Tamil Nadu News Updates: அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத்
கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது பிளே ஆஃப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத் அணி. இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது.
அமைச்சர் வீட்டுக்கு தீ - ஆந்திராவில் பதற்றம்
ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம். அப்பகுதியில் 144 தடை உத்தரவும், வன்முறை குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவு
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று தொடர்ந்து 3வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
ஏற்காட்டில் இன்று முதல் 45வது கோடை விழா
சேலம், ஏற்காட்டில் இன்று முதல் 45வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி. மாலை 4 மணிக்கு தொடங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்பு
மத்திய அரசை கண்டித்து போராட்டம்
தமிழகம் முழுவதும் இன்று முதல் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கட்சிகள் 3 நாள் ஆர்ப்பாட்டம். மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கை மற்றும் அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:04 (IST) 25 May 2022அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக சி.வி.சண்முகம், தர்மர் அறிவிப்பு
அதிமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- 22:24 (IST) 25 May 2022ஐபிஎல் பிளே ஆப்; லக்னோ அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி
ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு 208 ரன்களை பெங்களூரு அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது
- 22:16 (IST) 25 May 2022காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல்
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது, 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
- 22:03 (IST) 25 May 2022தமிழில் 'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன - கமல்ஹாசன்
4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழில் 'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. வெவ்வேறாக புரிந்து கொண்டால் அது என் தவறில்லை. விக்ரம்' படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும். அதற்கும் இவர்தான் இயக்குநர் என நான் முடிவு செய்துவிட்டேன் என 'விக்ரம்' திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்
- 21:24 (IST) 25 May 2022கமல்ஹாசனை பார்த்துதான் சினிமா கற்றுக் கொண்டேன் - லோகேஷ் கனகராஜ்
சென்னை, தேனாம்பேட்டையில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மட்டும் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "கமல்ஹாசனை பார்த்துதான் சினிமாவை கற்றுக் கொண்டேன்; * என்னுடைய முதல் நன்றியை கமல்ஹாசனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்
- 20:44 (IST) 25 May 2022சோனியா காந்தி உடன் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சந்திப்பு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி உடன் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்
- 20:29 (IST) 25 May 2022ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
- 19:40 (IST) 25 May 2022பிரதமர் மோடி வருகை; சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் செல்வதை நாளை தவிர்க்க வேண்டும் என்றும், மாற்று வழியில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
- 19:07 (IST) 25 May 202210ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் குளறுபடியான கேள்விகள் எதுவும் இல்லை - தேர்வுத்துறை
10ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் குளறுபடியான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என ஆய்வுக்கு பிறகு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
- 18:52 (IST) 25 May 2022பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் திட்டமிட்டபடி தேதி முற்றுகை போராட்டம் - அண்ணாமலை
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை என்றால் திட்டமிட்டபடி வரும் 31ஆம் தேதி முற்றுகை போராட்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 18:46 (IST) 25 May 2022நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம்; மு.க.ஸ்டாலின் விளக்கம்
நாடக விளம்பரத்திற்காக சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினோம். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சுவரில் போஸ்டர் ஒட்டியதால் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம், இந்த கல்லூரியில் ஒட்டிய போஸ்டர் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 18:44 (IST) 25 May 2022காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் டெல்லி என்ஐஏ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது
- 18:30 (IST) 25 May 2022ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாதது - மு.க.ஸ்டாலின்
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, வாழ்க்கையில் மறக்க முடியாத கல்லூரியாக இருந்துள்ளது. நான் பள்ளிக்கு போகும்போது, ஸ்டெல்லா மேரிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் ஏறுவேன். 29c பேருந்தில் தான் அப்போது ஏறுவேன், சில நாட்களுக்கு முன் கூட அதே பேருந்தில் ஏறி ஆய்வு செய்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 18:15 (IST) 25 May 2022நீர்நிலை ஆக்கிரமிப்பின் மீதான அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்
நீர்நிலை ஆக்கிரமிப்பின் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
- 17:47 (IST) 25 May 2022சென்னையில் நாளை வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி, சென்னையில் நாளை வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
- 17:12 (IST) 25 May 2022அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேருக்கு கொரோனா
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 16:55 (IST) 25 May 2022சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? - இ.பி.எஸ் கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: “தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் நீங்கி விட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- 16:33 (IST) 25 May 2022தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16:01 (IST) 25 May 2022மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் - இறால் பண்ணைக்கு சீல்
ராமநாதபுரத்தில் கடல்பாசி சேகரிக்கச் சென்ற 45 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பவ நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அருகே உள்ள இறால் பண்ணை சீல் வைக்கப்பட்டது.
- 14:39 (IST) 25 May 2022வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய் காவல்துறை தீவிரம்
மீனவ பெண்ணை வன்கொடுமை செய்து கொன்றவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படையினர் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 14:28 (IST) 25 May 2022பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது வருங்கால திட்டம் - கபில் சிபில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கபில் சிபில் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், ராஜினாமாவுக்’கு பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர்,, “மக்கள் விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி மக்களை உள்ளடக்கிய கலாச்சாரத்தை பிளவுபடுத்தும் தற்போதைய பாஜக ஆட்சியை எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே எனது எதிர்காலத் திட்டம் என்று கூறியுள்ளார்.
- 14:11 (IST) 25 May 2022சென்னையில் முதல்முறையாக உலக மகளிர் டென்னிஸ் தொடர்
சென்னையில் செப். 26 முதல் அக். 2ம் தேதி வரை முதல்முறையாக உலக மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இது தொடர்பாக முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- 14:06 (IST) 25 May 2022தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது வழக்குப்பதிவு
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 13:23 (IST) 25 May 2022கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு உத்தரவு
கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சென்னை, திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை விரைந்து மீட்க உத்தரவிட்டுள்ளது
- 13:02 (IST) 25 May 2022அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- 13:01 (IST) 25 May 2022விலகினார் கபில் சிபல்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார்.
- 13:01 (IST) 25 May 202214 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 12:25 (IST) 25 May 2022வெங்கையா நாயுடு தமிழகம் வருகை!
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, ஐந்து நாள் பயணமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
- 12:24 (IST) 25 May 2022காவலர் சஸ்பெண்ட்!
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர், போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து, தனியே வெளியே சென்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாலச்சந்தரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- 12:21 (IST) 25 May 2022குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
புதுக்கோட்டை தொழில் அதிபரை கொலை செய்து 175 சவரன் கொள்ளையடித்த வழக்கில், ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஜோஸ் மில்டன், சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிய நிலையில், ஜோஸ் மில்டனை தூதரகம் மூலமாக இந்தியா கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- 12:20 (IST) 25 May 2022குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
புதுக்கோட்டை தொழில் அதிபரை கொலை செய்து 175 சவரன் கொள்ளையடித்த வழக்கில், ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஜோஸ் மில்டன், சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிய நிலையில், ஜோஸ் மில்டனை தூதரகம் மூலமாக இந்தியா கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- 11:52 (IST) 25 May 2022முதல் இளைஞர் திறன் திருவிழா!
இளைஞர்களின் வளர்ச்சியை பொறுத்தே நாட்டின் வளர்ச்சி இருக்கும். இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் கல்வியை கொடுக்க வேண்டும். இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் - சென்னையில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
- 11:51 (IST) 25 May 2022வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்க உள்ளன.
அதேபோல் 1 -10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி, 12ஆம் வகுப்புக்கு ஜூன் 20, 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறக்கப்படும்.
- 11:33 (IST) 25 May 2022விசைபடகுகளில் ஆய்வு!
நாகையில் நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையிலான குழு, 2,000 விசைபடகுகளில் ஆய்வு செய்கின்றனர். விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்ட நீளத்தில் உள்ளதா? உரிமம் உள்ளதா? தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
- 11:22 (IST) 25 May 2022தங்கம் விலை உயர்வு!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ. 38,696-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:57 (IST) 25 May 2022ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் குரங்கம்மை தொற்று
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவருக்கு குரங்கும்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 29 வயது பெண் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்
- 10:18 (IST) 25 May 2022அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை - சசிகலா
எனது தலைமயில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது.அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை என சசிகலா குற்றச்சாட்டு!
- 10:07 (IST) 25 May 20226 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் கைது
சென்னை அடுத்த மாங்காட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன் போக்சோவில் கைது. கைது செய்யப்பட்ட சிறுவனை மகளிர் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்
- 09:49 (IST) 25 May 2022இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தா
செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
- 09:25 (IST) 25 May 2022இந்தியாவில் மேலும் 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,977 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 14 ஆயிரத்து 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 09:11 (IST) 25 May 2022இந்துக் கடவுள்களை குறித்து இழிவுப்பேச்சு - ஓபிஎஸ் கண்டனம்
இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
- 08:53 (IST) 25 May 2022ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தர்மபுரி ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி . நீர் வரத்து குறைந்துள்ளதால் படகுகளை இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
- 08:52 (IST) 25 May 2022மிக நெருக்கமான அமெரிக்க-இந்தியா கூட்டாண்மையை உருவாக்குவோம் - பைடன்
நமது இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து செய்யக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. மிக நெருக்கமான அமெரிக்க-இந்தியா கூட்டாண்மையை உருவாக்கிட உறுதிபூண்டுள்ளேன் என அமெரிக்க அதிபர் பைடன் மோடியிடம் இருதரப்பு சந்திப்பின் தொடக்கத்தில் கூறினார்.
- 08:43 (IST) 25 May 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணையில் நேற்று 10,508 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,539 கனஅடியாக சரிவு . மேட்டூர் அணை நீர்மட்டம் 117.92 அடி, நீர் இருப்பு 90.19 டிஎம்சி, நீர் வெளியேற்றம் 5,000 கன அடி ஆகும்.
- 08:22 (IST) 25 May 2022பாலியல் வன்கொடுமை - மீனவப்பெண் எரித்து கொலை
ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவப்பெண் எரித்து கொலை. வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கொடூரம். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்
- 07:58 (IST) 25 May 2022வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழந்தார்
வீரப்பன் அண்ணன் மாதையன் உடல் நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாதையன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.