Advertisment

Tamil News Highlights: உக்ரைன் போர்; இதுவரை 902 பொதுமக்கள் பலி – ஐநா அமைப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Ukraine Russia Conflict Latest News 20 March 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: உக்ரைன் போர்; இதுவரை 902 பொதுமக்கள் பலி – ஐநா அமைப்பு

Tamil Nadu News Updates: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் மார்ச் 18 ஆம் தேதி வரை சுமார் 847 பேர் உயிரிழந்துள்ளனர்.1399 பேர் காயமடைந்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஈசிஆரில் மது விருந்து - 500 பேரிடம் விசாரணை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை தனியார் விடுதியில் சட்டவிரோதமாக மது விருந்து நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சோதனையில் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைக்கு இதுதான் சரியான நேரம், உடன்படாவிட்டால் ரஷ்யா பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அரசுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இது இஸ்லாமியர்கள் மீதான திட்டமிட்ட சதி" - Hijab Protest

வங்கக் கடலில் உருவாகிறது "அசானி" புயல்

வங்கக்கடலில் அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே அசானி புயல் நாளை உருவாகுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, அந்தமானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 136வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:43 (IST) 20 Mar 2022
    2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; 3 ஆண்டுகளில் சங்க கட்டடம் - நடிகர் கார்த்தி

    நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி இது. பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம். 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்



  • 20:43 (IST) 20 Mar 2022
    2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி; 3 ஆண்டுகளில் சங்க கட்டடம் - நடிகர் கார்த்தி

    நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி இது. பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம். 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்



  • 20:14 (IST) 20 Mar 2022
    தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை



  • 19:45 (IST) 20 Mar 2022
    உக்ரைன் போர்; இதுவரை 902 பொதுமக்கள் பலி – ஐநா அமைப்பு

    உக்ரைனில் இதுவரை குறைந்தது 902 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,459 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் கனரக பீரங்கிகள் மற்றும் பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகளில் இருந்து ஷெல் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் போன்ற வெடிக்கும் ஆயுதங்களால் ஏற்பட்டவை என்று OHCHR தெரிவித்துள்ளது.

    உக்ரைனில் ஒரு பெரிய கண்காணிப்புக் குழுவைக் கொண்டுள்ள OHCHR, மரியுபோல் உட்பட மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் இருந்து பலியானோர் அறிக்கைகளைப் பெறவோ அல்லது சரிபார்க்கவோ முடியவில்லை என்பதால், உண்மையான எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது என்று கூறியுள்ளது. (ராய்ட்டர்ஸ்)



  • 18:02 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி

    நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்



  • 17:43 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்க தேர்தல் - கருணாஸ், பூச்சி முருகன் வெற்றி

    நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் வெற்றி இருவரும் பாண்டவர் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.



  • 16:57 (IST) 20 Mar 2022
    மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு

    மணிப்பூர், இம்பாலில் இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் பிரேன் சிங் மீண்டும் மணிப்பூர் மாநில முதலமைச்சராகிறார்.



  • 16:25 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் முன்னிலை

    2019ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை; விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர் 710 வாக்குகளும், பாக்யராஜ் 510 வாக்குகளும் பெற்றுள்ளனர்.



  • 16:22 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்கத் தேர்த: விஷால் அணி தொடர்ந்து முன்னிலை

    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தபால் வாக்குகளிலும் பாண்டவர் அணியே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 347 தபால் வாக்குகள் பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 118, பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 429 தபால் வாக்குகள் பெற்றுள்ளனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 219, பூச்சி முருகன் 214 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.



  • 16:16 (IST) 20 Mar 2022
    சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



  • 15:35 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை; விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

    2019ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை; விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில், தலைவர் பதவிக்கான போட்டியில் நாசர் 710 வாக்குகளும், பாக்யராஜ் 510 வாக்குகளும் பெற்றுள்ளனர்.



  • 15:28 (IST) 20 Mar 2022
    விவசாயிகளே பாராட்டும் வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா? இ.பி.எஸ்-க்கு அமைச்சர் கண்டனம்

    விவசாயிகளே பாராட்டும் வேளாண் பட்ஜெட்டை கொச்சைப்படுத்துவதா? என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு என்பது பொய் விமர்சனம், விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக திமுக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.



  • 14:26 (IST) 20 Mar 2022
    ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக ஆஜராகிறார் ஓபிஎஸ்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.



  • 13:56 (IST) 20 Mar 2022
    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் நாளை ஆஜர்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இவர் ஆஜராகிறார்.



  • 13:41 (IST) 20 Mar 2022
    விடைத்தாள்கள் திருத்தப்படும்: அமைச்சர் பொன்முடி

    அண்ணா பல்கலை. ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



  • 13:28 (IST) 20 Mar 2022
    உத்தரகாண்டில் நாளை காலை புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

    உத்தரகாண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை பதவியேற்கின்றனர்.



  • 13:19 (IST) 20 Mar 2022
    சிட்டுக் குருவிகளுக்காக கூடு: மாணவர்கள் அசத்தல்

    இன்று உலகச் சிட்டு குருவிகள் தினத்தையொட்டி, செஞ்சி அருகே சிட்டுக் குருவிகளுக்காக கூடு கட்டி பள்ளி மாணவர்கள் அச்ததினர்.



  • 13:13 (IST) 20 Mar 2022
    'கொரோனா 4-ஆம் அலை பரவலைத் தடுக்க தடுப்பூசி அவசியம்'

    தமிழகத்தில் கொரோனா 4-ஆம் அலை பரவலைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.



  • 13:09 (IST) 20 Mar 2022
    அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மோசமான வானிலை காரணமாகவும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:59 (IST) 20 Mar 2022
    உக்ரேனிய குழந்தைகளை சந்தித் போப் பிரான்சிஸ்!

    ரோம் நகரில் புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை போப் பிரான்சிஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



  • 12:50 (IST) 20 Mar 2022
    தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:27 (IST) 20 Mar 2022
    'அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை'

    'அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை' என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி கல்வியை மேம்படுத்தி விரும்பும் வேலைக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம் என்றார் முதல்வர்.



  • 12:10 (IST) 20 Mar 2022
    கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பை தொடங்கி வைத்த முதல்வர்

    வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பை முதல்வர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பணி போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.



  • 12:09 (IST) 20 Mar 2022
    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி முன்னிலை

    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது! பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



  • 12:06 (IST) 20 Mar 2022
    முதல்வருக்கு திருவாரூர் மாணவி வேண்டுகோள்

    18 வயது வரை குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று 20 குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்த திருவாரூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 11:45 (IST) 20 Mar 2022
    முறைகேடு: பாக்கியராஜ் அணி புகார்

    நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் இருந்ததாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியதாக இயக்குநர் பாக்கியராஜ் அணி புகார் தெரிவித்துள்ளனர்.



  • 11:20 (IST) 20 Mar 2022
    தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றம்: சசிகலா

    தமிழக நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பாதாக உள்ளது என்று வி.கே.சசிகலா தெரிவித்தார்.



  • 11:18 (IST) 20 Mar 2022
    மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    துணைத் தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் அளித்த புகாரால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்கியது.



  • 10:39 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

    நடிகர் சங்கத் தேர்தல் துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் புகார் கூறிய நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.



  • 10:22 (IST) 20 Mar 2022
    இலங்கையில் காகிதத்திற்கு தட்டுப்பாடு - பள்ளித் தேர்வுகள் ஒத்திவைப்பு

    பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், காகித்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, பள்ளித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இலங்கையில் 45 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ள நிலையில், 30 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத காகிதம், பேனா மை இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • 09:59 (IST) 20 Mar 2022
    இந்தியாவில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, கொரோனாவிற்கு 26,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 09:49 (IST) 20 Mar 2022
    என்ஜின் கோளாறு - ரயில் நிறுத்தி வைப்பு

    சென்னையில் இருந்து பழனி வந்த ரயில், என்ஜின் கோளாறு காரணமாக கோம்பைப்பட்டி கிராமம் அருகே நின்றது. என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • 09:31 (IST) 20 Mar 2022
    உக்ரைன் மீது சூப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்!

    உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதை புதின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.



  • 09:06 (IST) 20 Mar 2022
    இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

    இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் முதல் முறையாக இந்தியா வருகிறார். ஏப்ரல் 2இல் இந்தியா வரும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.



  • 08:38 (IST) 20 Mar 2022
    இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

    இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சக நாட்டு இளம் வீரர் கார்லோசை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்



  • 08:03 (IST) 20 Mar 2022
    நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

    2019இல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் பதிவான சுமார் 2500 வாக்குகளில், 1500 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment