/indian-express-tamil/media/media_files/1i6ImKyZClDORStS2mJu.jpg)
Petrol and Diesel Price
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
137 போக்குவரத்து பிரிவு காவலர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம்
சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த 137 தலைமை காவலர்கள் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருந்த போக்குவரத்து பிரிவு தலைமை காவலர்களை இடமாற்றம் செய்து சென்னை தலைமையக கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
பெருமாள் முருகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜே.சி.பி இலக்கிய விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சிப்காட் போராட்டம்; விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமின்
திருவண்ணாமலை, செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில், 19 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம் - அமைச்சர் ரகுபதி உறுதி
“ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் முன்வைத்த காலை பின் வாங்க மாட்டோம். ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், தஞ்சை, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்கு
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் - இதுவரை ரூ.1,760 கோடி பறிமுதல்
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் ரூ. 76.9 கோடியும், மிசோரத்தில், ரூ. 49.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டை விட 7 மடங்கு அதிகமாக பணம், பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் தரப்பு தகவல்
நன்னடத்தை காரணங்களால் சிறைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 580 பரிந்துரைகள் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. 362 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
165 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 53 பரிந்துரைகள் கிடப்பில் உள்ளன - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் தரப்பு தகவல்
சென்னையில் கனமழை
சென்னையில் கிண்டி, அசோக் பில்லர், ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குட்கா முறைகேடு வழக்கு- குற்ற நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு
TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்
உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் விவாதம்
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு
10 மசோதாக்களையும் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது. அதன் மீது அவர் முடிவெடுப்பார்- மத்திய அரசு
உச்ச நீதிமன்றம் கடந்த 10 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த பிறகே ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்? மசோதாக்களை திருப்பி அனுப்பாமல் ஒப்புதல் அளிக்க முடியாது என ஆளுநர் கூற முடியுமா
பண மசோதாக்களாக இல்லாத பட்சத்தில் அவற்றை உடனடியாக ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும் . அமைச்சரவையின் ஆலோசனையின் படிதான் ஆளுநர் நடக்க வேண்டும்- தமிழ்நாடு அரசு
டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்
டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்.. நீதிமன்ற உதவியுடன் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு
MRI அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்கு (நவ.28) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை.
விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை; மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் – தேமுதிக
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறுகிறது.
இன்று 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு குழு: நீதிமன்றம் கேள்வி
உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு. தமிழக அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, ஒரு தணிக்கை அமைப்பு தானே - சென்னை உயர்நீதிமன்றம்
பொய் செய்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே - நீதிபதிகள்
தமிழ்நாடு அரசு மனு டிச.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை டிச.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
2 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளது? - ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி
மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம். தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு
சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்க. மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்
முதன்மை செயற்பொறியாளர் இ.டி முன் ஆஜர்
தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர். மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது
சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் ஆஜர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
கேரள ஆளுநர் செயலாளருக்கு நோட்டீஸ்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்த ரிட் மனு. கேரள ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்
ஆளுநருக்கு எதிரான வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு. தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு அமைக்கும் வேந்தரான ஆளுநர் அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு ரிட் மனு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசு
அரசை நிர்வகிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பி வைப்பு- தமிழ்நாடு அரசு
முன்னாள் அதிமுக அமைச்சர் மனைவிக்கு ஓர் ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கு. மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை உறுதி
சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.கடந்த 2000ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி
தண்டனையை அனுபவிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் பரிசோதனை. செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் உள்ள ரத்தக் கட்டியை கரைக்க மருந்துகள் வழங்கப்படுவதாக தகவல். கழுத்து பின்பகுதி சவ்வில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும் சிகிச்சை.
அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் 10ஆம் வகுப்பு மாணவன் தீபக்கின் உடல் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கடலாடி போலீசார் விசாரணை
லியோ: நவம்பர் 24ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாக உள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் நவம்பர் 24ம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் விஜயகாந்துக்கு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமையன்று தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்துக்கு 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல்
டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும்: மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்
டிசம்பர் முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள். தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்; அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிப்பு
9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் -வானிலை ஆய்வு மையம் தகவல்
நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம். உலக கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.