தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான் முடிவகள் கடந்த மே 2-ந் தேதி அறிவிக்க்ப்பட்டது. இதில் 159 தொகுதிகளில் பெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதில் திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு உறுப்பினராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்று ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் மூத்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து புதிய ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் பேரில் நாளை காலை 9 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் 6வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுகவில் முதல்முறையாக முதல்வர் அரியணையில் அமரவுள்ள மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார். அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா இல்லத்தில் நேரில் சென்ற மு.கஸ்டாலின் அவரிடம் ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனை சந்தித்தும் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அவர் இல்லாமல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலும் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil