Advertisment

News Highlights: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை

இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக இருப்பதால், இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மிக மோசமான நிலையில் சென்னை காற்று மாசு

தீபாவளியன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில், சென்னையின் காற்று மாசு மிக மோசமான அளவை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 2வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 22.61 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



  • 22:46 (IST) 06 Nov 2021
    ஜெய்பீம் பட காட்சி - நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

    பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதியைவிட நான் கண்ணத்தில் அறைந்தது மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால், அவர்களின் உளநோக்கம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது என்று ஜெய்பீம் பட காட்சி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.



  • 20:12 (IST) 06 Nov 2021
    தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிறுப்புகளை கண்கானிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

    இயற்கை பேரிடர் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிறுப்புகளை கண்கானிக்க வேண்டும் என்றும் பாலம் சிறுபாலம் மீது மழைநீர் சென்றால் போக்குவரத்தை மாற்றுப்பதையில் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



  • 20:01 (IST) 06 Nov 2021
    கேரளா முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    முல்லைப் பெரியாறு அணையில் பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பேபி அணை, மண் அணையை வலுப்படுத்த இது மிகவும் முக்கியமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.



  • 18:41 (IST) 06 Nov 2021
    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை - திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 9-ந் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 9-ந் தேதி கோவில் வளாகத்தில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 18:38 (IST) 06 Nov 2021
    நியூசிலாந்தை ஆப்கான் வீழ்த்தும் - அஜித் அகர்கர்

    நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வலுவிழந்து இருப்பதால் ஆப்கன் அணி வெல்லுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.



  • 17:29 (IST) 06 Nov 2021
    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கடத்தி வருகிறார். காணொலி காட்சி வழியாக நடைபெறும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.



  • 16:55 (IST) 06 Nov 2021
    வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நேற்றுக்காலை 10 மணிக்கு 66 அடியை எட்டியது.

    இந்நிலையில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி வைகை அணை மதகுபகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.



  • 16:41 (IST) 06 Nov 2021
    நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்வு?

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ரூ.30 கோடி வரை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.



  • 16:10 (IST) 06 Nov 2021
    பாஜக தேசிய செயற்குழு நாளை கூடுகிறது - வரக்கூடிய தேர்தல்கள் குறித்து ஆலோசனை

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் டெல்லி நடக்கவுள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா போன்றோர் கலந்து கொள்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட சறுக்கல் தொடர்பாகவும், வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:50 (IST) 06 Nov 2021
    பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு- மொத்த பலி எண்ணிக்கை 40- ஆக உயர்வு

    பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் அருந்திய 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



  • 15:36 (IST) 06 Nov 2021
    இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் வாகன்!

    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மீது இரண்டு வீரர்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தியத்தி உள்ள நிலையில் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    வாகன் பிபிசி 5 லைவ் இன் 'தி டபர்ஸ் அண்ட் வாகன் கிரிக்கெட் ஷோ'வில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 15:13 (IST) 06 Nov 2021
    இந்திய டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 25-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் வருமாறு:-

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹென்றி நிகோல்ஸ், வில் சோமர்வில்லி, டாம் பிளன்டெல் (விக்கெட் கீப்பர்), அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ், ராஸ் டெய்லர், கைல் ஜாமிசன், ரஷின் ரவிந்திரா, வில் யங், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், நீல் வாக்னர்.



  • 14:56 (IST) 06 Nov 2021
    வரும் 30-ஆம் தேதிக்கு பின் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படாது - மத்திய உணவுத்துறை

    நியாய விலைக்கடைகளில் மானியவிலை உணவு தானியத்துக்கு மேல் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் 30ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:48 (IST) 06 Nov 2021
    "தமிழகத்தில் கடல்பாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்"- இணையமைச்சர் எல்.முருகன்

    மீனவ மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கடல்பாசி திட்டம், தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியவுடன் தொடங்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



  • 14:31 (IST) 06 Nov 2021
    மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 பேர் பலி!

    மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் என கூறப்படுகிறது.



  • 13:47 (IST) 06 Nov 2021
    6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபரி, அரியலூர், திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:44 (IST) 06 Nov 2021
    மகாராஷ்டிரா மருத்துவமனையில் தீ விபத்து - 11 பேர் உயிரிழப்பு

    மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிகிச்சை பெற்றுவந்த 11 நோயாளிகள் உயிரிழந்தனர்.



  • 13:22 (IST) 06 Nov 2021
    எடப்பாடி பழனிசாமி பலவீனமாக உள்ளார் - டிடிவி தினகரன்

    எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பலவீனமாக உள்ளார். பதற்றத்தில் சசிகலா குறித்து அவதூறாக பேசுகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



  • 12:55 (IST) 06 Nov 2021
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் அதிகனமழைக்கு வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அதிகனமழை வாய்யப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:38 (IST) 06 Nov 2021
    தமிழகத்தில் 456 பேருக்கு டெங்கு - மா.சுப்பிரமணியன் தகவல்

    தமிழ்நாட்டில் இதுவரை 456 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 12:25 (IST) 06 Nov 2021
    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - முதல்வர் இன்று ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் பங்கேற்கவுள்ளனர்.



  • 12:15 (IST) 06 Nov 2021
    பட்டாசு வெடித்ததில் விதிமீறல் - 2,278 வழக்குகள் பதிவு

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநிலம் முழுவதும் 2,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,200 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



  • 11:44 (IST) 06 Nov 2021
    தமிழகத்தில் கடல்பாசி திட்டம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டம் கொண்டு வரப்படும். மீனவ பெண்களின் வேலைவாய்ப்புக்கு இத்திட்டம் உந்து சக்தியாக இருக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



  • 11:42 (IST) 06 Nov 2021
    முல்லை பெரியாறு பிரச்சினையில் அதிமுகவை குறை கூறுவதா? - ஓபிஎஸ் கண்டனம்

    முல்லை பெரியாறு பிரச்சினையில் அதிமுகவை குறை கூறுவதா?, நதிநீர் உரிமையை நிலைநாட்டிய அதிமுகவை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.



  • 10:35 (IST) 06 Nov 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 392 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:13 (IST) 06 Nov 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • 10:12 (IST) 06 Nov 2021
    ஏறுமுகத்தில் தங்கம் விலை... ரூ.288 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • 10:12 (IST) 06 Nov 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • 09:38 (IST) 06 Nov 2021
    திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

    திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை இரவு தொடங்குகிறது. 19 ஆம்தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment