பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 507-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News updates
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று அவசரமாக கூடுகிறது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 13 ஆயிரம கன அடி நீர் திறக்கும்படி கோரிக்கை வைக்க தமிழ்நாடு அரசு திட்டம்
ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை; ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்
ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆயுள் தண்டனை கைதிகளின் கோப்புகளை விரைந்து பரிசீலித்து, அவர்களை முன்விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: சென்னை திரும்புகிறார்கள் யாத்ரீகர்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் பதற்றம் காரணமாக ஜெருசலேமிற்கு புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த 96 பேர் நாளை சென்னை திரும்புகின்றனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
குழந்தை கடத்தல் பெண் உயிரிழப்பு; நீதிபதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை
திருச்செந்தூரில் குழந்தை கடத்தியதாகக் கைதான பெண் திலகவதி என்பவர் உயிரிழந்தகோவை ஆலந்துறை காவல் நிலையத்திற்கு நீதிபதி சந்தோஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சமாதான திட்டம் மூலம் அரசுக்கு ரூ.3,000 கோடி வருமானம் கிடைக்கும் - அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டத்தை பேரவையில் இன்று அறிமுகம் செய்தார். இந்த சமாதான திட்டம் மூலம் அரசுக்கு ரூ.3,000 கோடி வருமானம் கிடைக்கும்” என்று கூறினார்.
அமர்தியா சென் நலமுடன் உள்ளார்
நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென் குறித்து பரவும் தகவலில் உண்மையில்லை. அமர்த்தியா சென் நலமுடன் இருப்பதாக அவரது மகள் நந்தனா தெரிவித்துள்ளார்.
நடிகர் நாசரின் தந்தை பாஷா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் நாசரின் தந்தை பாஷா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கைரேகை பதியாவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது" - அமைச்சர் சக்கரபாணி
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சின்னதுரை பதிலளித்துப் பேசினார். ரேஷன் கடைகளி கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது. பொது விநியோக திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில், கைரேககளை பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று கைரேகைகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
பா.ஜ.க மையக் குழு கூட்டம்: கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடந்து வருகிறது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. அதே நேரத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறினார்.
ஆ.ராசாவின் பினாமி சொத்துகள் பறிமுதல்
திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை
வேறு வழியில்லாததால் சிஏஏ-வுக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமி
"கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம்" எடப்பாடி பழனிசாமி
இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதல் : வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்
இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறினர். 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சம் என தகவல்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று இரவில் காசாவில் உள்ள 200 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்.
காசாவின் நாடாளுமன்றத்தில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தினால், அரசு கட்டடங்கள் ராணுவ இலக்காகும். இஸ்ரேல் போதிய நேரமில்லாததால் இலக்கைக் குறி வைக்கும் முன்பாக எச்சரிக்கை விடுப்பது சந்தேகமே! என இஸ்ரேல் தெரிவித்துள்ளது
இஸ்ரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
"இஸ்ரேலுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும்" இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
சுப்மன் கில்-க்கு பதிலாக மாற்று ஆட்டக்காரரை சேர்க்க முடிவு
டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் சுப்மன் கில்-க்கு பதிலாக மாற்று ஆட்டக்காரரை அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு. ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யஷஸ்வி ஜெய்ஷ்வால் அழைக்கப்படலாம் என தகவல்
பாஜக மைய குழு கூட்டம் தொடங்கியது
சென்னை, கமலாலயத்தில் தமிழக பாஜவின் மைய குழு கூட்டம் தொடங்கியது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு
தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு அரசு உறுதி
மு.க.ஸ்டாலின் பதில்
எந்த கட்சியாக இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்- மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பதில்
மகளிர் உரிமைத்தொகை திட்டம்- உதயநிதி முக்கிய அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்- சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின்
கோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கில் பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா
தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் வழங்கினார் புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா
தேவர் சிலைக்கு உரிய தங்க கவசம்
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு உரிய தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை 6 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தல்
காசா மக்களை பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தல் வாய்ப்பு இருக்கும்போது, ராஃபா வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்ல இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் அறிவுறுத்தல் காசாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேலிய ராணுவம் இஸ்ரேல்-காசா எல்லையை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் காசாவில் ஹமாஸுக்கு நரகத்தின் வாயிலை காட்டுவோம் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது
நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்க இருந்த கூட்டம் நாளையே நடப்பதாக அறிவிப்பு காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு மனு அளித்துள்ளது
அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு
சட்டப்பேரவையில் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு. கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம். அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன். எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால் விவாதம் நடத்த தயார் – விஜயபாஸ்கர். மருத்துவ பணி இடங்களை உருவாக்காமல் 130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தி உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் . 130 மருத்துவமனைகளின் பட்டியலை தருகிறேன், விஜயபாஸ்கரே நேரில் சென்று ஆய்வு செய்து விவாதிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம் அறிமுகம்
வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர். அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு.
மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது;தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர் , தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது;மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்
ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு செந்தில் பாலாஜியின் ஜாமின்
செவிலியர்கள் போராட்டம்- கைது
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட்டு செவிலியர்கள் போராட்டம். எம்ஆர்பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
இஸ்ரேலில் தாய்லாந்தைச் சேர்ந்த 18 பேர் பலி
இஸ்ரேலில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு. தாய்லாந்தை சேர்ந்த 5,000 பேர் காசாவில் சிக்கி தவிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி ஜாக்கப் பாங் சங்மானி தகவல். தாய்லாந்தை சேர்ந்த 30,000 பேர் இஸ்ரேலில் இருப்பதாகவும் தகவல்
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி
திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி -சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி என புகார். தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார். ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது
சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி. சுப்மன் கில் உடலில் ரத்த தட்டை அணுக்கள் சற்று குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வீட்டில் இ.டி சோதனை
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பண மோசடி வழக்கில் எம்.எல்.ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பணயக்கைதிகளை தூக்கிலிடுவோம்- ஹமாஸ்
இஸ்ரேல் பொது மக்கள் வசதிக்கும் பகுதிகள் மீது குண்டுவீசினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி
காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சயீத் அய்-தவீல், ரிஸ் மொஹமது சொப் பலி. காஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினரின் வான்வழித் தாக்குதலால் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி.
இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்வு
ஹமாஸ் பயன்படுத்திய இரண்டு சுரங்கப் பாதைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இறப்பு எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும், காசா நகருக்கு குடிநீர், மின்சாரம், உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அரசு அறிவிப்பு
மேட்டூர்- டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம். குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கனஅடி நீர் திறக்கப்படுவதாக தகவல்
நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து 12-ம் தேதிக்கு மாற்றம்
நாகை-இலங்கை இடையே இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம். இன்று புறப்பட வேண்டி பயணிகள் கப்பல் 12-ம் தேதி காலை புறப்படும் என அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.