/tamil-ie/media/media_files/uploads/2021/02/viruthunagar.jpg)
Viruthunagar Fireworks Factory Fire Accident : தமிழகத்தின் தென் பகுதியான விருதுநகர், சிவகாசி ஆகிய மாவட்டங்களில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வப்போது இங்கு விபத்துக்களும் அரங்கேறி வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டையில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் 1.30 மணியளவில், திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆலையில் இருந்த பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடித்துக்கொண்டிருந்த்தால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைய பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் உள்ளே சென்ற வீர்ர்கள், தீக்காயமடைந்து உயிருக்கு போராடிய சிலரை பேரை மீட்டனர்.
தொடர்ந்து 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 22 பேர், சிகிச்சைகாக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராததால், சத்தூர், வெம்பகோட்டை மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கே.கணேசன் தெரிவித்தார். தற்போதுவரை இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெடி மருந்து செலுத்தும் போது வேதிப்பொருள் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.