Tamil News Highlights: ஹைதரபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pushpa 2 the rule

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93 காசுக்கும், டீசல் ரூ. 92.52 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 64.22% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் - 77.37% ; புழல் - 84.42% ; பூண்டி - 44.44% ; சோழவரம் - 17.02% ; கண்ணன்கோட்டை - 65%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 04, 2024 22:01 IST

    உதவ முன்வந்ததையும் நாங்கள் மதிக்கிறோம்: கேரள முதல்வருக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி

    வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவின் ஆதரவையும், உதவ முன்வந்ததையும் நாங்கள் மதிக்கிறோம் என்று கூறியுள்ளார்.



  • Dec 04, 2024 21:09 IST

    மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை: டிரோன் மூலம் பொருட்கள் வழங்கிய காவல்துறை

    விழுப்புரத்தில் ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மாவட்டக் காவல்துறை சார்பில் டிரோன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டது. வெள்ளம் காரணமாக, திருவெண்ணெய் நல்லூர் மாரங்கியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் கிராம மக்களுக்கு டிரோன் மூலம் பால் பாக்கெட்டுகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.



  • Advertisment
    Advertisements
  • Dec 04, 2024 21:07 IST

    சச்சின் டெண்டுல்கரின் அறக்கட்டளை இயக்குனராக அவரது மகள் சாரா நியமனம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் அறக்கட்டளை இயக்குனராக அவரது மகள் சாரா டெண்டுல்கள் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு, கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை எனது மகள் தொடங்குகிறார் என்று சச்சின் தனது சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 04, 2024 21:05 IST

    பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை செய்த பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

    சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆக.19ம் தேதி பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் மற்றும் மன திறனை பரிசோதனை செய்வதே தாங்கு திறன் சோதனையின் நோக்கமாகும்.



  • Dec 04, 2024 19:47 IST

    வெள்ள பாதிப்பில் மலிவான அரசியல்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

    வெள்ள பாதிப்பு நேரத்திலும் சிலர் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். முன்பு சென்னையில் எப்போது வெள்ளம் வடியும் என காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. வானிலை கணிப்பை விட அதிக மழை கொட்டித் தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையை மீட்டெடுத்ததுபோல், மற்ற மாவட்டங்களை விரைவில் மீட்டெடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Dec 04, 2024 19:44 IST

    நா.த.க ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி குற்றச்சாட்டு

    நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய, பிரிவினைவாத இயக்கம் நானும், எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

     



  • Dec 04, 2024 19:14 IST

    அத்தியாவசியப் பொருட்களை டிரோன் மூலம் அனுப்பி வைத்த போலீஸ்

    விழுப்புரம் மாவட்டத்தில் ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதி மக்களுக்கு டிரோன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மாவட்டக் காவல்துறை அனுப்பியுள்ளது. வெள்ளம் காரணமாக, திருவெண்ணெய் நல்லூர் மாரங்கியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் கிராம மக்களுக்கு டிரோன் மூலம் பால் பாக்கெட்டுகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.



  • Dec 04, 2024 19:11 IST

    வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் ஸ்டாலின் 

    ரூ .1,383 கோடி மதிப்பிலான வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெறும் விழாவில் 79 புதிய திட்டப்பணிகளும், 29 முடிவுற்ற பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 



  • Dec 04, 2024 19:06 IST

    'எதிர்க் கட்சிகளுக்கு வயிறு எரிகிறது' - ஸ்டாலின் பேச்சு 

    "சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. அவர்கள் அவதூறு பரப்பி மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். தி.மு.க. அரசை மக்கள் பாராட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரிகிறது. மக்கள் நலப்பணிகளை அரசு செய்வதால் அரசியல் செய்ய முடியாமல் சிலர் தவிக்கின்றனர். பொதுமக்கள் தெரிவிக்கும் நியாயமான விமர்சனங்களை கேட்டு சரிசெய்வோம். வெள்ளம் குறைந்ததும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க நான் வந்துவிட்டேன்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Dec 04, 2024 18:41 IST

    நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

    ஃபீஞ்சல் புயலுக்காக ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். துணை முதலமைச்சர் உதயநிதியை  நேரில் சந்திந்து ரூ. 10 லட்சம் காசோலை வழங்கியுள்ளார்.



  • Dec 04, 2024 18:33 IST

    பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

    பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டதால் தடை மீன்வளத்துறை விதித்துள்ளது.  



  • Dec 04, 2024 18:32 IST

    மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை - பெற்றோர் புகார்

    சென்னை ஐஐடியில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவர்களுக்கு மருந்துகள் எதுவும் செலுத்தப்படவில்லை என்று வனவாணி பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    இனிவரும் காலங்களில் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறாமல் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும் பெற்றோரின் அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் வனவாணி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     



  • Dec 04, 2024 18:31 IST

    விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Dec 04, 2024 18:06 IST

     உள்துறை இணையமைச்சருடன் திருமாவளவன் எம்.பி. சந்திப்பு 

    உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராயை சந்தித்து வி.சி.க சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.  ஃபீஞ்சல் புயலால், பெருமழையால், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திட தமிழ்நாடு கோரியுள்ளபடி ரூ. 2475 கோடி நிவாரணநிதி ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாடு வருகைதந்து பார்வையிட வேண்டுமெனவும் கோரிகை வைத்துள்ளார்.

     ஃபீஞ்சல் புயல், மழை, நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க தமிழ்நாடு கோரிய ரூ.2,475 கோடியை ஒதுக்க வேண்டும். பாதிப்பு அதிகம் என்பதை அறிந்திருக்கிறோம்; நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உள்துறை இணை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.



  • Dec 04, 2024 17:43 IST

    ரயிலுக்கு பிராந்திய மொழியில் பெயர்  வைக்க ங்க தமிழ்ச்செல்வன் கோரிக்கை 

    “பாண்டியன், சேரன், சோழன், வைகை, மலைக்கோட்டை என முன்பு பெயர் வைக்கபப்ட்டது போல.. பிராந்திய மொழியில் ரயில்களுக்கு பெயர் வையுங்கள்” என்று மக்களவையில் தமிழில் எளிமையாக பேசியுள்ளார் தி.மு.க எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன். 



  • Dec 04, 2024 17:40 IST

    மகனுக்கு அறிவுரை சொன்ன நடிகர் மன்சூர் அலிகான்

    “ஏன் தப்பு பண்ற? கஞ்சா குடிச்சா அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியாதா?” என்று கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை கூறியுள்ளார். 



  • Dec 04, 2024 17:39 IST

    அமரன் பட மொபைல் எண் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

    "அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வேண்டும். படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்யவும் வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

     



  • Dec 04, 2024 17:08 IST

    பங்களாதேஷில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க-வினர் கைது - அண்ணாமலை கண்டனம்

    பங்களாதேஷில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும்  பா.ஜ.க மூத்த தலைவர்களையும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் பாதிக்கப்பட்ட இந்து மக்களுக்காக குரல் கொடுப்பது ஜனநாயக உரிமை; இதனை முடக்க நினைக்கும் தி.மு.க-வின் போக்கு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Dec 04, 2024 16:48 IST

    அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - ஐகோர்ட் உத்தரவு

    அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நக்கீரன் ஆசிரியர் கோபாலுகு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தினமும் காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.



  • Dec 04, 2024 16:10 IST

    ‘எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு மூடுவிழா நடத்தி விடுவார்’ - டி.டி.வி தினகரன் காட்டம்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க-விற்கு 20226-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின், எடப்பாடி பழனிசாமி மூடுவிழா நடத்திவிடுவார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.



  • Dec 04, 2024 15:37 IST

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் ஃபட்னாவிஸ்

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்; தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.



  • Dec 04, 2024 15:22 IST

    தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதற்கு வரி கொடுக்க வேண்டும்? - சீமான் கேள்வி

    நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “பேரிடர் காலங்களில் தமிழ்கத்திற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. அப்படி எனில் எதற்கு வரி கட்ட வேண்டும்? மத்திய அரசுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? மாநில அரசுகள் தானே கொடுக்கின்றன. தானே, ஓகி என எந்தப் புயலுக்கு தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. தமிழகம் மட்டும் ஏன் நிதி கொடுக்க வேண்டும், தர முடியாது என்று சொன்னால் என்ன செய்வார்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Dec 04, 2024 15:01 IST

    சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் உயர்வு

    சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இன்றி வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 80 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 85 ஆக உயர்ந்துள்ளது. மேலும், டெம்போ வேன்களுக்கு ரூ. 330 எனவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • Dec 04, 2024 14:44 IST

    உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் - இ.பி.எஸ்

    புயல் பாதித்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Dec 04, 2024 14:30 IST

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீ விபத்து

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. பிளக் பாயிண்டில் ஏற்பட்ட தீயை, ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக வந்து அணைத்தனர். மேலும், விபத்தால் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



  • Dec 04, 2024 14:07 IST

    அரையாண்டு தேர்வு குறித்து அறிவிப்பு

    மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.



  • Dec 04, 2024 14:02 IST

    நாகைக்கு உள்ளூர் விடுமுறை

    நாகை மாவட்டத்திற்கு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • Dec 04, 2024 13:47 IST

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    இன்று (டிச 4) முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 04, 2024 13:36 IST

    போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் - தமிழக அரசு

    ஃபீஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 04, 2024 13:19 IST

    மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ. 2000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.



  • Dec 04, 2024 13:02 IST

    சேலம் - ஏற்காடு சாலையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி

    தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட சேலம் - ஏற்காடு பிரதான சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 3 மணி முதல் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 



  • Dec 04, 2024 12:48 IST

    இரட்டை இலை சின்னம் விவகாரம்- ஓபிஎஸ் கருத்தை கேட்க உத்தரவு 

    அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Dec 04, 2024 12:39 IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது

    அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Dec 04, 2024 12:06 IST

    மகாராஷ்டிரா முதல்வராகும் பட்னாவிஸ்

    மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேர்வு செய்வதில் ஒருவாரமாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்தது. தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 



  • Dec 04, 2024 11:20 IST

    ராகுல் காந்தியின் கார் தடுத்து நிறுத்தம்

    உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

    காஸிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.



  • Dec 04, 2024 10:28 IST

    மன்சூர் அலிகானின் மகன் கைது

    உயர் ரக போதைப்பொருளை பயன்படுத்தியதாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Dec 04, 2024 10:26 IST

    சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

    மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



  • Dec 04, 2024 09:49 IST

    தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

    தெலங்கானாவின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திராவின் விஜயவாடல், ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.



  • Dec 04, 2024 09:46 IST

    தொழிற்சங்க அங்கீகார தேர்தல்

    தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை உள்பட 29 இடங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

     



  • Dec 04, 2024 09:11 IST

    எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில்

    விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கனமழை வெள்ளம் மற்றும் பிற உபரி நீரும் சேர்ந்து அகரம்பள்ளிபட்டு பாலத்தின் மேற்பரப்புக்கு மேல் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் விநாடிக்கு 54,000 கன அடி. ஆனால், 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத பேரிடர் காரணமாக பாலம் உடைபட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.



  • Dec 04, 2024 08:21 IST

    கொலை வழக்கில் தீவிர தேடுதல் வேட்டை

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.



  • Dec 04, 2024 08:16 IST

    நந்தி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு

    திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நந்தி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



  • Dec 04, 2024 07:45 IST

    அணைகளின் நீர் திறப்பு

    ஆரணியாறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியே பூண்டி ஏரிக்கு திருப்பிவிடப்பட்ட வெள்ள உபரி நீரின் வருகை விநாடிக்கு 303 கன அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு மொத்தமாக நீர் வரத்து விநாடிக்கு 2,630 கன அடியாக உள்ளது. 3.23 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 1.43 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறப்பு.



  • Dec 04, 2024 07:44 IST

    திருவொற்றியூரில் ரூ.10 கோடி செலவில் அமையவுள்ள நவீன மீன் மார்க்கெட்

    சென்னை திருவொற்றியூரில் ரூ.10 கோடி செலவில் அமையவுள்ள நவீன மீன் மார்க்கெட்.  மார்க்கெட் பகுதியில் கழிப்பறை வசதியுடன் மீன் கடை, மளிகை கடை, காய்கறி கடை என 400க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 



  • Dec 04, 2024 07:43 IST

    தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு

    சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரிநீர் 22,500 கன அடியாக குறைக்கப்பட்டது.



  • Dec 04, 2024 07:41 IST

    கார்த்திகை தீபம் கொடியேற்றம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.



  • Dec 04, 2024 07:39 IST

    கயிறு கட்டி பத்திரமாக மீட்ட NDRF குழுவினர்

    கடலூர் மாவட்டம் அறுபடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு சிக்கி தவித்தவர்களை NDRF குழுவினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.



Tamil News news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: