Tamil Nadu News Updates: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே சகுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என ஜம்மு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மனுத் தாக்கல் நிறைவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை ஐஐடி சாதி பிரச்சினை - முதல்வருக்கு கடிதம்
சென்னை ஐஐடியில் நிலவும் சாதி குறைபாடு குறித்து விசாரிப்பதற்காக குழு அமைக்க கோரி பிரதமர் , மத்திய கல்வி அமைச்சருக்கு உதவி பேராசிரியர் விபின் கடிதம் எழுதியுள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடக்கம்
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கண்கவர் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் அப்டேட்
93நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 லிட்டர் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:43 (IST) 05 Feb 2022நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிப்பு
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- 20:42 (IST) 05 Feb 2022வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : ஷாருக்கான், இஷான் கிஷன் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஷாருக்கான், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தவான், ருதுராஜ், ஸ்ரேயஸ் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 19:46 (IST) 05 Feb 2022அதிமுக அனுப்பிய கடிதம் விலாங்கு மீன் போல் உள்ளது - அமைச்சர் துரைமுருகன்
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக அனுப்பிய கடிதம் விலாங்கு மீன் போல் உள்ளது ; தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை – என்று கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், ஊரக உள்ளாட்சி தேர்தலைப் போலவே நகர்ப்புற தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
- 19:45 (IST) 05 Feb 2022நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டம்
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
- 19:42 (IST) 05 Feb 2022ஜூனியர் உலககோப்பை இறுதிப்போட்டி :இந்திய அணி அபார பந்துவீச்சு
ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. இதில் சற்றுமுன்வரை இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 3 விக்கெட்டும், ரவிக்குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
- 19:34 (IST) 05 Feb 2022ஹைதராபாத்தில் 216 அடி உயர பிரமாண்ட ராமானுஜர் சிலை
ஹைதராபாத்தில் 216 அடி உயர பிரமாண்ட ராமானுஜர் சிலை 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் சிலை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- 18:41 (IST) 05 Feb 2022கேரளாவில் ஒரே நாளில் 33,538 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் ஒரே நாளில் 33,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 22 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவில் இருந்து 58,33,762 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,52,399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- 18:40 (IST) 05 Feb 2022ஜூனியர் உலககோப்பை : இந்திய அணி பந்துவீச்சு
ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது.
- 18:39 (IST) 05 Feb 2022மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது
தஞ்சை - பருத்தியப்பர் கோயில் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி கணித ஆசிரியர் சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 17:42 (IST) 05 Feb 2022பாலியல் தொல்லை வழக்கில் தர்மபுரி ஆசிரியருக்கு வழக்கப்பட்ட தண்டனை ரத்து
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தருமபுரி ஆசிரியர் செந்தில் குமாருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளித்ததால் தண்டனை ரத்து செய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16:46 (IST) 05 Feb 2022சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை – ஓபிஎஸ்
சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் தமிழக மக்கள் மீதான நலன் ஏதுமில்லை, அரசியல் ஆதாயம்தான் உள்ளது என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் தேர்வில் விலக்கு பெறுவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்
- 16:24 (IST) 05 Feb 2022இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும் - பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும். இதன்மூலம் இளைஞர்கள் சிறப்பான பணிகளைச் செய்ய முடியும் என இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
- 15:58 (IST) 05 Feb 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; மொத்தம் 74 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனு தாக்கல் - மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 74 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் மாநகராட்சி - 14701, நகராட்சி - 23354, பேரூராட்சி - 36361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 15:41 (IST) 05 Feb 2022இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலங்கானாவில் வேளாண் ஆராய்ச்சி கழகம் நடத்தும் சர்வதேச நிறுவனமான இக்ரிசாட்டின் 50-வது ஆண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்
- 15:18 (IST) 05 Feb 2022கொரோனா காலத்தில் விவசாயிகளை சாலைகளில் தள்ளியவர் பிரதமர் மோடி - ராகுல் காந்தி
கொரோனா காலத்தில் விவசாயிகளை சாலைகளில் புறந்தள்ளியவர் பிரதமர் மோடி. ஆனால் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களை புறக்கணிக்காமல் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்
- 15:09 (IST) 05 Feb 2022சாட்டை துரைமுருகன் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய சாட்டை துரைமுருகன் மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 14:52 (IST) 05 Feb 2022குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2022.. முதல் தங்கம் வென்ற நார்வே வீராங்கனை!
பெய்ஜிங்’ குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2022-இல், பனிச்சறுக்கு விளையாட்டில் நார்வே வீராங்கனை தெரேஸ் ஜோஹாக் முதல் தங்கத்தை வென்றார்.
- 14:44 (IST) 05 Feb 20222வது கணவரை மிரட்டிய சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு!
அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா’ 2வது கணவர் ராமசாமியை மிரட்டியதாக தொடர்பாக’ அவர் மீது சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 14:43 (IST) 05 Feb 2022U19 world cup: இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து!
ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு’ விராத் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 14:36 (IST) 05 Feb 2022தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில்’ மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கன்னியாஸ்திரி ரொஸாரி’ உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
- 14:17 (IST) 05 Feb 2022நீட் விலக்கு.. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர்,,
நீட் விலக்கு தொடர்பாக’ சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பற்றி’ சபாநாயகர் அப்பாவு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறார்.
- 13:56 (IST) 05 Feb 2022நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்..முதல்வர் ஸ்டாலின்!
போராட்டங்களின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான முயற்சிகளில் நீட் தேர்வும் ஒன்று. எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- 13:47 (IST) 05 Feb 2022அதிமுக-வுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.. துரைமுருகன்!
நீட் தேர்வை எழுத வைத்து, நீட் மசோதாவை ரத்து செய்து அதிமுகவும், பாஜகவும் நாடகமாடுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு தமிழக மக்களும், மாணவர்களும் தக்க பதிலடி கொடுப்பர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.
- 13:45 (IST) 05 Feb 2022நீட் தேர்வு.. சட்டப்படியான நடவடிக்கைகளை அதிமுக ஆதரிக்கும்.. ஓபிஎஸ்!
நீட் தொடர்பான சட்டப்படியான நடவடிக்கைகளை அதிமுக ஆதரிக்கும் என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
- 13:44 (IST) 05 Feb 2022நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்..முதல்வர் ஸ்டாலின்!
போராட்டங்களின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான முயற்சிகளில் நீட் தேர்வும் ஒன்று. எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு நீட்-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்-முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- 13:16 (IST) 05 Feb 2022மாநில முதல்வர்களை தமிழக முதல்வர் தலைமையில் ஒன்றிணைக்க வேண்டும்!
பாஜக ஆட்சி செய்யாத’ மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வர் தலைமையில் ஒன்றிணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., தளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- 13:15 (IST) 05 Feb 2022ராமானுஜரின் பொற்சிலை திறப்பு: முதல்வர் வாழ்த்து!
தெலங்கானாவில் இன்று நடைபெறும் கணித மேதை ராமானுஜரின் பொற்சிலை திறப்பு விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 12:24 (IST) 05 Feb 2022ஆளுநர் மாளிகையை தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர்
- 12:07 (IST) 05 Feb 2022காஷ்மீரில் நில நடுக்கம்
காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு. ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து காஷ்மீரின் குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியுள்ளது.
- 12:05 (IST) 05 Feb 2022பெரியகுளம் - 3 சுயேட்சைகள் தேர்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு. அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் 1வது வார்டில் முத்துச்செல்வி, 10வது வார்டில் ஜெயராமன், 11வது வார்டில் விமலா போன்றோர் போட்டியின்றி தேர்வு
- 11:44 (IST) 05 Feb 2022நீட் விலக்கு - சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்
நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு. சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கான தேதியை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
- 11:17 (IST) 05 Feb 2022நீட் விவகாரத்தில் அடுத்தது என்ன?- முதல்வர் ஆலோசனை
நீட் மசோதாவை ஆளுநர் மீண்டும் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிய நிலையில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- 11:01 (IST) 05 Feb 2022சென்னை புத்தகக் காட்சி- நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு
45 ஆவது புத்தக கண்காட்சி சென்னையில் வரும் 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சிக்கான டிக்கெட்டை bapasi.com இணையதளத்தில் நாளை முதல் முன்புதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
- 11:01 (IST) 05 Feb 2022சென்னை புத்தகக் காட்சி- நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு
45 ஆவது புத்தக கண்காட்சி சென்னையில் வரும் 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சிக்கான டிக்கெட்டை bapasi.com இணையதளத்தில் நாளை முதல் முன்புதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
- 10:30 (IST) 05 Feb 2022இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 உயர்ந்து, ரூ36,336 ஆக விற்பனையாகிறது. கிராமுக்க ரூ5உயர்ந்து ரூ 4,542க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:21 (IST) 05 Feb 2022வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு - 100 சவரன் நகை பறிமுதல்
தஞ்சை - புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கரின் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் 100 சவரன் நகை, கணக்கில் வராத ரூ5 லட்சம் பணம், வீடு மற்றும் பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
- 09:47 (IST) 05 Feb 2022கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் மேலும் 1,27,952 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர்.
- 08:54 (IST) 05 Feb 2022நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக
நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன்னதாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 08:54 (IST) 05 Feb 2022நீட் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக
நீட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன்னதாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 08:06 (IST) 05 Feb 2022நீட் விலக்கு - இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற அடுத்த செய்ய வேண்டியது குறித்து விவாதிக்க தலைமை செயலகத்தில் இன்று சட்டப்பேரவை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.