/indian-express-tamil/media/media_files/kQDRK5LBQN249lgDk2Et.jpg)
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 526-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
தொடர் மழை, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
ஆந்திராவின் கண்டகப்பள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்து
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர்.
100 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள குண்டுவெடிப்பு: 18 பேருக்கு தீவிர சிகிச்சை.. அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள மாநிலம் களமச்சேரி பிரார்தனை கூட்டரங்கில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர்” என்றார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி: பசும்பொன் வருகிறார் கோவா முதலமைச்சர்!
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.30) காலை 11.15 மணியளவில் பசும்பொன்னில் கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் மரியாதை செலுத்துகிறார்.
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் நாளை காலை 11:15 மணியளவில் கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு @NainarBJP அவர்கள் மற்றும் @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர்கள் திரு @KaruppuMBJP, திரு @ProfessorBJP…
— K.Annamalai (@annamalai_k) October 29, 2023
இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பேராசிரியர் சீனிவாசன், பொன் பாலகணபதி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.
தமிழகம்-கேரளா ரயில்களில் தீவிர சோதனை
தமிழ்நாடு-கேரளா செல்லும் ரயில்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கேரளத்தின் கொச்சி களமச்சேரியில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டரங்கில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பிரார்த்தனை கூட்டரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் ரக வெடிகுண்டு ஆகும்.
கேரளா களமசேரி குண்டுவெடிப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு
கேரள மாநிலம் களமசேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
25க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ பகுதியில் தேசிய பாதுகாப்பு முகமை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், மாநில போலீசார் என பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 குண்டுகள் வரை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
3 குண்டுகள் வெடித்ததாக போலீசார் தகவல் : குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதி 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக போலீசார் தகவல் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைப்பு .என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது - கேரள டிஜிபி
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திமுகவின் சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்
நவம்பர் 5ஆம் தேதி திமுகவின் சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருவள்ளூரில் கூட்டம் நடைபெறும். என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலங்களைத் தொடர்ந்து நிறைவாக சென்னை மண்டல கூட்டம்.
கேரள வெடி விபத்து தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுடன் அமித்ஷா பேச்சு
களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு: பினராயி விஜயன்
களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன - முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி
சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது: ஸ்டாலின்
சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல அதை சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சல சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிய வேண்டும்" நாளை (அக்.30) உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
வெடி விபத்து: கொச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும்
கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்து எதிரொலி . கொச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவு.
கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு என்ன மாதிரியான குண்டு வெடித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
முன்தொகை செலுத்தினால் வெற்றி விழாவுக்கு அனுமதி
என்.ஒ.சி.கடிதம் பெற்று முன் தொகையும் செலுத்தினால் லியோ பட வெற்றி விழாவுக்கு அனுமதி. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விழா நடத்த அனுமதி வழங்கப்படும் - அதிகாரிகள் தகவல்
நவம்பர் 1-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை -அதிகாரிகள் தகவல்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு 5,500 இருக்கைகள், வி.ஐ.பி. இருக்கைகள் 500 என மொத்தம் 6000 இருக்கைகள் ஒதுக்கப்படும்.
லியோ வெற்றி கொண்டாட்டம்- காவல்துறை கேள்வி
'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம். வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்? எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? எனவும் காவல்துறை கேள்வி
காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா ?. பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல்துறை கடிதம். 5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கட்டுப்பாடு
தமிழகத்தில் 10,000 காய்ச்சல் முகாம்கள் தொடக்கம்
மருத்துவத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 10,000 காய்ச்சல் முகாம்கள் தொடக்கம். இன்று தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரை காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல், காய்ச்சல் முகாமுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கார் மோதி 7 பேர் காயம்
சென்னை திரிசூலத்தில், பி.எம்.டபிள்யூ கார் மோதி 7 பேர் காயம். பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது சொகுசு கார் மோதி விபத்து
சாலையை கடந்தவர்கள் மற்றும் ஆட்டோவில் வந்தவர்கள் மீதும் சொகுசு கார் மோதியதால் பரபரப்பு. கன்னியாகுமரியை சேர்ந்த நபர், பிஎம்டபிள்யூ காரில் நுங்கம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் சென்ற போது விபத்து. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பிடித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் பலி
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு என உறவினர்கள் புகார். இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு என குற்றச்சாட்டு
அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் வந்ததாக கூறி வனத்துறையினர் சுட்டதாக தகவல். உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு
தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்க உள்ளது. நவ.15 வரை 15 நாட்களுக்கு 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது- சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை
மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.
சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
1000 இடங்களில் மருத்துவ முகாம்
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 10 வாரங்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழையையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு
மேலும் 14 மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் கைது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.