பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 522-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
இன்று முதல் மீண்டும் விசா சேவை
கனடாவிலிருந்து இந்தியா வர இன்று முதல் மீண்டும் விசா சேவை. செப்டம்பர் இறுதியில் நிறுத்தப்பட்ட விசா சேவையை மீண்டும் தொடங்குகிறது இந்தியா.
ஆளுனரின் உயிருக்கு அச்சுறுத்தல்: கவர்னர் மாளிகை புகார்
ஆளுனர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் ஆளுனரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டால், ஆளுநர் மாளிகையின் முன்பகுதி சேதம் அடைந்தது.
ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்; பொதுக்கூட்டங்களில் ஆளுநரை மிரட்டும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் பேசுகின்றன.
அச்சுறுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்: புதிய உத்தரவு பிறப்பிப்பு
விதிமீறல்களில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்தாத பேருந்துகளை வரி செலுத்திய பிறகு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பின், தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகை நகல்களை வழங்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் - எல். முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்: “தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கும்போது, சாதாரண மனிதனின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிக்கு பின்னால் இருப்பது யார்? இந்த குற்றவாளிகயை இயக்கியது யார் என்பதை தமிழக அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
சென்னைக்கு ஜனாதிபதி வருகையில் எந்த மாற்றமும் இல்லை- டி.ஜி.பி அலுவலகம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வருகை தர உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வருகை தருவதில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்று டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; டிடிவி தினகரன் கண்டனம்
ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய தி.மு.க ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.
காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது.
எனவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வெளிமாநில ஆம்னி பஸ்களை தமிழ்நாடு பதிவெண் பஸ்களாக மாற்ற போக்குவரத்து ஆணையர் உத்தரவு
வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் - போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும், விதிமுறைகளை மீறியதற்காக பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநரின் மாண்பும் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டும்; தாக்கப்படக் கூடாது - தமிழிசை
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெலுங்கானா அளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 25, 2023
தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும்,செயல் வன்முறைகளும் சமீப காலமாக அதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இது ஜனநாயகத்திற்கு…
தெலுங்கானா அளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும்,செயல் வன்முறைகளும் சமீப காலமாக அதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல.... இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். மேலும்... ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டும்.... தாக்கப்படக்கூடாது.... என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; அண்ணாமலை கண்டனம்
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம் - ஒழுங்கு என்ன என்பதை பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் தி.மு.க மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர். இந்த தொடர் தாக்குதல்களுக்கு தி.மு.க அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல - துருக்கி அதிபர் எர்டோகன்
பாலஸ்தீன ராணுவ குழுவான ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல; அது ஒரு விடுதலைக் குழு. தங்களுடைய நிலத்தை பாதுகாக்க போராட்டத்தை நடத்துகிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடியிடம் காவல்துறை விசாரணை
செனனி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முகப்பு வாசலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளியில் வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை பிடித்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. இவர் ஏற்கெனவே, கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 250 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த பெரோஸ் கான் என்பவரை பிடித்து விசாரிக்க, மதாவரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
பெரோஸ்கான் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது காசிம் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை
ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்து- வக்பு வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்
திருப்பூரில் 3 பள்ளிவாசல், 140 கடைகள் உள்பட ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை வக்பு வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
காதர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் 140 கடைகளை 30 ஆண்டுகளாக சலீம் என்பவர் நிர்வகித்து வந்த நிலையில், இதில் முறைகேடு நடப்பதாக 2013ம் ஆண்டு வக்பு வாரியத்திற்கு புகாரளிக்கப்பட்டது.
சலீமை நிர்வாக பொறுப்பில் இருந்து அகற்றி நடவடிக்கை எடுக்க, அதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிவாசல்கள், கடைகள் உள்ளிட்ட அசையா சொத்துகளை வக்பு வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
மாடு முட்டியதில் முதியவர் காயமடைந்த விவகாரம்: வழக்குப்பதிவு
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் முதியவர் காயமடைந்த விவகாரம். மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு. சிசிடிவி காட்சிகளை கொண்டு மாட்டின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு
வங்கி பெட்டகத்தில் இருந்த தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்த தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன் .வரும் 30ஆம் தேதி, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக பசும்பொன் கொண்டு செல்லப்படுகிறது. அதிமுக சார்பில் 2014ல் ரூ.4.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்க கவசம் வழங்கப்பட்டது மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் தேவர் தங்க கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்
சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். சங்கரய்யாவின் வரலாற்றை ஆளுநர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் . மதுரை காமராஜர் பல்கலை. அனுப்பிய கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் அமைச்சர் பொன்முடி
புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ஸ்டாலின்
நீர்வளத்துறையின் திட்ட உருவாக்க பிரிவின் உதவி செயற் பொறியாளர்களுக்கு வாகனம். ரூ.3.70 கோடி மதிப்பில் 41 வாகனங்கள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர். நீர்வளத்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்காக 41 ஜீப்புகள் வழங்கியது அரசு
5 மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி: கார்கே
5 மாநில தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி. பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை. அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் இருவரும் சிறப்பாக செயல்படுவதால் எந்த சிக்கலும் இல்லை- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
அக்.30-ல் ஸ்டாலின் பசும்பொன் பயணம்
அக்.30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்கிறார்.
பெசன்ட் நகரில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
சென்னை பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்லத் தடை. பாதசாரிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ராஜராஜ சோழனின் 1,038வது சதய விழா- அரசு சார்பில் மரியாதை
தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,038வது சதய விழா - 2ம் நாள் நிகழ்வு. திருமுறை பாடல்கள் பாடி திருமுறை, தேவார நூலுக்கு சிறப்பு பூஜை. திருமுறை தேவார நூலை யானை மீது வைத்து ஓதுவார்களின் வீதியுலா. ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
அரசியல் கட்சிகளுடன் சாகு இன்று ஆலோசனை
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை. வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை
19 மாவட்டங்களில் மழை
கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.