பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 539-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து – இந்தியா மோதல்
50 ஓவர் உலக கோப்பை முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா அணி எதிர்கொள்கிறது
ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகை; ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து
பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா, அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீதான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அல்லது 'வசுதைவ குடும்பகம்' என்ற நமது சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடு இது.
உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள் மதம், மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிற பரிசுகளை வாங்க நாம் உறுதிமொழி எடுப்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள்." இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 11, 2023
டெல்லியில் நில அதிர்வு
தலைநகர் டெல்லியில் இம்மாதத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது
தீபாவளி போனஸ்; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட மனு மீது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகங்கள் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் அன்புராஜ் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிபதி ஆர்.ஹேமலதா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பணம் பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைகாக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம், கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகை; சென்னையில் இருந்து இதுவரை 12 லட்சம் பேர் ரயில்களில் பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களாக 12 லட்சம் பேர் ரயில்களில் பயணித்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7 லட்சம் பேரும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 லட்சம் பேரும் பயணித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தில் இரண்டு நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று மோடி - மன்சூர் அலிகான்
நான் நடிகனே இல்லை; உலகத்தில் இரண்டு நடிகர்கள்தான். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று மோடி என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்
டி.டி.வி தினகரன், கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 13% குறைவு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 13% குறைவாக பெய்து உள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாரதிதாசன் பல்கலை. - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
"திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தேர்ச்சி பெற்ற 1.5 லட்சம் மாணவர்களில் சில பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது." என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி மீது குண்டர் சட்டம்
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் சந்திரமோகன் மரணம்
பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் உடல்நல குறைவால் காலமானார். ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 942 படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான நாளை நமதே படத்திலும் சந்திரமோகன் நடித்துள்ளார். 2 பிலிம்ஃபேர் விருதுகள், 7 நந்தி விருதுகளை பெற்றுள்ளார் நடிகர் சந்திரமோகன்
கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்
தி நகர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன், பேரன் மீது தாக்குதல். தியேட்டரில் அதிக சத்தம் எழுப்பிய நபர்களை தட்டிக் கேட்ட அமைச்சரின் மகன் ரமேஷ், பேரன் மீது தாக்குதல். தாக்குதலில் காயம் அடைந்த ரமேஷ் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார்.
சிறு, குறு நிறுவனங்கள் - பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு
சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு. தொழிற்சாலையில் மின் பயன்பாட்டை பொறுத்து 15% முதல் 25% வரை பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு
தங்கம் விலை ரூ.360 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,600க்கும், ஒரு சவரன் ரூ.44,800க்கும் விற்பனை
தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு
தீபாவளியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. ஒரு கிலோ ரூ.700க்கு விற்று வந்த மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை. ரூ.350க்கு விற்பனையான ஒரு கிலோ, பிச்சிப்பூ ரூ.1250க்கு விற்பனை
கனகாம்பரம் - ரூ.1000, செவ்வந்தி - ரூ.170, ரோஜா - ரூ.100. மரிக்கொழுந்து - ரூ.100, கிரேந்திப்பூ - ரூ.40, அரளி - ரூ.80, சம்பங்கி - ரூ.30
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. அடுத்த 3 மணி நேரத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தீபாவளி: 3 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் 2 நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம். வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இதுவரை 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கம். வரும் நாட்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தகவல்
ராஷ்மிகா போலி வீடியோ விவகாரத்தில் வழக்குப் பதிவு
நடிகை ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு. டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு. ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையாகி இருந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட்: 2 போட்டிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை 10.30 மணிக்கு புனேவில் நடைபெறும் போட்டியில்
ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் மோதல். பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
பேருந்து விபத்தில் 4 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு சொகுசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து. பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். வாணியம்பாடி: அரசு பேருந்து- தனியார் பேருந்து மோதி விபத்து 4 பேர் பலி 40 பேர் காயம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.