Advertisment

Tamil News Highlights: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு

Tamil Nadu News, Tamil News Today, Vijay antony daughter, AIADMK-BJP alliance- 19 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
SENTHIL

News Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

486-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil News Updates

மனைவியிடம் விவாகரத்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மனுதாக்கல்

மனைவியிடம் விவாகரத்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக தகவல்.

விநாயகர் சிலை கரைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வீடுகளில் பூஜை செய்த களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி கரைக்கலாம். "களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்களை கொண்டு செய்த சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்" "சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் அலங்கார பொருட்களை 24 மணி நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும்" என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

பழனி முருகன் கோயிலுக்குள் வரும் 1ம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை. புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களுக்கும் தடை. செல்போன் பாதுகாப்பு மையங்களில், செல்போனை ஒப்படைத்துச் செல்லவும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல் 

தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்களில் சமூக நீதி: மு.க. ஸ்டாலின் உரை

"தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டது. தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகின்றன” என சமூக நீதிக்கான இந்தியாவின் 3வது தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம்

வாரணாசியில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மைதானத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த கிரிக்கெட் மைதானத்துக்கு செப்.23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

புதுச்சேரி: மதுபானக் கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை (செப்.20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபானம் மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நியோமேக்ஸ் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும்  -  ஐகோர்ட்

முறையான விசாரணை நடத்தாவிட்டால், நியோமேக்ஸ் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்ற நேரிடும். நியோமேக்ஸ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்; தேவைப்பட்டால் விசாரணை அதிகாரிகளின் தொலைபேசி தொடர்புகளை சோதனை செய்யவும் நேரிடும் என நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், விசாரணை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கையில் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்;  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி எதிரொலியாக, சிவகங்கையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  சிவகங்கையில் உள்ள பல்வேறு உணவகங்களில் ஆய்வு செய்து, சுமார் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்தனர்.  50 கிலோ கெட்டுப்போன உணவு, ஷவர்மா உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர்.

அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேக்நாத் ரெட்டி: “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்; அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டு சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அகில இந்திய சம்மேளனம் வழங்கிடும் சான்றிதழ்கள் மட்டுமே பொறியியல், பிற தொழில்முறை படிப்புகளில், 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் உயரிய ஊக்க தொகை வழங்கிட பரிசீலிக்கப்படும். ” என்று அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க கூட்டணி குறித்து இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை - வானதி சீனிவாசன்

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்: “அ.தி.மு.க கூட்டணி குறித்து இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி மரணம் - அமைச்சர் அதிரடி நடவடிக்கை

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி பலியான விவகாரத்தில், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை

தூத்துக்குடியில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை; ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன என வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மக்களவை ஒத்திவைப்பு

மக்களவை ஒத்திவைப்பு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: அவர்கள் அதிகாரம் பெற வழி வகுக்கும் - மோடி

புதிய பார்லிமென்டில் முதல் நாள் சபை நடவடிக்கைகளில் ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீண்டகாலமாக நிலவும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, "பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வழி வகுக்கும்" என்று கூறினார்.

சென்னையில் பா.ஜ.க நிர்வாகி வெட்டிக் கொலை

சென்னை தாம்பரம் அருகே பா.ஜ.க எஸ்.சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் இரவில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது

மாநிலங்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவை பிற்பகல் 2.47 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

வெறும் அறிவுரையோடு நிற்க மாட்டேன்- ஸ்டாலின் ட்வீட்டர் பதிவு

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்; இந்த மசோதாவுக்கு நாரி சக்தி வந்தன்என பெயரிடப்பட்டுள்ளது!

டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல்

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி இனியா உத்தரவிட்டுள்ளார்.

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா

மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

அனைத்து உறுப்பினர்களும் பெண் அதிகாரத்திற்கான வாயில்களைத் திறப்பதற்கான ஆரம்பம், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், முதல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காகவே இந்த தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் -மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது மக்களவையில் பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். புதிய இந்தியாவை நோக்கி, வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம். புதிய சிந்தனைகளுடன் இந்தியா முன்னேறி வருகிறது;

புதிய நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று மசோதாக்களை நிறைவேற்றுவது சிறப்பு வாய்ந்தது- புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

பேரிடர் சேதத்தை குறைக்க ரூ.716 கோடி நிதி ஒதுக்கீடு- மு.க.ஸ்டாலின்

பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் பலன்களை பெற, அதனால் ஏற்படும் சேதங்களை குறைப்பது அவசியமாகிறது;

பேரிடர் சேதத்தை குறைக்க ரூ.716 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பேரிடர் குறித்த தகவல்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்- வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை

கனமழை பெய்ய வாய்ப்பு  

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ரஜினிக்கு கோல்டன்  டிக்கெட்

Golden Ticket

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடருக்கான கோல்டன்  டிக்கெட்டை ரஜினிகாந்துக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்

ஸ்டண்ட் செய்யவில்லை 

நடந்தது எதிர்பாராத விபத்து, ஸ்டண்ட் செய்யவில்லை. பைக்கில் இருந்து ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்டேன் - டிடிஎஃப் வாசன்

  மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்று தாக்கல். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், மக்களவையில் இன்று தாக்கலாகிறது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

 கனடா தூதரக அதிகாரி வெளியேற உத்தரவு

இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு. ஐந்து நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு. காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் நடவடிக்கை.

 பழைய நாடாளுமன்றத்தின் நினைவாக எம்பிக்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எம்பிக்கள் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறுகிறது

வடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை 

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு

விஜய் ஆண்டனி வீட்டில் விசாரணை

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை. சென்னை, டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில் போலீசார் விசாரணை. மீரா தற்கொலை செய்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

தண்ணீர் இருந்தும் கொடுக்க கர்நாடக மறுப்பு- துரைமுருகன் 

தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை. தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என மத்திய அமைச்சரை சந்தித்து கேட்டுள்ளோம் - அமைச்சர் துரைமுருகன் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட அறிவுறுத்துவதாக மத்திய அமைச்சர் கூறினார் - அமைச்சர் துரைமுருகன்

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு 

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. 3 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சத்தில் கரை திரும்பினர்.

உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

நாமக்கலில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் ஆய்வு செய்ய உத்தரவு

உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க உத்தரவு

உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவு

மத்திய அமைச்சருடன் எம்.பி.க்கள் குழு சந்திப்பு

டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை அறிவுறுத்த வலியுறுத்தல். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை முறையாக திறந்துவிட கர்நாடகா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது. பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில், காஞ்சிபுரம் போலீசாரால் கைது

ஏற்கனவே 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

எல்.1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம்

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்.1-ஐ நோக்கி பயணத்தை தொடங்கியது ஆதித்யா விண்கலம். புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி எல்.1-ஐ நோக்கி ஆதித்யா விண்கலம் தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தகவல். ஆதித்யா எல்.1 விண்கலம் 110 நாட்களில் எல்.1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும்- இஸ்ரோ

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் 16-வயது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை. மன அழுத்தம் காரணமாக தற்கொலை என கூறப்படுகிறது. சென்னை, டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Aiadmk Vijay Antony Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment