பெட்ரோல், டீசல் விலை
485-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News updates
அதிமுக பாஜக கூட்டணி முறிவு? அண்ணாமலை ஆலோனை
பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை இன்று அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அறிவித்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
சேலம், மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள், விநாயகர் சிலையை கரைப்பதற்காக இறங்கிய போது இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய இணையதளம் தொடக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த http://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் மூலம் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஒடிபி (OTP) வைத்து விவரங்களை பெறலாம்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா எப்போதும் முரண்டு பிடிக்கும் - அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்: “காவிரி விவகாரத்தில் கர்நாடகா இன்று, நேற்றல்ல... எப்போதும் முரண்டு பிடிக்கும்; தண்ணீர் தர எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. மத்திய, கர்நாடக அரசுகளை நாங்கள் நம்பவில்லை; உச்ச நீதிமன்றத்தை மட்டும்தான் நம்புகிறோம். இதுவரை அனைத்தையுமே நீதிமன்றத்தின் மூலமே பெற்றிருக்கிறோம்” என்று கூறினார்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை: மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
நெல்லையில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளைத் தயாரிக்க விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் - காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சந்திப்பு
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர், ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா விற்பனைக்கு தடை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததையடுத்து, மாவட்டம் முழுவது ஷவர்மா தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு
காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
சுவர் இடிந்து விழுந்து பெண் மரணம் - உணவகத்திற்கு சீல்
வேலூரில் உணவகத்தின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து வருவாய் துறை நடவடிக்கை எடுத்துள்ளது
தேசிய தலைமை அனுமதி இல்லாமல் அண்ணாமலை பேசி இருக்க வாய்ப்பு இல்லை - ஜெயக்குமார்
தேசிய தலைமை அனுமதி இல்லாமல் அண்ணாமலை பேசி இருக்க வாய்ப்பு இல்லை. எந்த பூச்சாண்டிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். சிங்க கூட்டத்தை கண்டு சிறு நரி ஊளையிடுகிறது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
ஜெயக்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்றவே முடியாது. தேர்தலில் பாஜக தனியாக நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறுவர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.பாஜக மேலிட தலைவர்கள் கூறிதான் அண்ணாமலை இப்படி பேசி வருகிறார் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மக்களவையில் பிரதமர் மோடி உரை
வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய சிறப்புக் கூட்டத்தொடர் இது. குறுகிய காலம் நடந்தாலும் இது முக்கியமான கூட்டத்தொடர்.
இந்தியர்களின் வியர்வையையும், பணத்தையும் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்
75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தில் 600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. நேரு, மன்மோகன் சிங், வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்-மக்களவையில் பிரதமர் மோடி உரை
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி- சீமான் பேட்டி
என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர். 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன்; எனக்கு ஆதரவாக என் மனைவி கயல்விழி உள்ளார்- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு;
சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு உரை
மாநிலங்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா குரல் கொடுத்தார்; வாஜ்பாயின் நெருங்கிய நண்பராக அண்ணா திகழ்ந்தார்;
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வி.பி.சிங் சிறப்பாக பங்காற்றி உள்ளார்; நேரு, நரசிம்மராவ், வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களும் நாட்டிற்காக சிறப்பாக பணியாற்றினர்- மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு உரை
தொழில்நுட்பம், அறிவியலோடு இணைந்த புதிய பாதை தொடங்கி இருக்கிறது
தொழில்நுட்பம், அறிவியலோடு இணைந்த புதிய பாதை தொடங்கி இருக்கிறது . சந்திரயான் 3 வெற்றி நாட்டின் மீது புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சந்திரயான் 3 திட்டத்தை வெற்றி பெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் 40 கோடி இந்தியர்களின் உறுதியின் வலிமையை பறைசாற்றுகிறது சந்திரயான் 3 வெற்றி - பிரதமர் மோடி
இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள் குறித்து இன்று சிறப்பு விவாதம். நாளை முதல் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறுகிறது
2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக நாம் உருவாக்கிட வேண்டும்
ஜி 20 உச்சி மாநாட்டில் தெற்கு உலகின் குரல்களை ஓங்கி ஒலித்தோம் . அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இந்தியா முன்னேற்ற பாதையில் நடைபோட்டு வருகிறது எந்தவித இடையூறுமின்றி இந்தியா தனது குறிக்கோளை அடையும் என நம்பிக்கை எழுந்துள்ளது 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக நாம் உருவாக்கிட வேண்டும் - பிரதமர் மோடி
நிலவில் நமது மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்து வருகிறது
"சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவில் நமது மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்து வருகிறது" "நிலவில் சிவசக்தி என்ற அந்த இடம் நமது உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது" நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு
வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்ற கூட்டம் - பிரதமர் மோடி
அனைவரையும் ஒன்றிணைத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அடியெடுத்து வைப்போம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நமது பணியை தொடரும் போது உற்சாகம் ஏற்படுகிறது அனைத்து எம்பிக்களும் இந்த கூட்டத்தின் விவாதத்தில் பங்கேற்று சிறப்பாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி
கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது: மோடி
நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. சில நாட்கள் மட்டுமே நடைபெற்றாலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத் தொடரை உற்சாகமாக நடத்தி அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும்-பிரதமர் மோடி
150 கி எடையுள்ள கொழுக்கட்டை வைத்து பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டைகளை வைத்து பூஜை.
தலா 75 கிலோ எடையுள்ள 2 கொழுக்கட்டைகளை வைத்து விநாயகருக்கு நெய்வேத்தியம். 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 6 கிலோ நெய், ஒரு கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 100 தேங்காய் கொண்டு கொழுக்கட்டை. விநாயகருக்கு பூஜை செய்த பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி- ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து விநாயகர் பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் - ஆளுநர்
துரைமுருகன் பேட்டி
தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். மத்திய அரசு அழுத்தம் தர வலியுறுத்தி டெல்லி செல்கிறோம். டெல்லி புறப்படுவதற்கு முன்பு அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சீமான் இன்று ஆஜராகிறார்
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது
நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு
தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் குழு இன்று மாலை சந்திக்க உள்ளனர். தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த திட்டம்
விநாயகருக்கு சாம்பிராணி காண்பித்த இஸ்லாமியர்
ராமநாதபுரத்தில் இஸ்லாமியர் ஒருவர் விநாயகர் சிலைக்கு சாம்பிராணி காண்பித்து வழிபட்ட நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு
காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு. வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார். வழக்குப்பதிவு விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை
இன்று விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜை, ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு.
இன்று முதல் மேல்முறையீடு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்ய விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் 30 நாட்களுக்குள் கோட்டாசியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பபடும். காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாசியர் அலுவலகங்களை நேரில் அணுகி கேட்கலாம்- தமிழ்நாடு அரசு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்த அனுபவத்தை பகிர்வதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
வடகிழக்கு பருவமழை - முதல்வர் நாளை ஆலோசனை
சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை
ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் அரிக்கொம்பன்
நெல்லை, மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானை அரிக்கொம்பன் கழுத்தில் உள்ள ரேடர் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர்
ஒருநாள் போட்டிகளில் மீண்டும் அஸ்வின்
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 22-ந் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் என தகவல்
1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது
1998ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் நிறைவேறவில்லை
2008ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது
2009ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது
2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற வாக்கில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளவில்லை
13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.