Advertisment

Tamil News Highlights: இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் பரப்புரைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UPDATES

updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Updates

அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சீமானுக்கு ஜாமின்

அருந்ததிய சமூக மக்களை இழிவு படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமானுக்கு, இரு நபர் உத்தரவாதத்துடன், ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரான நிலையில், அக்டோபர் 10ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையிலிருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி: விசாரிக்க உத்தரவு 

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

CAG அறிக்கையில் கூறிய ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு முதலில் பதில் சொல்ல வேண்டும்- மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இ.பி.எஸ் வழக்கு தமிழக அரசு மேல்முறையீடு 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் . சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு துறை மேல்முறையீடு . நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு *ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக வழக்கு 

இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்

 ராமநாதபுரம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.  இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி, நகராட்சி இடத்தில் ரூ.3 கோடியில் மணிமண்டபம் - முதல்வர்

ஆந்திர முழுவதும் 144 தடை உத்தரவு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததன் எதிரொலி ; மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு *முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது காவல்துறை.

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ விரைவில் அறிக்கை

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

மகளிர் உரிமைத் திட்டம்: முதல்வர் இன்று ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை. காஞ்சிபுரத்தில் வரும் 15ம் தேதி மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர், மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பம்

 டாஸ்மாக் மூடல்

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 சுற்றுலா வேன் மீது லாரி மோதி கோர விபத்து

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே நின்றிருந்த சுற்றுலா வேன் மீது லாரி மோதி கோர விபத்து. விபத்தில், ஆம்பூர் ஓனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு. மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

 சென்னையில் ஒரே இரவில் 2 பேர் படுகொலை

சென்னை எழும்பூர் மற்றும் மந்தைவெளி பகுதிகளில் ஒரே இரவில் 2 கொலை. எழும்பூரில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா (22) மர்மநபர்களால் ஓட ஓட வெட்டிப் படுகொலை. சென்னை மந்தைவெளி பகுதியிலும் ஒருவர் வெட்டிக் கொலை. கொலை செய்த மர்மநபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வரும் போலீசார்.

ஈரோடு நீதிமன்றத்தில்  சீமான் ஆஜர்

அருந்ததியர் குறித்து சர்ச்சை கருத்து - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர். ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததாக வழக்குப்பதிவு. ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மாலதி முன் சீமான் ஆஜர்

ரகுமான் இசை நிகழ்ச்சி: விசாரணை நடத்த உத்தரவு

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு

ரகுமான் இசை நிகழ்ச்சி: நோட்டீஸ் அனுப்பப்படும்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம். போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு டிஜிபி உத்தரவு. டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும் 

விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிபி

ரஜினி உடன் கைகோர்க்கும் லோகேஷ் 

நடிகர் ரஜினியின் 'தலைவர் 171' படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு- இ.டி.க்கு உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத் துறையின் கோரிக்கை ஏற்பு

செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை

ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள். டிக்கெட் இருந்தும் கலந்து கொள்ள இயலாதவர்கள் டிக்கெட் நகலை பகிர வேண்டுகோள். arr4chennai@btos.in என்ற இணையதளத்தில் பகிருமாறு வேண்டுகோள்.

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினி சந்திப்பு

மலேசியாவில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு மேற்கொண்டார். "ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன்" என மலேசியா பிரதமர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

உலகின் பணக்கார பிச்சைக்காரர்

உலகின் பணக்கார பிச்சைக்காரராக மும்பையில் 7 கோடி ரூபாய் சொத்துடன்  பாரத் ஜெயின் வாழ்ந்து வருகிறார். 1.4 கோடியில் பிளாட் வீடு, தானேவில் உள்ள கடையில் இருந்து வரும் 30,000 வாடகையும் அவரிடம் உள்ளது. 

உதயநிதிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தார்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் முதல் அமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்ம் எனவும் மனுவில் அவர் கோரியுள்ளார்.

பெண்கள் உடன்கட்டை ஏறுதல் சனாதன தர்மத்தில் இல்லை: அண்ணாமலை

பெண்கள் உடன்கட்டை ஏறிய நிகழ்வு சனாதன தர்மத்தில் வரவில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறினார்.

டெங்கு அச்சுறுத்தல்: நாளை ஆலோசனை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு குறித்து நாளை (செப்.12) சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சந்திரபாபு ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் விளக்கம்

ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம். ஒவ்வொரு பிரிவாக பிரித்து வைத்திருந்த நிலையில் ஒரே இடத்தில் அத்தனை பேரும் குவிந்தனர் 36 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் நாங்கள் விற்றோம். 5 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக தரப்பட்டது என ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் விளக்கம் அளித்துள்ளார்

இ.பி.எஸ் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை - உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா? என தெரியவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

உதகையில் மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு 2 புலிகள் இறந்த விவகாரம்; ஒருவர் கைது

உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு அதன் மாமிசத்தை புலி உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். சேகரின் மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி முற்றுகை பேரணி; அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் முற்றுகை பேரணி நடத்திய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment