Advertisment

Tamil News Highlights: சென்னையில் பல்வேறு இடங்களில் விடியவிடிய மழை

Tamil news today Live, Uttarakhand tunnel rescue updates, Telangana Elections, TN Rains- 28 November 2023: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Chennai-Rain

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 556-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Updates

சென்னையில் பல்வேறு இடங்களில் விடியவிடிய மழை

சென்னையில் சைதாப்பேட்டை, அசோக் நகர், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, கிண்டி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

அன்புமணி ராமதாஸ்

உத்தர்காண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி! உத்தர்காண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 17 நாட்களாக சிக்கித்தவித்து வந்த 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைத்துத் தொழிலாளர்களும் எந்த பாதிப்புமின்றி மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களை பாதுகாப்பாக மீட்ட அனைத்துக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள். உயிரை பணயம் வைத்து தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு அதற்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் குறைந்தது ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது. பல்வேறு இன்னல்களை கடந்து இக்கட்டான சூழலிலும் சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையினர், இந்திய ராணுவத்தினர், பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை மிஞ்சும் அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இயந்திரங்களை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், மீட்பு மற்றும் குழாய் அமைக்கும் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பங்கு, தொழிலாளர்களை உயிருடன் மீட்க பேருதவியாக இருந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சுரங்கத்திலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, இந்த சுரங்க விபத்தை முன்னுதாரணமாக கொண்டு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போது தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து ஏற்படும் பட்சத்தில் மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி

உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த நண்பர்களுக்கு உங்கள் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நமது இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் காட்டிய பொறுமையும் தைரியமும் போதுமான அளவு பாராட்ட முடியாது.

இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர்.

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு 

உத்தரகாண்ட் சில்க்யாரா-தண்டல்கான் இடையேயான சுரங்கப்பாதையில் நவ.12ம் தேதி மண்சரிந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 17 நாள்களாக 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி இருந்தனர்.

இவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.

சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் தற்காலிக மருத்துவ வசதி அமைப்பு

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்பு தளத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக, துளையிடப்பட்ட பாதையில் தப்பிக்கும் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததாகக் கூறினார்.

இது குறித்து அவர், “விரைவில் அனைத்து சகோதரர் தொழிலாளர்களும் வெளியே கொண்டு வரப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் தற்காலிக மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மீட்பு பணி தீவிரம் : தயார் நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்

உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது!

திடீரென நடு ரோட்டில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து

தருமபுரி: சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், நல்வாய்ப்பாக எவ்வித பாதிப்பும் இல்லை - பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

தொடர் செயின் பறிப்பு : கேரளாவில் பதுங்கியிருந்த 3 பேர் கைது

கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு கேரளாவில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை அடுத்தடுத்து 2 பெண்களிடம் இவர்கள் நகை பறிப்பு செய்தது தெரியவந்துள்ளது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ரகுபதி ராஜா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

உத்தரகாண்ட் மீட்பு பணி - ஒருவரை மீட்க 5 நிமிடங்கள் ஆகும் என தகவல்

 41 தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவர 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். மீட்பு பணியை ஒருங்கிணைக்க தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த 3 குழுவினர் சுரங்கத்திற்குள் செல்வார்கள். தொழிலாளர்களை மீட்க அனைத்து விதமான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 58 மீட்டர் வரை சென்றுள்ள நிலையில் இன்னும் 2 மீட்டர்களை கடந்தால் தான் தொழிலாளர்களை மீட்கும் பணி துவங்கும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்னர்.

உத்தரகாண்ட் மீட்பு பணி; தயார் நிலையில் ராணுவ விமானம்

உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்ட பின், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஆம்புலன்ஸ்களுடன் உணவு அனுப்பப்படுகிறது; மீட்புக் குழு

சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனமான ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் அதிகாரி ஒருவர், சிக்கிய தொழிலாளர்களுக்கான உணவு ஆம்புலன்ஸ்களுடன் அனுப்பி வைக்கப்படுவதாக இன்று தெரிவித்தார்.

"உணவு (தொழிலாளர்களுக்கு) ஆம்புலன்ஸுடன் அனுப்பப்படுகிறது. ஆலு கோபி, ரொட்டி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவை இன்று மெனுவில் உள்ளன" என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட்டின் உதவி HR விகாஸ் ராணா கூறினார்.

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி ஆசிரமம் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டார். சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்

2025 சாம்பியன் டிராபி தொடரை நடத்த ஐஸ்லாந்து விருப்பம்

2025 ல் நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருந்த இந்த தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணி; விரைவில் வெளியே வரும் தொழிலாளர்கள்

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர். 41 பேரையும் வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளே சென்றுள்ளனர். தொழிலாளர்கள் விரைவில் வெளியே வருவார்கள் என்று கூறப்படுகிறது

இறுதிகட்டத்தில் மீட்பு பணி

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் குழாய் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தகவல்

41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ளன

100 சவரன் நகைகள் கொள்ளை

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளைப் போன சம்பவத்தில், 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது; இதுமேலும் வரும் 30-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது; அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலால தீவிரமடையும் என தகவல்; - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெயக்குமார் பேட்டி

அதிமுக ஹீரோ திமுக ஜீரோ. இந்த அரசை யாரும் விரும்பவில்லை. ஆட்சி என்றால் விமர்சனங்கள் இருக்கதான் செய்யும். அதற்காக விமர்சித்தவர்களை குண்டாஸில் போடுவது தவறு. கார் ரேஸை அரசு பணத்தில் நடத்துவது தவறு.

 அரசு பணம் என்பது சிவன் சொத்து, சிவன் சொத்தை எடுத்தால் குலநாசம். கார் ரேஸ் நடத்துவதாகக் கூறி சாலைகளை நாசம் செய்துள்ளது திமுக அரசு- சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

உத்தரகாண்ட் சுரங்க விபத்து      

டேராடூனில் நடந்த 6வது உலக பேரிடர் மேலாண்மை மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசியில் இடிந்து விழுந்த சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு படையினர் 53 மீட்டர் தோண்டி எடுத்துள்ளனர்.

தற்போது தொழிலாளர்களிடமிருந்து 5 மீட்டர் தொலைவில் மீட்புப் பணியாளர்கள் உள்ளனர்.

 ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகளின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை

மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

இயல்பை விட குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 9% குறைவாக பெய்துள்ளது.

அக்.1 முதல் இன்றுவரை இயல்பாக 346.மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 316.3 மிமீ மட்டுமே பெய்துள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம் 

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவு

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவு மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வுகாண கூட்டு சர்வே - தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார்.  முதல்வர் ஸ்டாலின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலை 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி

வேங்கைவயல் வழக்கு: 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் 

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக புதிதாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி மனு மீது விசாரணை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 10 பேர் ஆஜர் வேங்கைவயல் வழக்கு விவகாரம் தொடர்பாக 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, டிஎன்ஏ பரிசோதனை மட்டுமல்லாது குரல் மாதிரி பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்

செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய மனு தள்ளுபடி

 அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு: விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு. விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தள்ளிவைப்பு

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை.  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சிபிஐ பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து.  1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 

குஷ்புவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் 100 மீட்டருக்கு முன்னால் தடுத்து நிறுத்தம். குஷ்பு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு 100க்கும் மேற்பட்டபோலீசார் குவிப்பு. சேரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கண்டனம். 

5 மீட்டர் தூரத்தில் மீட்புப் குழு; இன்றைக்குள் மீட்க நம்பிக்கை 

உத்தரகாண்ட் சுரங்க விபத்து - பக்கவாட்டில் 52 மீட்டர் துளையிடப்பட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி

எவ்வளவு தூரம் தோண்டப்பட்டுள்ளதோ, அதே அளவுக்கு குழாய்கள் பதிப்பு. பக்கவாட்டில் துளையிடும் பணி வேகமெடுத்துள்ள நிலையில், மீட்புப் பணியில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும்- உத்தரகாண்ட் முதல்வர் நம்பிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கனஅடி நீர் திறப்பு

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு.  செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகில், 3 ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறப்பு.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு 

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது

தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடையும் என வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல். வங்கக் கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் 'மிச்சாங்' என பெயர் வைக்கப்படும். 

புழல், சோழவரம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு. நீர் இருப்பை கண்காணிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள்.

புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி - 9 செ.மீ., சோழவரம் - 4 செ.மீ., மழை பதிவு 

புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக உயர்வு. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரிப்பு 

செம்பரம்பாக்கத்தில் இன்று காலை நீர்த்திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 200 கனஅடி நீர் திறப்பு. ஏற்கனவே 25கன அடி உபரிநீர் திறக்கப்படும் நிலையில் 10 மணி முதல் நீர்த்திறப்பு 200 கன அடியாக உயர்த்தப்படுகிறது. 

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை 

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை. செங்குறிச்சி, சேந்தநாடு, கெடிலம், வண்டிபாளையம் என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamilndu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment