பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 493-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் உள்ளது.
Tamil News Updates
கரூரில் திமுக பெண் கவுன்சிலர் படுகொலை: எஸ்.பி. விசாரணை
கரூரில் திமுக பெண் கவுன்சிலர் ரூபா (42) என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் 5 சவரன் தங்க சங்கிலியையும் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
துணைவேந்தர் தேர்வுக் குழுவைத் தமிழக அரசு நியமித்ததற்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில், தமிழ்நாடு அரசு யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரியில் சாதி மோதல்களைத் தடுக்க நீதிபதி சந்துரு ஆணையம் கருத்து கேட்க அழைப்பு
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும், சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருடன் தெலுங்கு தேசம் கட்சியினர் சந்திப்பு
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், அதில் தலையிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாரா லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜன.22ல் அயோத்தி ராமர் கோவிலில் குடமுழுக்கு?
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் குடமுழுக்கு, ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என்றும், ஜனவரி 22 முதல் 24ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வருகிற 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி
நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கொலீஜியம் பரிந்துரைத்த 70 நீதிபதிகளை நியமிக்காமல் உள்ளது ஒன்றிய அரசு. கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
ஈரோட்டில் தி.மு.க பெண் கவுன்சிலர் கொலை
ஈரோடு, சென்ன சமுத்திரம் பேரூராட்சி தி.மு.க பெண் கவுன்சிலர் ரூபா கொலை செய்யப்பட்டுள்ளார். பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ரூபாவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி; டிக்கெட்டை பதிவேற்ற நாளை கடைசி தேதி
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 7 ஆயிரம் பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளனர். 3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகளை பரிசீலித்து, ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
திருமாவளவனிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
தமிழகத்திற்15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை. வரும் 28ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கூறப்பட்டுள்ளது
சென்னை புறநகரில் அமைகிறது தீம் பார்க்
சென்னை புறநகரில் டிஸ்னி தீம் பார்க் போல் 100 ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழக சுற்றுலாத்துறை திட்டம் 5 ஆண்டுகளுக்குள் அமையவுள்ள அட்வென்சர் ரைடிங், விளையாட்டு அரங்குகள், நீர் விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்
தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை : மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில் முக்கிய நினைவு நாட்கள், மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன என்று சென்னையில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
புதிய தலைமைச் செயலக வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் 2018ல் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச்செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு அனுமதியளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், தி.மலை, திருநெல்வேலி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அக். 24ம் தேதி மகளிர் உரிமை மாநாடு - கனிமொழி அறிவிப்பு
திமுக மகளிர் அணி சார்பில் அக். 24ம் தேதி சென்னையில் YMCA மைதானத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும்- திமுக எம்பி கனிமொழி அறிவிப்பு
இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க முடிவு
ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு என தகவல்
துபாயில் உள்ள அவரை அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை
வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது
பழம்பெரும் பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்’ விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்.
மாணவன் தற்கொலை- பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டையில் 12ம் வகுப்பு மாணவன் மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு உயர்நீதிமன்றம் தடை
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு உயர்நீதிமன்றம் தடை .இ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு உத்தரவு. தனபால் கருத்துக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருப்பதற்கு முகாந்திரம் உள்ளது - உயர் நீதிமன்றம் தனபால் கடந்த 5 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் - இபிஎஸ் தரப்பு
இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி கருவிகளை பறித்து அடாவடி மீன்களை தர மறுத்த மீனவர்கள் 5 பேர் மீது இரும்பு பைப்களை கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் அள்ளிச்சென்றனர்
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்
கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜரானார் கனகராஜின் சகோதரர் தனபால் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் தான் சதிதிட்டம் போடப்பட்டது கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - விசாரணைக்கு ஆஜரான பிறகு தனபால் பேட்டி
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தி நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் தொழிலதிபர் சண்முகம் அடிக்கடி விஜய் அபார்ட்மெண்டில் 2வது மாடியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல்
அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது
பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு . அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்" அதிமுகவினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் கருத்து.
திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
வி.சி.க தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
தேரை வடம் பிடித்து இழுத்து கலெக்டர் வழிபாடு
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார். ஸ்ரீதேவி, பூதேவி உடன் தேரில் எழுந்தருளிய பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வருகிறார். கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள். தேரின் பின்னால், தரையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.
புதுக்கோட்டையில் 12-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை. மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை. தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை
40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
தமிழகத்தில் சென்ளை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை. சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை.
ஒரே டிக்கெட் முறை- ரயில்வேக்கு கடிதம்
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வரும் திட்டம். புறநகர் ரயில்களில் டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய கோரிக்கை
தெற்கு ரயில்வேக்கு சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் கடிதம். டிக்கெட் எடுத்த 6 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம் என விதியை மாற்றம் செய்ய வேண்டும். தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என தகவல்
காங்கிரஸ் மாவட்ட தலைவர் விபத்தில் பலி
காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் விபத்தில் உயிரிழப்பு
சாலையோர கடையில் சாப்பிடும் போது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு - போலீசார் விசாரணை
குடிநீர் வரி- ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தல்
சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது - சென்னை குடிநீர் வாரியம். பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் அக்.1 முதல் செயல்படாது. டிஜிட்டல் கட்டண முறையை ஊக்கவிக்கவும், வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
21 மாவட்டங்களில் இன்று மழை
சென்னை, திருவள்ளூர், வேலூர், தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.