பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 511-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News updates
ஸ்டாலினுக்கு சோனியாக காந்தி நன்றி
ஒரு முப்பெரும் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடத்தப்படும் மகளிர் உரிமைமாநாட்டுக்கு என்னை அழைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு
நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தல்
ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது இந்திய அரசு
சந்திரயான்-3 விண்களத்தின் வெற்றியை 'வரலாற்று தருணமாக' நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது இந்திய அரசு !
திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடக்கம்
திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துவங்கியது "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி பெண் தலைவர்கள் பங்கேற்பு சோனியா, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் பங்கேற்பு
யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு போர்ச்சுக்கல் தகுதி
அடுத்தாண்டு நடைபெறவுள்ள யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி தகுதி பெற்றது. ஸ்லோவாகியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் 2 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரொனால்டோ!
பெண் குழந்தைகளின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் : நீதிபதி கருத்து
எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி மாணவிக்கு அனுமதி மறுத்த வழக்கில் ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது - பெண் குழந்தைகளின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், 2 மாதத்தை காரணம் காட்டாமல், மாணவிக்கு சேர்க்கை அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவு
அவதூறு கருத்துக்களை தடுக்க சிறப்பு குழுக்கள் : தமிழக அரசு தகவல்
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை கண்காணித்து, தடுக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு மாநகர காவல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சுங்கத்துறை தேர்வில் முறைகேடு - விசாரணை
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு. வடமாநிலத்தை சேர்ந்த 30 நபர்களை பிடித்து விசாரணை. வடமாநில தேர்வர்கள் காதில் 'புளுடூத்' வைத்து கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி - உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் வரும் 16ம் தேதி குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கனிமொழி பேட்டி
திமுகவின் மகளிர் உரிமை மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முக்கிய பங்காக இருக்கும்- சென்னையில் கனிமொழி பேட்டி
லியோ- அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 'லியோ' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை: 04364-222033, 9498100907, 9442003309
சீர்காழி: 9498100926, 04364 270222, 9498100908, 9498100926
சிறைச் சாலைகளில் துன்புறுத்தல்- எடப்பாடி பழனிசாமி
கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கனமழைக்கு வாய்ப்பு
தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நான் முதல்வன் திட்டம் மூலம் 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்- உதயநிதி
ஒன்றிய அரசு பணிக்கும் தயாராக இருக்கும் உங்களுக்கு உதவித்தொகை கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் முதல்வன் திட்டம் மூலம் இது வரைக்கும் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இது வரைக்கும் 1,50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்- சென்னையில் UPSC முதல் நிலை தேர்வுகளுக்கான மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் சேகர் பாபு பேட்டி
ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து அரசால் வெளியிடப்பட்ட 2 புத்தகங்களை அண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளோம்- அமைச்சர் சேகர் பாபு
மு.க.ஸ்டாலின் இரங்கல்
"திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருட்தந்தை முனைவர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 14, 2023
அவரது பிரிவால் வாடும் ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட… pic.twitter.com/SSDoAsohC6
விழுப்புரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக் கோரி, விழுப்புரத்தில் அக்.18-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்- அண்ணாமலை
ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி பலி - இஸ்ரேல்
காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி பலி - இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்
ஹமாஸ் குழுவின் தலைமையகம் மற்றும் கமாண்டோ படைகளுக்கு சொந்தமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல். ஹமாஸின் மூத்த தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்.
கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் பாராகிளைடர்கள் வாயிலாக நுழைந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் பாராகிளைடர்கள் மூலம் நுழையும் திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் அபு முராத்
4 லட்சம் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு- ஐ.நா
காசாவிற்குள்ளே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியால் பாதுகாப்பான இடங்களில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம்.
பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது. விவசாய கிணறுகளில் உள்ள உவர் நீரை மக்கள் பருகுவதால் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் - ஐ.நா அறிக்கை
தங்கம் உருக்கும் பட்டறைக்கு சீல்
சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர், பட்டறையில் இருந்து 5 பேரையும் தியாகராய நகரில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
அங்கு 4 பைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், கடத்தல் கும்பல் கொடுத்தது என வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தகவல்!
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கும், 1 கிராம் ரூ.5,555 ஆகவும் விற்பனையாகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை
சென்னையில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்பு. தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் பணிகள், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்
வி.ஏ.ஓ-வை கொல்ல முயற்சி- திமுக நிர்வாகிகள் மீது வழக்கு
திண்டுக்கல் பழனி அருகே வி.ஏ.ஓ மற்றும் உதவியாளரை கொல்ல முயன்ற புகாரில் தி.மு.க நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு. மணல் அள்ளிய லாரியை பிடிக்க முயன்ற வி.ஏ.ஓ கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரனை கொல்ல முயன்றதாகப் புகார்.
மகளிர் உரிமைத் திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கம் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதால் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும என மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மனு தாக்கல்.
இஸ்ரேலியர்கள் உடல்கள் காசாவில் மீட்பு
காணாமல் போன இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் காசாவில் மீட்பு. ஹமாஸ் அமைப்பினரால் ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள். மீட்கப்பட்ட உடல்கள் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
உடனே போர் நிறுத்தம் வேண்டும்- ரஷ்யா
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உடனே போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் - ஐ.நா.வில் ரஷ்யா வலியுறுத்தல்
போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அப்பாவி மக்கள் பாதிப்பு - ரஷ்யா கடும் கண்டனம்
பணயக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்- ஐ.நா
காசா முழுமையும் முற்றுகை - எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து
காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் - மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது. அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் - ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்
நாகை- இலங்கை பயணியர் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை.மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நாகை கப்பல் துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை. தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்பு
11 மாவட்டகளில் மழை
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு
மகாளய அமாவாசை- முன்னோருக்கு தர்ப்பணம்
தஞ்சை, நாமக்கல், கடலூர், திருச்சி, தி.மலை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள். மகாளய அமாவாசையை முன்னிட்டு, புனித நீராடி மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம்
ஆபரேஷன் அஜய்- மேலும் 235 இந்தியர்கள் வருகை
இஸ்ரேலில் இருந்து 2ஆம் கட்டமாக 235 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வருகை. டெல்லி திரும்பிய 235 பேரில் 29 பேர் தமிழர்கள் என தகவல்
இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நேற்று முதல்கட்டமாக 212 இந்தியர்கள் டெல்லி திரும்பிய நிலையில், 2ஆம் கட்டமாக 235 பேர் வருகை
டெல்லி திரும்பிய தமிழர்கள் 29 பேரை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அதிகாரிகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.