Advertisment

Tamil News Today : ஜெயக்குமார் கைது: மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Local body election Latest News 21st February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ஜெயக்குமார் கைது: மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Tamil Nadu News Updates: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, இயந்திர கோளாறு போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி, திருவண்ணாமலை நகராட்சியில் 2 வாக்குச்சாவடி ஆகும்.

Advertisment

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 109 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91. 43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மீண்டும் முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதன் மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் 6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு இந்தியா சென்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 05:20 (IST) 22 Feb 2022
    ஜெயக்குமார் ஓட்டுநர் புகார்; திமுகவைச் சேர்ந்த 3 பேர் கைது

    சென்னை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் என்பவர் அளித்த புகாரின் பேரில், திமுகவை சேர்ந்த கொளஞ்சியப்பன், ஸ்ரீதர், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



  • 05:17 (IST) 22 Feb 2022
    ஜெயக்குமார் கைது: மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் முன் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.



  • 22:37 (IST) 21 Feb 2022
    திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயக்குமாரை கைது - அண்ணாமலை கண்டனம்

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “திமுக அரசு தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்; கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு அதைதடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.



  • 22:33 (IST) 21 Feb 2022
    ஜெயக்குமார் கைது; ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நடுவர் வீட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்

    கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.



  • 22:20 (IST) 21 Feb 2022
    ஜெயக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டம்

    திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



  • 22:10 (IST) 21 Feb 2022
    ஜனநாயக படுகொலையை தட்டிக்கேட்ட ஜெயக்குமாரை கைது செய்வதா? - அதிமுக தலைமை கண்டனம்

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஜனநாயக படுகொலையை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்வதா?

    தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமார் கைது உள்ளது. இத்தனை ஆண்டுகளாகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோத செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கதக்கது.” என்று தெரிவித்துள்ளனர்.



  • 21:52 (IST) 21 Feb 2022
    ஜெயக்குமார் கைது: போலீசார் எனது தந்தையை பலவந்தமாக இழுத்து சென்றனர் - ஜெயவர்தன்

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய மகன் ஜெயவர்தன், “வீடு புகுந்து எனது தந்தையை போலீசார் பலவந்தமாக இழுத்து சென்றுள்ளனர். கைது பற்றி எந்த விவரமும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளர்.



  • 21:30 (IST) 21 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஜெயக்குமாரை கைது செய்வதா என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 20:32 (IST) 21 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

    சென்னை, வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் தேர்தலின் போது திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை ஜெயக்குமார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவின் போது திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.



  • 20:08 (IST) 21 Feb 2022
    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனாவில் இருந்து மீண்ட வைகோவின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததார்.



  • 19:19 (IST) 21 Feb 2022
    கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய் அரசு ஒப்புதல்

    இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 12-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.



  • 19:16 (IST) 21 Feb 2022
    வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டிஜிபி சைலேந்திர பாபு

    டிஜிபி சைலேந்திர பாபு: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு ஆயுத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 40,910 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். தேவையான இடங்களில் ட்ரோன் மூலமும் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.



  • 18:14 (IST) 21 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 5 வார்டுகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குசாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவைடந்தது.



  • 18:10 (IST) 21 Feb 2022
    ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு இ.பி.எஸ் கண்டனம்

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையில் ஒப்படைத்தது குற்றமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என முதல்வர் கூறுகிறாரா? எதையும் சட்டரீதியாக சந்திக்க அதிமுக தயார். வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவுகள் வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.



  • 18:05 (IST) 21 Feb 2022
    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துகிறது; அதில் நாங்கள் தலையிட முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.



  • 16:53 (IST) 21 Feb 2022
    கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:31 (IST) 21 Feb 2022
    இலங்கை சிறையில் வாடும் 29 தமிழக மீனவர்களையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்

    இலங்கை சிறையில் வாடும் 29 தமிழக மீனவர்களையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என்றும், மீனவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட படகுகளை மீட்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்



  • 16:23 (IST) 21 Feb 2022
    பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நிற்பதால்தான் எனது தந்தைக்கு சிறை - தேஜஸ்வி யாதவ் பேட்டி

    மாட்டுத்தீவன ஊழலைத் தவிர வேறு எந்த ஊழலும் நாட்டில் நடக்கவில்லையா? பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நிற்பதால்தான் எனது தந்தைக்கு சிறைவாசம் என லாலு பிரசாத் யாதவின் 5 ஆண்டு சிறை தண்டனை குறித்து தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்துள்ளார்



  • 16:13 (IST) 21 Feb 2022
    வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகே ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்போம் - அண்ணாமலை

    வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகே, மறைமுகத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை தெரிவிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • 16:01 (IST) 21 Feb 2022
    துபாயில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    துபாயில் நடைபெறும் கண்காட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பாக அமைக்கப்படவுள்ள காட்சி அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளதாக கூறப்படுகிறது. இது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதன்முறையாக செய்யும் வெளிநாட்டு பயணமாக இருக்கும்.



  • 15:15 (IST) 21 Feb 2022
    வாக்கு எண்ணிக்கை; மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்

    வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளதாக வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 15:04 (IST) 21 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அரசியல் யுத்தமாக திமுக கருதவில்லை. வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை கண்ணும் கருத்துமாக செயலாற்ற வேண்டும். 4ம் தேதி நடைபெறும் தேர்தல், மறைமுகமாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி." என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 15:02 (IST) 21 Feb 2022
    ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு!

    லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் உத்தரவுக்கு எதிராக உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



  • 15:01 (IST) 21 Feb 2022
    முறைகேடுகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை - அண்ணாமலை!

    "நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவில் நடந்த முறைகேடுகளை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. மதுரையில் முக அடையாளத்தை காண்பிக்க பாஜக முகவர் கூறிய நிலையில், ஹிஜாப் விவகாரம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • 14:30 (IST) 21 Feb 2022
    டி20 அணிகளுக்கான தரவரிசை: இந்தியா முதலிடம்!

    ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசையில் 269 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.



  • 14:29 (IST) 21 Feb 2022
    மாட்டு தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை விதிப்பு!

    மாட்டு தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:19 (IST) 21 Feb 2022
    நடிகர் விஜய் வந்து வாக்களித்த கார் இன்சுரன்ஸ் மே 28 வரை செல்லுபடியாகும் - செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கம்!

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் காரில் வந்திருந்தார். அவரது சிவப்பு கார் - கருப்பு மாஸ்க் பெரிதும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், விஜய் வந்த சிவப்பு காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், நடிகர் விஜய் வந்து வாக்களித்த கார் இன்சுரன்ஸ் மே 28 வரை செல்லுபடியாகும் என விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார்.



  • 13:50 (IST) 21 Feb 2022
    கோவையில் தேர்தல் முறைகேடு; வழக்கு நாளை விசாரணை!

    கோவை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளார். மனுத்தாக்கல் நடைமுறைகள் முடியும் பட்சத்தில் நாளை வழக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 13:40 (IST) 21 Feb 2022
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!

    திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் அளித்த புகாரில் 10 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 13:38 (IST) 21 Feb 2022
    அறங்காவலர் நியமனம்: சட்டவிரோதமும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்!

    அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில் அறநிலையத் துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



  • 13:36 (IST) 21 Feb 2022
    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

    தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், மாணவி படித்த பள்ளியில் ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையிலான 10 பேர் கொண்ட குழு இன்று விசாரணையை தொடங்கியது.



  • 12:57 (IST) 21 Feb 2022
    பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு வெல்லும்- முதல்வர் ஸ்டாலின்!



  • 12:39 (IST) 21 Feb 2022
    வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்.. செந்தில் பாலாஜி புகார்!

    கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.



  • 12:39 (IST) 21 Feb 2022
    தேர்தல் ரிசல்ட்.. மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கூடுதல் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 12:38 (IST) 21 Feb 2022
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:09 (IST) 21 Feb 2022
    பட்ஜெட்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை!

    2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழிற்சாலை மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 12:06 (IST) 21 Feb 2022
    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை!

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில்’ கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என தெரிகிறது.



  • 12:06 (IST) 21 Feb 2022
    இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டின் எதிர்கால தலைவர்கள்.. மோடி!

    கல்வியில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் தாக்கங்கள்’ குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரையில்’ இளம் தலைமுறையினருக்கு அதிகாரம் அளிப்பது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும் என்று பேசினார்.



  • 11:27 (IST) 21 Feb 2022
    ஆந்திர அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு!

    ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி கெளதம் ரெட்டி(59) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.



  • 11:22 (IST) 21 Feb 2022
    கடம்பூர் ராஜு மீதான வழக்கு ரத்து!

    கடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் அமைச்சர் அதிமுக கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:22 (IST) 21 Feb 2022
    சென்னையில் திமுக நிர்வாகி கொலை.. 4 பேர் கைது!

    சென்னை, காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் கொல்லப்பட்ட வழக்கில், வினோத் உள்பட 4 பேர் கைதாகினர். குடும்ப தகராறில் திமுக நிர்வாகியை கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தகவல்!



  • 10:44 (IST) 21 Feb 2022
    ஆந்திர அமைச்சர் மாரடைப்பால் காலமானார்

    ஆந்திரா ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி(50) மாரடைப்பால் உயிரிழந்தார்.



  • 10:23 (IST) 21 Feb 2022
    ஒற்றை மொழியின் ஆதிக்கம் தவிர்ப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.



  • 09:49 (IST) 21 Feb 2022
    இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 206 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 37,901 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 09:25 (IST) 21 Feb 2022
    சென்னை வாக்குச்சாவடியில் ரகளை - இருவர் கைது

    சென்னை திருவான்மியூர் ஒடைகுப்பம் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேற்று முன் தினம் சிலர் ரகளையில் ஈடுபட்டதில் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கதிரவன், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • 08:43 (IST) 21 Feb 2022
    மருத்துவ கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்

    எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.



  • 08:36 (IST) 21 Feb 2022
    இந்து நிர்வாகி கொலை - சிமோகாவில் 144 தடை

    கர்நாடகா சிமோகா நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 08:31 (IST) 21 Feb 2022
    நாளை வாக்கு எண்ணிக்கை - மூன்றடுக்கு பாதுகாப்பு

    தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Tamilnadu Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment