Advertisment

Tamil News Highlights: பொன்முடி மீது சேறு வீச்சு விவகாரம்: பா.ஜ.க பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Attack on ponmudi

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.23 காசுக்கும், டீசல் ரூ. 92.81 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 67.74% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் - 78.05% ; புழல் - 84.42% ; பூண்டி - 56.02% ; சோழவரம் - 18.32% ; கண்ணன்கோட்டை - 65%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 05, 2024 23:34 IST

    அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய 2 பேர் மீது வழக்கு

    விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டளளது. இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர், அதிகாரிகள் சென்றபோது சம்பவம் நடந்தது. இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், பாஜக பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் வனத்துறை அமைச்சர் பொன்முடி, உடன் சென்றவர்கள் மீதும் சேற்றை அள்ளி வீசியதாக வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.



  • Dec 05, 2024 23:32 IST

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பு: 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு

    ஃபீஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை, டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை இந்த 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Dec 05, 2024 21:00 IST

    மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

    விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை "மக்களோடு மக்களாக இருந்து மீட்புப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.



  • Dec 05, 2024 20:58 IST

    தீபமலையில் இருந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த மான்

    திருவண்ணாமலையில், புயல் கனமழையால் தீபமலையில் இருந்து மான் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. சாலையில் ஓடி அங்குள்ள கடைக்குள் பதுங்கிய மானை, அப்பகுதியினர் பிடித்து கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.



  • Dec 05, 2024 20:56 IST

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொடுப்பவர் இபிஎஸ்: செல்லூர் ராஜூ

    மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்ட பேரணியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.



  • Dec 05, 2024 19:41 IST

    அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள தீர்மானங்கள் குறித்து ஆய்வு

    வரும் 15ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள தீர்மானங்களை இறுதி செய்வது குறித்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

     



  • Dec 05, 2024 19:03 IST

    7-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

    தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் வரும் 7-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 05, 2024 19:01 IST

    வள்ளலார் சர்வதேச மையம் குறித்து ஆவணங்களை தாக்கல் செய்த அறநிலையத்துறை

    வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அனுமதி கோரியது தொடர்பான ஆவணங்களை, அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கில்,"பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,



  • Dec 05, 2024 18:04 IST

    மகாராஷ்டிரா முதலமைச்சராக ஃபட்நாவிஸ் பதவியேற்றார்

    மகாராஷ்டிரா முதலமைச்சராக 3வது முறையாக தேவேந்திர ஃபட்நாவிஸ் பதவியேற்றார். துணை முதல்வர்காளக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்றனர். 



  • Dec 05, 2024 17:24 IST

    சாம்சங் தொழிலாளர் சங்க விவகாரம் - 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உத்தரவு

    "சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனுவில் 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்" என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

     



  • Dec 05, 2024 16:58 IST

    9 மாவட்டங்களில் மழை

    "9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு"

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய  9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Dec 05, 2024 16:30 IST

    விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்

    ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து  ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.



  • Dec 05, 2024 15:55 IST

    மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை நாளை வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் பாஜகவின் விமர்சனங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 



  • Dec 05, 2024 15:14 IST

    துக்ளக் அலிகான் கஞ்சா பயன்படுத்தியது உறுதி

    நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



  • Dec 05, 2024 14:47 IST

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தி.மு.க அரசு மேல்முறையீடு - இ.பி.எஸ் கண்டனம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மு.க. ஸ்டாலினின் தி.க.அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை திமுக அரசு தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம்? கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அ.தி.மு.க தொடர்ந்து போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 05, 2024 14:35 IST

    ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில் களமாடிய பெண் ஆளுமை ஜெயலலிதா - ஆதவ் அர்ஜுனா  

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை; தமிழ்நாடு வரலாற்றிலேயே 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அதில் வெற்றியும் கண்ட ஒரே ஆளுமை என்று பெயர்போன தலைவி ஜெயலலிதா” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 05, 2024 13:43 IST

    எல். முருகனுக்கு எதிரான வழக்கு ரத்து; முரசொலி அறக்கட்டளைக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு

    முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பேசிய எல். முருகனுக்கு எதிரான வழக்கில், ‘களங்கம் கற்பிக்கும் நோக்கமில்லை’ என எல். முருகன் கூறியதை அடுத்து, வழக்கை தொடரும் எண்ணம் இல்லை என அறக்கட்டளை தரப்பு கூறியதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில், முரசொலி அறக்கட்டளையின் பெருந்தன்மையைப் பாராட்டுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு தெரிவித்துள்ளது.



  • Dec 05, 2024 13:38 IST

    வெள்ள நிவாரணம்: இன்று முதல் டோக்கன் விநியோகம் 

    வெள்ள நிவாரணத் தொகை ரூ.2,000 பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேசன் கார்டு அடிப்படையில் ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படுகிறது.



  • Dec 05, 2024 13:35 IST

    ஃபீஞ்சல் புயல் பாதிப்பு: ரூ.2,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்

    திருக்கோவிலூரில் ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி ரூ.2,000 நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படுகிறது. திருக்கோவிலூரில் முதற்கட்டமாக 159 குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் பொன்முடி ரூ.2000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.



  • Dec 05, 2024 13:29 IST

    ‘என்றும் ஜெயலலிதா பெயர் நிலைத்திருக்கும்’ - அண்ணாமலை பதிவு

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும் அவர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் என்றும் அவரது பெயர் நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.



  • Dec 05, 2024 13:26 IST

    சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்

    சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை எனக் கூறி, அவருக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. அப்பாவுக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதை அடுத்து அ.தி.மு.க தரப்பு வழக்கை வாபஸ் பெற்றது.



  • Dec 05, 2024 12:55 IST

    வருண்குமாருடன் மோதத் தயார் -  சீமான் ஆவேசம்

    நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம் என திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருடன் மோதத் தயார்; மோதுவோம் வா; என் கட்சியை குறை சொல்வதற்காகத்தான் ஐ.பி.எஸ் ஆகியிருக்கிறாரா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Dec 05, 2024 12:32 IST

    புயல் நிவாரணம்: தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் ஸ்டாலின்

    ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார். ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.



  • Dec 05, 2024 11:40 IST

    அதானி ஊழல் புகார் - ராகுல் காந்தி போராட்டம்

    அதானி ஊழல் புகாரில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். 



  • Dec 05, 2024 10:50 IST

    திருப்பரங்குன்றம் - கார்த்திகை தீபத் திருவிழா

    முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.



  • Dec 05, 2024 10:21 IST

    சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு

    சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து குலாப் என்ற இளைஞர் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



  • Dec 05, 2024 10:15 IST

    30 பேருக்கு உடல்நலக் கோளாறு - ஒருவர் உயிரிழப்பு

    சென்னை பல்லாவரம் அருகே திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழ்ழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நல்க் கோளாறு என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



  • Dec 05, 2024 09:44 IST

    வெள்ள பாதிப்பு - தூய்மை பணி தீவிரம்

    விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலியனூர், பனங்கொப்பம் பகுதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • Dec 05, 2024 09:42 IST

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி

    மக்களால் மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை அமைதி, வளம் பொருந்திய தமிழ்நாட்டை கட்டமைப்பதே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் புகழஞ்சலி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Dec 05, 2024 08:33 IST

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை

     ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்ததற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் வருத்தம் தெரிவித்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.



  • Dec 05, 2024 08:25 IST

    மகராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு

    தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். 



  • Dec 05, 2024 08:18 IST

    நாசா புதிய தலைவர் நியமனம்

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் புதிய தலைவராக ஜாரேட் ஈசாக்மென் நியமனம் செய்யப்பட்டார்.



  • Dec 05, 2024 08:17 IST

    முருங்கைக்காய் விலை உயர்வு

    வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 400 ரூபாய்க்கும் ஒரு முருங்கைக்காய் ரூ. 40க்கும் விற்பனையாகிறது.



  • Dec 05, 2024 08:11 IST

    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 05, 2024 07:23 IST

    செண்பகத் தோப்பு அணை நீர்மட்டம் உயர்வு

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்ததால், மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 05, 2024 07:22 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது

    ராமெஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டன.



  • Dec 05, 2024 07:21 IST

    இன்று விண்ணில் பாயும் ராக்கெட்

    சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்வதற்கு புரோபா 3 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.



  • Dec 05, 2024 07:18 IST

    சென்னை: மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

    சென்னை பட்டினம்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 22 வயது குலாப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment