Advertisment

Tamil News: பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Ukraine Russia Conflict Latest News 13 March 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Nadu News Updates: சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

1,300 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி

ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 129வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நோ கொரோனா பலி

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

காந்தி-களை விலக்கும் திட்டம் இல்லை - காங்கிரஸ் திட்டவட்டம்

5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி-களை விலகிக் கொள்ளும் கூறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் மறுத்துள்ளது.

2 ஆவது டெஸ்ட் - இலங்கை 86/6

இந்தியா - இலங்கை மோதும் 2வது டெஸ்ட்டின் முதல்நாளில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. பகலிரவாக நடைபெறும் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:24 (IST) 13 Mar 2022
    காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார்; செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்


  • 22:13 (IST) 13 Mar 2022
    இந்திய அணி 2வது இன்னிங்சில் 303 ரன்களில் டிக்ளேர்; இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்கு

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


  • 21:35 (IST) 13 Mar 2022
    கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் – சோனியா காந்தி

    தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என செயற்குழு கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது


  • 20:34 (IST) 13 Mar 2022
    தமிழகத்தில் 100க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு 1,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


  • 19:51 (IST) 13 Mar 2022
    உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

    51 வயதான நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் பிரென்ட் ரெனாட் இன்று உக்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


  • 19:50 (IST) 13 Mar 2022
    உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

    51 வயதான நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் பிரென்ட் ரெனாட் இன்று உக்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


  • 19:04 (IST) 13 Mar 2022
    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு

    சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடைபெற்றது


  • 18:51 (IST) 13 Mar 2022
    கொரோனா பரவல்; சீனாவில் முழு ஊரடங்கு அமல்

    சீனாவின் ஷென்சென் நகரில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது


  • 17:31 (IST) 13 Mar 2022
    கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கம்

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்


  • 17:27 (IST) 13 Mar 2022
    ராணுவ தளத்தின் மீது ரஷ்ய தாக்குதலில் 35 பேர் உயிரிழப்பு - உக்ரைன்

    உக்ரைனின் மேற்கு இராணுவ தளத்தின் மீது ரஷ்ய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் Lviv பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


  • 17:19 (IST) 13 Mar 2022
    உக்ரைனின் மைகோலாயிவில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு

    தெற்கு உக்ரைனின் மைகோலாயிவில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்


  • 15:46 (IST) 13 Mar 2022
    சங்ககிரி அருகே தனியார் பேருந்து விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அக்கமாபேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


  • 15:14 (IST) 13 Mar 2022
    உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை மீட்க நடவடிக்கை தேவை - மோடி உத்தரவு

    உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு சூழல் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.


  • 14:47 (IST) 13 Mar 2022
    வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி., நடராஜன் சவால்!

    கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா தனது சாதனைகளை பட்டியலிட்டு கோவை எம்.பி. நடராஜன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு சவால் விட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 13:54 (IST) 13 Mar 2022
    சென்னையில் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு

    சென்னை திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டன.


  • 13:46 (IST) 13 Mar 2022
    உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

    உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.


  • 13:35 (IST) 13 Mar 2022
    தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை: தமிழிசை கருத்து

    தெலங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றம் தொடங்கியிருப்பதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார் அவர்.


  • 13:34 (IST) 13 Mar 2022
    தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை: தமிழிசை கருத்து

    தெலங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றம் தொடங்கியிருப்பதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார் அவர்.


  • 13:23 (IST) 13 Mar 2022
    உக்ரைனுக்கு ஆதரவாக இத்தாலியில் போராட்டம்

    இத்தாலியில் உக்ரைனுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  • 13:10 (IST) 13 Mar 2022
    முதுகலை மருத்துவ படிப்பு: 15 சதவீதம் வரை நீட் தேர்வு கட் ஆஃப் குறைப்பு

    முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்ணை 15 சதவீதம் வரை தேசிய தேர்வுகள் வாரியம் குறைத்துள்ளது. பல்வேறு மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்பினரின் கோரிக்கை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


  • 13:09 (IST) 13 Mar 2022
    'வறண்ட வானிலையே நிலவும்'

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:51 (IST) 13 Mar 2022
    ஏப்.2-இல் டெல்லிக்கு முதல்வர் பயணம்

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஏப்ரல் 2ம் தேதி திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளார்.


  • 12:46 (IST) 13 Mar 2022
    ஏப்.2-இல் டெல்லிக்கு முதல்வர் பயணம்

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.


  • 12:46 (IST) 13 Mar 2022
    ஏப்.2-இல் முதல்வர் டெல்லிக்கு பயணம்

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.


  • 12:46 (IST) 13 Mar 2022
    ஏப்.2-இல் டெல்லிக்கு முதல்வர் பயணம்

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஏப்ரல் 2ம் தேதி திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளார்.


  • 12:44 (IST) 13 Mar 2022
    திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம்

    திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்து கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


  • 12:31 (IST) 13 Mar 2022
    இலங்கையில் விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை!

    இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.176க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 12:24 (IST) 13 Mar 2022
    சிக்கிம்: பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்கள்!

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 210க்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இயந்திரங்களை பொறுத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


  • 12:14 (IST) 13 Mar 2022
    ஆந்திரத்தில் சாலை விபத்து: 6 மாத குழந்தை உள்பட 5 பேர் பலி

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, காயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


  • 12:01 (IST) 13 Mar 2022
    தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

    அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 11:43 (IST) 13 Mar 2022
    தமிழர்களை திமுக காப்பாற்றும்-முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். உக்ரைனில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்ட நிலையில் இதனை அவர் தெரிவித்தார்.


  • 11:30 (IST) 13 Mar 2022
    வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

    தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.


  • 11:30 (IST) 13 Mar 2022
    வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்

    தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.


  • 10:40 (IST) 13 Mar 2022
    வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் - வைகோ

    தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி தமது அதிகார வரம்பை மீறி அரசியல் கருத்துகளை பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அவரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 09:48 (IST) 13 Mar 2022
    ஈராக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

    ஈரானில் இருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.


  • 09:34 (IST) 13 Mar 2022
    ஒரே நாளில் 47 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 5559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


  • 09:24 (IST) 13 Mar 2022
    மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் மேளா - தமிழக அரசு உத்தரவு

    மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வங்கிக்கடன் மேளா நடத்தப்படுகிறது.


  • 08:39 (IST) 13 Mar 2022
    தேசிய லோக் அதாலத்: ஒரே நாளில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

    தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.


  • 08:16 (IST) 13 Mar 2022
    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேரம் மாற்றம்

    டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், காலை 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது


Tamil Nadu Ukraine Russia Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment