பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 555-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பொது சுகாதாரம், மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம்
சீனாவில் குழந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடைபெற்றது.
புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது: பிரியங்கா காந்தி
119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
போங்கீர் பகுதியில் பரப்புரை செய்த அவர், “ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து ஆட்சியை நடத்துவார்கள்; தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்படும். இங்கு ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது” என்றார்.
Tamilnadu Tamil News Updates
99 சதவீத மொபைல்போன்கள் இந்தியாவில் தயாரிப்பு: ஓசூரில் அமைச்சர் வைஸ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஓசூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இங்கு எதிர்க்கட்சியில் இருக்கும் சில பெரிய தலைவர்கள் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்படுவதாக நம்புகிறார்கள்.
இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் 99.2 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்” என்றார்.
புயல் உருவாக வாய்ப்பு : மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் டிசம்பர் 1ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது! காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதி இன்றி செயல்பட்ட கல்குவாரி: நடவடிக்கை விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கரூரில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத 31 கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு விளக்கம்
4ம் வகுப்பு மாணவனை காம்பாஸால் குத்திய சக மாணவர்கள்
ம.பி. மாநிலம் இந்தூரில் 4ம் வகுப்பு மாணவனை சகமாணவர்கள் 108 முறை கூர்மையான காம்பஸ்-ஆல் தாக்கியதால் பரபரப்பு. உள்ளூர் போலீசாரிடம் இது குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ள குழந்தைகள் நல வாரியம்
வாக்காளர் பட்டியல்: 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 15.33 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர் என்றும், புதிதாக பெயர் சேர்க்க 9.13 லட்சம், பெயர் நீக்க 1.21 லட்சம், முகவரி மாற்றம் செய்ய 4.99 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் ஆட்சேபனை மனு!
உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனு தாக்கல்
செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க கூடாது. விசாரணையை தள்ளி வைக்கும் ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மணல் குவாரி முறைகேடு: மலாக்கத்துறை தரப்பு கேள்வி
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? என்று அமலாக்கத்துறை தரப்பு கேள்வி எழுப்பப்பட்டது.
மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம, ஆனால் சம்மன் அனுப்ப முடியாது. யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?. குவாரி உரிமைதாரரின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல்
தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. வரும் 29ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், திருவண்ணாமலை, தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிரபல தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் கிடந்த கரப்பான் பூச்சி
கோவையில் பிரபல தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கேட்டப்போது உணவக ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரப்பான் பூச்சி கிடந்த உணவை சாப்பிட்ட 2 பெண்கள் வாந்தி எடுத்துள்ளனர்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி; வெளியானது வீடியோ காட்சிகள்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது. இதுவரை 31 மீட்டர் வரை தோண்டப்பட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. சுரங்கப்பாதையை செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 மீட்டர் வரை துளையிடப்பட்டு அதன்பிறகு புதிய இயந்திரம் வைத்து துளையிடும் பணியானது நடைபெறும். இதற்கான கருவி வரவழைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியர்கள் மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை
இந்தியர்கள் மலேசியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை. 30 நாட்கள் வரை தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இந்தியா மட்டுமின்றி சீனா நாட்டவருக்கும் விசா கட்டுப்பாடுகளை நீக்கி மலேசிய அரசு அறிவித்துள்ளது
வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது; மு.க.ஸ்டாலின்
வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது என சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்; மு.க.ஸ்டாலின்
வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். 11 மாதமே பிரதமராக இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானது. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல, ஏழையும் இல்ல. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஏழை சமூகத்திற்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி காண்பித்தார் என சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
கும்பகோணம் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை
திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்திலிருந்து கும்பகோணம் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடராஜர் சிலை கொண்டுவரப்பட்டது. ஐம்பொன் நடராஜர் சிலையானது இன்று ஒருநாள் சிவபுரம் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1958ல் மாயமான ஐம்பொன் நடராஜர் சிலை வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. 1958ல் மாயமான ஐம்பொன் நடராஜர் சிலை, நியூயார்க் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 1982-ம் ஆண்டு மீட்கப்பட்டது.
உத்தரகண்ட்டில் மஞ்சள் எச்சரிக்கை; சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல்
உத்தரகண்ட் மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுரங்க விபத்து நேரிட்ட பகுதியில் மழை பெய்தால், செங்குத்தாக துளையிடும் பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை மழை தொடர்ந்தால், சுரங்கத்திற்குள் ராணுவ வீரர்களைக் கொண்டு பக்கவாட்டில் துளையிடும் பணி மேற்கொள்ள முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் சிலை திறப்பு; ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் ஸ்டாலின், உ.பி.,முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தனர். இந்த விழாவில் வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது
கரூரில் பயங்கரம்: ஒரு மாணவரின் கழுத்தை அறுத்த மற்றொரு மாணவர்
கரூர் மாவட்டம் குளித்தலை தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம். பொறியியல் மாணவரின் கழுத்தை, எம்.பி.ஏ. மாணவர் திடீரென அறுத்ததால் அதிர்ச்சி.
படுகாயமடைந்த மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதி. எம்.பி.ஏ., மாணவர் அண்ணாமலையை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை
போதை பொருள் விற்பனையை தடுக்க குழுக்கள்
சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள். உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைப்பு
ஒரு குழுவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியும், 2 காவலர்களும் இடம்பெற்றுள்ளனர்
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் விழா. சென்னை வேப்பேரி பெரியார் திடலில், திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி, 500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.46,240க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.46,240க்கும் ஒரு கிராம் ரூ.5780க்கும் விற்பனையாகிறது.
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி மரியாதை
இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி மரியாதை
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் பலி- 3 பேர் கைது
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் திடீர் மரணம்
போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சிசிடிவி பதிவு அழிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை. போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்
போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல். போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு - சிறையில் அடைப்பு
திருப்பதி கோயிலில் மோடி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மலை முழுவதும் தீவிர பாதுகாப்பு.
இலங்கையில் இருந்து 7 பேர் தனுஷ்கோடி வருகை
இலங்கை மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் போலீசார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்
மண்டபம் காவல் நிலையத்தில் இலங்கை அகதிகள் 7 பேரும் ஒப்படைப்பு - போலீசார் விசாரணை
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.19 அடியாக உயர்ந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு
நீர்வரத்து வினாடிக்கு 532 கனஅடியாக உள்ளது- நீர்மட்டம் 23 அடியை தாண்டியதும் உபரி நீரை கூடுதலாக திறப்பது குறித்து முடிவு
காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
கன்னியாகுமரி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை- மாவட்ட ஆட்சியர்கள் தகவல்
வி.பி.சிங் சிலை இன்று திறப்பு
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சமூகநீதி காவலர் என அழைக்கப்படும் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி உள்ளிட்டோர் பங்கேற்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.