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழை. சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி. செம்மஞ்சேரி, நாவலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர். வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம்
பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு. http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.
2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
கொடைக்கானல் வட்டத்திற்கு பள்ளி விடுமுறை
கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு
13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.