Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
05 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 06, 2023 07:05 IST
New Update
Chennai-Rain

News updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

Tamil News Updates 

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

கர்நாடகத்தில் வறட்சி: சித்த ராமையா ஆலோசனை

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அரசின் வறட்சி ஆய்வுக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.

டெல்டாவில் குறுவை பாதிப்பு: விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.13,500 இழப்பிடு வழங்க ஸ்டாலின் உத்தரவு

டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு

ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்க

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி முக்கொம்பில் 17 வயது சிறுமியை தொல்லை செய்த 4 காவலர்கள் கைது

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் காதலருடன் வந்த 17 வயது சிறுமியை 4 காவலர்கள் தொல்லை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. உத்தரவை அடுத்து விசாரணை நடத்தி எஸ்.ஐ. சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய 4 பேர் மீது ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் உள்பட 4 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். நால்வரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.06 கோடி மகளிருக்கு மாதம் ரூ. 1,000 திட்டத்தை தொடங்கி வைத்தார்.

என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன் - ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி: “என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன்; ஏனெனில், நானொரு சனாதனவாதி; சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக்கூறும் நபர்களை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனத்தின் வெளிப்பாடு” என்று கூறினார்.

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார் பவன் கல்யாண் 

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2023:  நார்வே எழுத்தாளர் ஜோன் ஃபொஸ்ஸேவுக்கு அறிவிப்பு

2023-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபொஸ்ஸே-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களை தொடர்ந்து டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

பகுதி நேர ஆசிரியர்களை தொடர்ந்து டெட் ஆசிரியர்களின் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2வது முறையாக அண்ணாமலை ஆஜர்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2வது முறையாக அண்ணாமலை ஆஜரானார். தி.மு.க பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – ஐகோர்ட் கேள்வி

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் நாளை சேரலாம் – அண்ணாமலை

ஒரு கட்சி வெளியேறினால், தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று ஆகாது. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் நாளை சேரலாம். எந்த பாதையில் பாஜக செல்ல வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

104 வயது பாட்டி விமானத்தில் இருந்து குதித்து சாகசம்

சிகாகோவை சேர்ந்த 104 வயது பாட்டி விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார். இதன்மூலம் ஆகாயத்தில் இருந்து 'ஸ்கை டைவிங்' செய்த மிக வயதான பெண்மணி என்ற சாதனையை படைத்தார்

லியோ படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு

லியோ படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகிறது. சரியான நேரம் தெரியாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் – அண்ணாமலை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை; பொன்.ராதாகிருஷ்ணன்

ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் வருகிறது, அதில் பா.ஜ.க கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. பா.ஜ.க ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

என் கருத்தை கட்சி தலைமையிடம் நான் கூறிவிட்டேன் – அண்ணாமலை

கூட்டணி குறித்து பா.ஜ.க தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். என் கருத்தை கட்சி தலைமையிடம் நான் கூறிவிட்டேன் என பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

உலக கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இந்த முதல் போட்டி நடைபெறுகிறது

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் – அண்ணாமலை

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்கள் விருப்பம், அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்று வரும் பா.ஜ.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் புகார் - 3 பேர் மீது சி.பி.ஐ வழக்கு 

மும்பை சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு 

பிற்பகலில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம்

இன்று பிற்பகல் 2 மணிக்கு பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு. சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் கூட்டம். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தற்போது பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், பிற்பகலில் பாஜக உயர்நிலை கூட்டம்

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் கலப்பு இரட்டைர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம். தீப்பிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் இணை 2-0 என மலேசிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம். 

கூட்டத்திற்கு தாமதமாக வந்து பங்கேற்ற அண்ணாமலை 

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பு. காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் அண்ணாமலை  தாமதமாக வந்து பங்கேற்பு. 

பாஜக அரசின் பழிவாங்கும் செயல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை. எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது- தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி சோதனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 

ஆசிரியர்கள் கைது- இ.பி.எஸ் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஈபிஎஸ் வலியுறுத்தல் 

ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

கைது செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

கைதாகி திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும்- நீதிபதி

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி. பைக்கை எரித்துவிட வேண்டும், யூடியூப் தளத்தை மூட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து

விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் - நீதிபதி சி.வி.கார்த்திகேயன். ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக் வைத்துள்ளார்,ரூ.3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பியுள்ளார் - காவல்துறை

டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை பின் தொடர்பவர்களில் 45 லட்சம் பேர் சிறார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் ஜாமின் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு

தனித்து போட்டியிடுவது புதிதல்ல - கேசவ விநாயகம்

பா.ஜ.க பல முறை தனித்து போட்டியிட்டுள்ளது. தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது-  கேசவ விநாயகம்

அண்ணாமலை இல்லாமல் கூட்டம் தொடக்கம்

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க்கது

இந்தியாவுக்கு 19வது தங்கம்

| ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம் . வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது .சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்தியா . நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 82வது பதக்கம்

டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி மனு 

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் மனு - சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை `நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி மனு . 

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை 

சென்னை அடையாறில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 

 போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போலீஸார் குவிப்பு.. நுழைவாயில் முன்பு போலீஸார் குவிப்பு. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைப்பு

அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் இன்று நடைபெற உள்ளது

 தொடர் மின்தடை - சாலை மறியல்

திண்டுக்கல், நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல். முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறி மறியல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment