Advertisment

Tamil News Highlights: மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது

Tamil news today, Tamil news today LIVE, Tamil news updates, EV velu, Delhi Air pollution, Cricket world cup: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
hj

Tamil News Update

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 534-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates 

வெளி மாநில பதிவெண் ஆம்னி பேருந்து: தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை

வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை டிச.16ஆம் தேதிக்கு பின்னர் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அப்பாசாமி ரியல் எஸ்டே் அலுவலகத்தில் சோதனை: ரூ.250 கோடி பறிமுதல்

அப்பாசாமி ரியல் எஸ்டே் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடியும், எ.வ. வேலு வீட்டில் நடந்த சோதனையில் ரூ.18 கோடியும் கணக்கில் வராத பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 13-ந் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை வருவதால் தமிழகத்தில் மறுநாளான திங்கட்கிழமை நவம்பர் 13ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடியுடன் நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

விழுப்புரம் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் காட்பாடியில் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணி காரணமாக இன்று முதல் நவம்பர் 12ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தம். மறுமார்கத்திலும் காட்பாடியில் இருந்து ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

விவாகரத்து கோரி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, விவாகரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு. வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக தானே நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார் சந்திர பிரியங்கா. 6 மாதமாக தனது கணவரை பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

நகரத்தில் இருந்து கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு ரூ 25 லட்சம் நிதி

இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வாசிக்க வருபவர்களுக்கு 28 ஆயிரம் பவுண்ட் ( Rs 25 லட்சம் )வழங்குவதாக கல்பர்யா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும், புதிதாக தொழில் தொடங்கவேண்டும், 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என்ற நிபந்தனைகள் கிராம பொருளாதாரம் சரிந்து வருவதனால் தான் இதை அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கும் மேலான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

அரசு பேருந்துகள் உள்பட 15 ஆண்டுகளுக்கும் மேலான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு 2024 செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உத்திரபிரதேசம், ஹரியானாவிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது

பேட்டிங் செய்ய தாமதமாக வந்த ஏஞ்சலோ மேத்யூ அவுட்

பேட்டிங் செய்ய கிரவுண்டுக்குள் தாமதமாக வந்த ஏஞ்சலோ மேத்யூ-ஐ நடுவர் அவுட் கொடுத்து வெளியேற்றினார். இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ

கமலின் 234வது படத்தில் இணைந்த துல்கர் சல்மான், திரிஷா

மணிரத்னம் இயக்கும், கமலின் 234வது படத்தில் துல்கர் சல்மான் மற்றும் திரிஷா இணைந்துள்ளனர். படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜுவல்லரி 47 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. 100 சவரன் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம்; சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. மூன்று நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை. தற்போது வரை அ.தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படி கூடி, தீர்மானம் நிறைவேற்றியதால், வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பிரசாதக் கடை உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பிரசாதக் கடை உரிமையாளர் குடும்பத்துடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரசாத கடை வைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது

இத்தாலி கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு

இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வாசிக்க வருபவர்களுக்கு 28 ஆயிரம் பவுண்ட் ( 25 லட்சம் ) வழங்குவதாக கல்பர்யா நிர்வாகம் அறிவித்துள்ளது. 40 வயதிற்குள் இருக்க வேண்டும், புதிதாக தொழில் தொடங்கவேண்டும், 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி- தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நவ.19 அல்லது நவ.26 ஆகிய 2 தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து, பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திற்குள் 30% ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய ரேசன் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, பொங்கலுக்குள் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை, கரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் – நேரம் 1.42 PM

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவ. 22 வரை நீட்டிப்பு- நீதிபதி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் அறிவித்துள்ளது.

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு விம்கோ நகரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை பாதிப்பு நீல வழித்தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கம் - பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் இயக்கம் மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

60% முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகையை ஒட்டி, கூட்டுறவுத்துறை சார்பில் பட்டாசு விற்பனை 60% முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை - தமிழக அரசு

நீட்-க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்

திமுக நடத்தும் நீட்-க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்.  சென்னை, விசிக அலுவலகத்தில் திருமாவளவனிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். 

தங்கம் விலை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ.5,700க்கும், ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்பனை

காசாவிற்கு தேவையான மருத்துவ உதவியை  வழங்கிய ஜோர்டன் அரசு 

ஜோர்டன் நாட்டின் விமானப்படை காசாவிற்கு தேவையான மருத்துவ கிட்டுகளை, கொண்டு சென்றுள்ளது. நள்ளிரவில் இந்த மருத்துவ கிட்டுகளை கொண்டு சென்றுள்ளது.  அந்நாட்டின் அரசர் அப்துல்லா, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். காசாவில் உள்ள எங்களின் சகோதர, சகோதரிகளுக்கு உதவுவது எங்களது கடமை என்றும் ஜோர்டன் அரசர் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் பரவலாக  கனமழை : வாகன ஓட்டிகள் அவதி

ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆர்.ஏ புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது: உயர்நீதிமன்றம்

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது - சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரத்தில் உள்ளவர்கள் சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் - உயர்நீதிமன்றம்

கர்ப்பிணி பலி: மருத்துவர் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் தா.பழூர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்திதேவி, அவரது உதவியாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் கைது 

சனாதன ஒழிப்பு மாநாடு- காவல்துறை கடமை தவறிவிட்டது

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்.

குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம். திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பொன்முடியின் வாகன ஷோரூமில் கொள்ளை- 3 பேர் கைது

கடலூரில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூமில் கடந்த மாதம் 12ம் தேதி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம். ரூ.3 லட்சம் ரொக்கம், தங்க நாணயங்களை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்களை கைது செய்தது தனிப்படை.

 ஜார்க்கண்டைச் சேர்ந்த அப்துல் ஷேக், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சாதிக் கூல், தாரிக் ஆசிஸ் ஆகியோர் கைது. போலீசார் கைது செய்யும்போது தப்பியோட முயன்ற அப்துல் ஷேக் கீழே விழுந்ததில் கால் முறிவு- போலீசார் தகவல்

மீனா ஜெயக்குமார் வீட்டில் 4-வது நாளாக சோதனை 

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகத்தில் 4வது நாளாக தொடரும் சோதனை. செளரிப்பாளையம் காசா கிராண்ட் அலுவலகம், அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் செந்தில்குமாரின் வீடு ஆகிய இடங்களில் ஐடி ரெய்டு

ஜெய்சங்கர்- ஈரானிய வெளியுறவு அமைச்சர் பேச்சு 

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் எழுந்துள்ள "கடுமையான" நிலைமை குறித்து விவாதித்தார்.

மேலும், மோதல் தீவிரமடைவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், காஸாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜெய்சங்கர் அமீர்-அப்துல்லாஹியனிடம் கூறினார். 

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் 

காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல். இன்னும் 48 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் படைகள் காசா நகருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு 

50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இலங்கை 

கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது  அந்நாட்டு அரசு. 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைப்பு 

ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருச்சி திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு. திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட்டம். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை

எ.வ.வேலுவுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் 4வது நாளாக வருமான வரிச் சோதனை. திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சி பட்டு, சுபலட்சுமி நகரில் உள்ள அமைச்சரின் மகன் எ.வ.வே.கம்பன் வீட்டில் 3வது நாளாக ஐடி ரெய்டு.

அண்ணாமலை நடைபயண வழித்தடம் மாற்றம்

புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொள்ளவிருந்த "என் மண், என் மக்கள்" நடைபயண வழித்தடம் மாற்றம். ஏற்கனவே அறிவித்த வழித்தடத்தில் செல்ல, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை-புதிய வழித்தடத்தில் அனுமதி.

புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி 

தொடரும் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு. திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட், தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை. ஒரு சில இடங்களில் ஐடி ரெய்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் 

களமச்சேரி குண்டுவெடிப்பு: மேலும் ஒரு பெண் பலி 

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 61 வயது பெண் உயிரிழப்பு. குண்டுவெடிப்பில் காயமடைந்த 61வயது மோளி ஜொயி என்பவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

குண்டுவெடிப்பு நிகழ்ந்த 8வது நாளில் மோளி ஜோயி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு. களமச்சேரி குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான டொமினிக்கிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்கிறது

தொடர்ந்து  4-வது நாளாக சோதனை

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய  இடங்களில் 4ஆவது நாளாக சோதனை. சென்னை, தி.மலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்த புகாரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

நிபுணர்களிடம் ஐ.சி.சி ஆலோசனை

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தொடர்பாக வீரர்களின் நலனுக்காக நிபுணர்களிடம் ஆலோசிக்கிறது ஐசிசி. உலகக் கோப்பை தொடரில் டெல்லியில் வங்கதேசம்- இலங்கை இன்று மோத உள்ள நிலையில்  ஐ.சி.சி ஆலோசனை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment